இந்தியாவிலேயே முதல் முறை.. இலக்கிய நகரமானது கோழிக்கோடு - இத்தனை சிறப்புகளா?

நவீன மலையாள இலக்கியத்தின் முன்னோடிகள் பலரின் வதிவிடமாக கோழிக்கொடு இருந்து வந்தது.உத்தரப் பிரதேசதில் உள்ள குவாலியர், இசைகளின் நகரம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறை.. இலக்கிய நகரமானது கோழிக்கோடு - இத்தனை சிறப்புகளா?
Published on

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு நகரம் இந்தியாவிலேயே முதல் முறையாக இலக்கியங்களின் நகரம் என்ற UNESCO அந்தஸ்த்தைப் பெற்று அசத்தியுள்ளது. கடந்த வருடமே இதற்க்கான அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது கோழிக்கோட்டை இலக்கியங்களின் நகரமாக யுனெஸ்கோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தெற்கு மலபார் பகுதியில் உள்ள கோழிக்கோடு நகரம் வெளிநாட்டவர் இந்தியாவுக்குள் வருவதற்கான நுழைவாயிலாக இருந்து வந்தது. ஐரோப்பியர்கள், பாரசீகர்கள், சீனர்கள், அரேபியர்கள் ஆகோயோருக்கு நூற்றாண்டு காலங்களுக்கு முன்பிருந்து கோழிக்கோடு இந்தியாவுக்குகான நுழைவாயிலாக திகழ்கிறது.

இந்திய சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடந்து வந்த காலம் தொட்டு கோழிக்கோடு மலையாள இலக்கியகர்த்தாக்கள் புழங்கும் நகரமாக இருந்து வருகிறது. பல்வேறு புத்தக திருவிழாக்கள் அன்றுதொட்டு இன்றுவரை தொடர்ச்சியாக கோழிக்கோட்டில் நடத்தப்பட்டு வருகிறது. நவீன மலையாள இலக்கியத்தின் முன்னோடிகளான வைக்கம் முகமது பஷீர், எஸ்.கே. பொட்டேகாட் உள்ளிட்ட பலரின் வதிவிடமாக கோழிக்கொடு இருந்து வந்தது.

சுமார் 500 நூலகங்களைக் கோழிக்கோடு தன்னகத்தே கொண்டுள்ளது. எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமான எம்.டி.வாசுதேவன் நாயர் கோழிக்கோட்டில் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைந்து நடத்தினார். பல தசாப்தங்களாக கோழிகோட்டில் நடந்து வரும் புத்தக திருவிழாக்கள் அந்நகரை இலக்கிய வளம் நிறைந்ததாக மாற்றியுள்ளது என்றே கூற வேண்டும். இந்த நிலையில்தான் கோழிக்கோடு இலக்கியங்களின் நகரமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கோழிக்கோட்டில் ஜூன் 23 இலக்கிய நகரத்தின் நாள் வருடந்தோறும் கொண்டாடப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதுதவிர்த்து நாட்டுப்புற கலைகள், அலங்காரம், சினிமா, ஊடக கலை, இசை உள்ளிட்ட பிரிவுகளில் உலகம் முழுவதும் உள்ள 350 நகரங்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்துள்ளது. மத்தியப் பிரதேசதில் உள்ள குவாலியர், இசைகளின் நகரம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடமே இந்த 350 நகரங்களின் பட்டியல் வெளியான நிலையில் தற்போது அந்நகரங்களின் பிரதிநிதிகள் வரும் ஜூலை 1-5 வரை  யுனெஸ்கோ சார்பில் போர்ச்சுகளில்  நடக்க உள்ள கருதத்தரங்களில் கலந்து கொள்ள உள்ளனர். UNESCO என்பது ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் ஆகும். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com