என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Pebble"
- 'ஜமா' என்பது தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது.
- படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற படத்தை இளவழகன் இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இப்படத்தை கூழாங்கல் திரைப்படத்தை தயாரித்த நிறுவனமான லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் படத்தை தயாரித்துள்ளது.
'ஜமா' என்பது தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது. இந்தக் கதை தெருக்கூத்து கலைஞர்களின் அனுபவங்களை மையமாகக் கொண்டு திருவண்ணாமலையில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது. மிகவும் ஜாலியாக ஆரம்பித்த டீசர் காட்சிகள் போகப் போக மிகவும் சீர்யசாக நகர்கிறது.
நாடகத்தில் பெண் வேடம் அணியும் நபரின் வாழ்க்கையையும் நாடக கலைஞர்களை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் சில இடங்களில் தெருக்கூத்து கலாச்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என். மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜெர்மனியில் நடந்த 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரையிடையப்பட்டது.
- சிறந்த படத்திற்கான 'GOLDEN LYNX' விருதை வென்ற 'கொட்டுக்காளி' திரைப்படம் வென்றுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தாயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் மட்டும் வெளியாகியுள்ளது. இந்த படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில் தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரங்களை குவித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது நடந்து வரும் 53 வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருதை கொட்டுக்காளி திரைப்படம் வென்று அசத்தியுள்ளது.
சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரையிடையப்பட்டது. இது தவிர்த்து தற்போது நடந்து வரும் 53 வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' தேர்வாகியுள்ளது.
இந்நிலையில், போர்ச்சுக்கலில் நடைபெற்ற புதிய படங்கள், இயக்குநர்களுக்கான 20ஆவது FEST Festival விழாவில் சிறந்த படத்திற்கான 'GOLDEN LYNX' விருதை 'கொட்டுக்காளி' திரைப்படம் வென்றுள்ளது.
இந்த தகவலை இப்படத்தின் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிஎஸ் வினோத்ராஜின் அடுத்த படைப்பாக சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படம் விளங்குகிறது
- சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரையிடையப்பட்டது.
திரைப்படங்களுக்கு கிடைக்கும் அதிகப்பட்ச அங்கீகாரம் ரசிகர்களின் கைதட்டலே என்றாலும் சர்வதேச திரைப்பட விழாக்களில் தாங்கள் பிரசவித்த திரைப்படங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் இயக்குனருக்கு பெரும் உத்வேகத்தையும் தங்களின் பாதையில் சரியாவே பயணிக்கிறோம் என்ற உறுதியையும் தருவதாக அமைந்துள்ளது.
அந்த வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் பிஎஸ் வினோத்ராஜின் அடுத்த படைப்பாக சிவகார்த்திகேயன் தாயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படம் விளங்குகிறது. டீசர்மட்டும் வெளியிடப்பட்டுள்ள இந்த படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில் தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரங்களை குவித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது நடந்து வரும் 53 வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருதை கொட்டுக்காளி திரைப்படம் வென்று அசத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கொட்டுக்காளி பட இயக்குனர் பிஎஸ் வினோத்ராஜ், நடிகை அனா பென் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரையிடையப்பட்டது. இதுதவிர்த்து தற்போது நடந்து வரும் 53 வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பெபில் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்தது.
- புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் ப்ளூடூத் காலிங் வசதியுடன் சுழலும் கிரவுன், வளைந்த கிளாஸ் எட்ஜ்கள் உள்ளன.
பெபில் நிறுவனம் இந்தியாவில்- பெபில் ஸ்பெக்ட்ரா ப்ரோ மற்றும் விஷன் என இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய ஸ்பெக்ட்ரா ப்ரோ மாடலில் வட்ட வடிவம் கொண்ட டயல், பிரீமியம் மெட்டாலிக் கேசிங், சுழலும் கிரவுன் உள்ளது. பெபில் விஷன் மாடலில் சதுரங்க வடிவம் கொண்ட டயல், மெட்டல் அலாய் கேசிங், சுழலும் கிரவுன் மற்றும் வளைந்த கிளாஸ் எட்ஜ்கள் உள்ளன.
இரு ஸ்மார்ட்வாட்ச் மாடல்களிலும் இன்பில்ட் ஸ்பீக்கர் மூலம் ப்ளூடூத் காலிங் வசதி, குயிக் கீபேட் ஷாட்கட்கள், ரிசெண்ட் லாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்பெக்ட்ரா ப்ரோ மாடலில் உள்ள வட்ட வடிவம் கொண்ட டயல் 1.43 இன்ச் அளவில் ஆல்வேஸ் ஆன் AMOLED ஸ்கிரீன், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. பெபில் விஷன் மாடலில் 2.05 இன்ச் HD ஸ்கிரீன், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன.
புதிய ஸ்மார்ட்வாட்ச்களில் SpO2 சென்சார், ஹார்ட் ரேட் மாணிட்டர், ஸ்டிரெஸ் மாணிட்டர், ஸ்லீப் மாணிட்டர் என மேம்பட்ட ஹெல்த் மாணிட்டரிங் அம்சங்கள் மற்றும் பெபில் ஜென் மோட் உள்ளது. இத்துடன் மல்டி-ஸ்போர்ட்ஸ் மோட்கள், வாய்ஸ் அசிஸ்டண்ட் சப்போர்ட், அதிகபட்சம் ஏழு நாட்களுக்கு பேட்டரி லைஃப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
பெபில் ஸ்பெக்ட்ரா ப்ரோ மற்றும் விஷன் அம்சங்கள்:
ஸ்பெக்ட்ரா ப்ரோ: 1.43 இன்ச் AMOLED வட்ட வடிவ டிஸ்ப்ளே, 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே
ஸ்பெக்ட்ரா விஷன்: 2.05 இன்ச் HD LCD ஸ்கிரீன், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்
100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள்
ப்ளூடூத் காலிங், கால் ஹிஸ்ட்ரி, குயிக் டயல் பேட்
இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்
ஏழு நாட்களுக்கு பேட்டரி பேக்கப்
100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
வாய்ஸ் அசிஸ்டண்ட் சப்போர்ட்
ஹெல்த் மாணிட்டரிங்
IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட்
ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்
இன்பில்ட் கேம்ஸ், கேலண்டர், ஸ்மார்ட் கால்குலேட்டர்
டார்ச், ஸ்டாப்வாட்ச், ரைஸ் டு வேக், போன் டயல்
மியூசிக், வானிலை, காண்டாக்ட், வாய்ஸ் அசிஸ்டண்ட்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
பெபில் ஸ்பெக்ட்ரா ப்ரோ மாடல் மிட்நைட் கோல்டு, ஈவ்னிங் கிரே, ஜெட் பிளாக் மற்றும் மூன்லைட் கிரே நிறங்களில் கிடைக்கிறது. பெபில் விஷன் மாடல் ஜெட் பிளாக், ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் ஈவ்னிங் புளூ நிறங்களில் கிடைக்கிறது.
புதிய பெபில் ஸ்பெக்ட்ரா ப்ரோ மாடலின் விலை ரூ. 4 ஆயிரத்து 999 என்றும் பெபில் விஷன் மாடலின் விலை ரூ. 3 ஆயிரத்து 599 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு ஸ்மார்ட்வாட்ச் மாடல்களின் விற்பனை பெபில் வலைத்தளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.
- பெபில் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- புது ஸ்மார்ட்வாட்ச் டிசைன் தோற்றத்தில் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா போன்றே காட்சியளிக்கிறது.
பெபில் நிறுவனத்தின் புதிய காஸ்மோஸ் என்கேஜ் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புது ஸ்மார்ட்வாட்ச் தோற்றத்தில் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா போன்றே காட்சியளிக்கிறது. கடந்த வாரம் அறிமுகமான ஃபயர் போல்ட் கிலடியேட்டர் ஸ்மார்ட்வாட்ச் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா தோற்றம் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய பெபில் காஸ்மோஸ் என்கேஜ் ஸ்மார்ட்வாட்ச் 1.95 இன்ச் IPS டிஸ்ப்ளே, ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, 320x385 பிக்சல் ரெசல்யூஷன், 600 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வெளிப்புறத்தில் ரக்கட் தோற்றம், சிலிகான் ஸ்டிராப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் கேசிங் மெட்டல் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் சுழலும் கிரவுன் மற்றும் பட்டன் வழங்கப்பட்டுள்ளது.
ப்ளூடூத் 5.0 வசதி கொண்டிருக்கும் பெபில் காஸ்மோஸ் என்கேஜ் இன்பில்ட் மைக்ரோபோன், ஸ்பீக்கர் போன்ற அம்சங்கள் மூலம் ப்ளூடூத் காலிங் வசதி வழங்குகிறது. இத்துடன் சமீபத்திய அழைப்புகள், ஸ்பீடு டயல் பேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-ஐ முழுமையாக சார்ஜ் செய்தால் ஐந்து நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். இதனை வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஹார்ட் ரேட் சென்சார், SpO2 சென்சார், ஸ்லீப் டிராக்கர் உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஏராளமான ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கிறது. இத்துடன் ஏஐ சார்ந்து இயங்கும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.
புதிய பெபில் காஸ்மோஸ் என்கேஜ் சலமந்தர் ஆரஞ்சு, ஸ்டார்லைட், மிட்நைட் பிளாக் மற்றும் செலஸ்டியல் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 7 ஆயிரத்து 499 ஆகும். எனினும், இதன் விலை ரூ. 3 ஆயிரத்து 999 என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. விற்பனை பெபில் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெற்று வருகிறது.
- பெபில் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மிக குறைந்த விலையில் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
- புதிய பெபில் ஸ்மார்ட்வாட்ச் போட், நாய்ஸ், ஃபயர் போல்ட் நிறுவன மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
பெபில் நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. பெபில் ஃபிராஸ்ட் என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்வாட்ச் ரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கிறது. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆப்பிள் வாட்ச் போன்றே காட்சியளிக்கிறது. இதில் மெட்டாலிக் கேசிங், மல்டி-ரோடேடிங் கிரவுன் பட்டன் உள்ளது.
IP67 தரச் சான்று பெற்று இருக்கும் பெபில் ஃபிராஸ்ட் சதுரங்க வடிவம் கொண்ட டயல், 1.87 இன்ச் டிஸ்ப்ளே, HD ரெசல்யூஷன், 100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன. இத்துடன் இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார், ஸ்லீப் டிராக்கர், செடண்டரி ரிமைண்டர், பல்வேறு ஸ்போர்ட்ஸ் மோட்கள், கலோரி டிராக்கர், பயண விவரங்கள் மற்றும் எத்தனை பயனர் தூரம் நடந்தார் என்ற விவரங்களை டிராக் செய்யும்.
பெபில் ஃபிராஸ்ட் பில்ட்-இன் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் கொண்டிருக்கிறது. இதை கொண்டு ப்ளூடூத் காலிங் வசதி செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் டயல் பேட் மற்றும் சமீபத்திய அழைப்பு விவரங்களை காண்பிக்கிறது. இதில் ஏஐ சார்ந்த வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, வானிலை விவரங்கள், நோட்டிஃபிகேஷன்கள், மியூசிக் பிளேபேக் கண்ட்ரோல், கால்குலேட்டர் என ஏராள அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய சந்தையில் பெபில் ஃபிராஸ்ட் ஸ்மார்ட்வாட்ச் பிளாக், புளூ, கிரே மற்றும் ஆரஞ்சு என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் பெபில் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெறுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்