விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் கிடந்த எலி - கூச்சலிட்ட பயணிகள்

விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் எலி இருந்ததால் பயணிகள் அச்சமடைந்து கூச்சல் இட்டனர். இச்சம்பவத்திற்கு விமான நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
A rat was found alive in the food served on the flight from Norway to Spain!
Published on

நார்வே நாட்டில் இருந்து ஸ்பெயினுக்கு சென்ற ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் எலி இருந்ததால் பயணிகள் அச்சமடைந்து கூச்சல் இட்டனர். இதனால் விமானம் அவசரமாக டென்மார்க்கில் தரையிறக்கப்பட்டது.

பின்னர் பயணிகள் அனைவரும் வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டு ஸ்பெயினுக்கு புறப்பட்டனர்.

இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த விமான நிறுவனம், 'பலத்த பாதுகாப்பையும் மீறி இந்த அரிதான நிகழ்வு நடந்துள்ளது. இனி இதுபோன்று நடக்காது' எனவும் உறுதியளித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com