search icon
என் மலர்tooltip icon

    கணினி

    ப்ளூடூத் காலிங் வசதி கொண்ட பெபில் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்!
    X

    ப்ளூடூத் காலிங் வசதி கொண்ட பெபில் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்!

    • பெபில் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புது ஸ்மார்ட்வாட்ச் டிசைன் தோற்றத்தில் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா போன்றே காட்சியளிக்கிறது.

    பெபில் நிறுவனத்தின் புதிய காஸ்மோஸ் என்கேஜ் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புது ஸ்மார்ட்வாட்ச் தோற்றத்தில் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா போன்றே காட்சியளிக்கிறது. கடந்த வாரம் அறிமுகமான ஃபயர் போல்ட் கிலடியேட்டர் ஸ்மார்ட்வாட்ச் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா தோற்றம் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    புதிய பெபில் காஸ்மோஸ் என்கேஜ் ஸ்மார்ட்வாட்ச் 1.95 இன்ச் IPS டிஸ்ப்ளே, ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, 320x385 பிக்சல் ரெசல்யூஷன், 600 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வெளிப்புறத்தில் ரக்கட் தோற்றம், சிலிகான் ஸ்டிராப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் கேசிங் மெட்டல் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் சுழலும் கிரவுன் மற்றும் பட்டன் வழங்கப்பட்டுள்ளது.

    ப்ளூடூத் 5.0 வசதி கொண்டிருக்கும் பெபில் காஸ்மோஸ் என்கேஜ் இன்பில்ட் மைக்ரோபோன், ஸ்பீக்கர் போன்ற அம்சங்கள் மூலம் ப்ளூடூத் காலிங் வசதி வழங்குகிறது. இத்துடன் சமீபத்திய அழைப்புகள், ஸ்பீடு டயல் பேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-ஐ முழுமையாக சார்ஜ் செய்தால் ஐந்து நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். இதனை வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் ஹார்ட் ரேட் சென்சார், SpO2 சென்சார், ஸ்லீப் டிராக்கர் உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஏராளமான ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கிறது. இத்துடன் ஏஐ சார்ந்து இயங்கும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.

    புதிய பெபில் காஸ்மோஸ் என்கேஜ் சலமந்தர் ஆரஞ்சு, ஸ்டார்லைட், மிட்நைட் பிளாக் மற்றும் செலஸ்டியல் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 7 ஆயிரத்து 499 ஆகும். எனினும், இதன் விலை ரூ. 3 ஆயிரத்து 999 என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. விற்பனை பெபில் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×