search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Sridevi"

  • 1996-ம் ஆண்டு ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
  • இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி என்ற இரு மகள்கள் உள்ளனர்.

  'கந்தன் கருணை' என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி அதன்பின்னர் 'மூன்று முடிச்சு' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக வலம் வந்தார். மூன்று தலைமுறை நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த இவர் பல மொழி படங்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து புகழின் உச்சத்திற்கு சென்றார்.


  நடிகை ஸ்ரீதேவி கடந்த 1996-ம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி என்ற இரு மகள்கள் உள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு நடிகை ஸ்ரீதேவி துபாயில் உள்ள ஒரு ஓட்டலின் குளியலறையில் இறந்த நிலையில் கிடந்தார். இவரது மரணம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தன. அதன்பின்னர் பல தகவல்களுக்கு பிறகு அது ஓய்ந்தது.


  இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீதேவியின் மரணம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள நேர்காணலில், "ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல. திடீர் விபத்தால் நிகழ்ந்த மரணம். துபாயில் வைத்து உண்மை கண்டறியும் சோதனை உட்பட அனைத்து விசாரணைகளும் எனக்கு நடந்தன. இறப்பில் எந்தக் குற்றமும் இல்லை என்றும் அது தற்செயலாக நடந்த விபத்து என்றும் போலீசார் உறுதிப்படுத்தினர்.


  ஸ்ரீதேவி திரையில் நன்றாக தெரிய வேண்டும் என்பதற்காக அடிக்கடி பட்டினி இருப்பார். எங்களுக்கு திருமணம் ஆனதிலிருந்து சட்டென மயக்கமாகும் நிலைக்கு இரண்டு முறை சென்றிருக்கிறார். அப்போது தான் மருத்துவர் அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருப்பதாக கூறினார். திருமணத்துக்கு முன்னதாக, இதேபோல் டயட்டில் இருந்ததால் குளியலறையில் விழுந்து பல் உடைந்து போனதாக ஸ்ரீதேவி இறந்தபின் நடிகர் நாகார்ஜுனா என்னிடம் தெரிவித்தார்'' என்று போனி கபூர் கூறினார்.

  • திவ்ய பிரபந்தங்களை பாராயணம் செய்தனர்.
  • பெரியஜீயர், சின்னஜீயர் சுவாமிகள் பல்வேறு பாசுரங்களை பாடினர்.

  திருப்பதி:

  பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று மதியம் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணிவரை கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீேதவி, பூதேவி, மலையப்பசாமிக்கு விஸ்வக்சேனாராதனம், புண்யாஹவாசனம், தூப தீப நெய்வேத்தியம், ராஜோபசாரம் நடந்தது.

  முதலில் மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தேன், இளநீர் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது.

  திருமஞ்சனத்தின் போது வேத பண்டிதர்கள் வேதபாராயணங்கள், உபநிடதங்கள், தச சாந்தி மந்திரங்கள், புருஷுக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், நிலசூக்தம், விஷ்ணுசூக்தம் எனப் பஞ்சசூக்த மந்திரங்களை ஓதினர். மேலும் திவ்யப் பிரபந்தங்களை பாராயணம் செய்தனர். பெரியஜீயர், சின்னஜீயர் சுவாமிகள் பல்வேறு பாசுரங்களை பாடினர்.

  உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு பல வண்ணக் கற்களால் தயார் செய்யப்பட்ட கண்ணாடி மாலைகள், ஆப்பிரிக்கட்டு மாலைகள், வெட்டி வேர் மாலைகள், குருவெறு மாலைகள், வண்ணமயமான ரோஜா மாலைகள், மஞ்சள் ரோஜா மாலைகள், பலவகையான உலர் பழங்களால் தயாரிக்கப்பட்ட மாலைகள், வெண்முத்து மாலைகள், கிரீடங்கள், துளசி மாலைகள் ஆகியவற்றை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.

  தேவஸ்தான தோட்டத்துறை துணை இயக்குனர் சீனிவாசலு தலைமையில் அனைத்து அலங்காரமும் செய்யப்பட்டது. அலங்காரத்துக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து மாலைகளை தமிழகத்தில் திருப்பூரை சேர்ந்த ராஜேந்தர் காணிக்கையாக வழங்கினார். மேலும் திருமஞ்சனம் நடத்தப்பட்ட ரெங்கநாயக்கர் மண்டபத்தில் பிரத்தியேக அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அந்த மண்டபல அலங்காரத்துக்காக சம்பிரதாய பாரம்பரிய மலர்கள், அலங்கார கொய் மலர்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த அலங்கார கணிக்கையை ஐதராபாத்தை சேர்ந்த பக்தர்களான ஸ்ரீஹரி, ஸ்ரீதர், சீனிவாஸ் ஆகியோர் ஏற்றனர்.

  • மலையப்பசாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது.
  • கிரீடங்கள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.

  திருப்பதி:

  பிரம்மோற்சவ விழா வாகன சேவை முடிந்ததும் நேற்று மதியம் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது.

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. காலை வாகனச் சேவை முடிந்ததும் ரெங்கநாயக்கர் மண்டபத்தில் நேற்று மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது.

  அதன் பிறகு ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு பவித்ர மாலைகள், பச்சை மாலைகள், மஞ்சள் பட்டு நூல் மாலைகள், தாமரை விதைகள், துளசி விதை மாலைகள், தங்க திராட்சை மாலைகள், பாதாம் மாலைகள், நந்திவர்தனம், ரோஜா இதழ்கள், பல வண்ண ரோஜா இதழ்களாலான மாலைகள், கிரீடங்கள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.

  திருமஞ்சனத்தின்போது வேதபாராயணங்கள், உபநிடத மந்திரங்கள், தச சாந்தி மந்திரங்கள், புருஷுக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், நிலசூக்தம், விஷ்ணுசூக்தம் போன்ற பஞ்சசூக்த மந்திரங்கள், திவ்யப் பிரபந்தம் பாராயணம் செய்யப்பட்டது. முன்னதாக விஸ்வசேனாராதனம், புண்யாஹவச்சனம், தூப தீப நைவேத்தியம் சமர்ப்பித்து, ராஜோபச்சாரம் நடந்தது.

  திருமஞ்சனத்தில் திருமலை பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள் பங்கேற்றனர். தேவஸ்தான தோட்டத்துறை துணை இயக்குனர் சீனிவாசலு தலைமையில் உற்சவர்களுக்கு பிரத்யேக அலங்காரம் செய்யப்பட்டது. சாமிக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளை தமிழகத்தில் திருப்பூரை சேர்ந்த பக்தர் ராஜேந்தர் காணிக்கையாக வழங்கினார்.

  • மலையப்பசாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது.
  • கிரீடங்கள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.

  திருப்பதி:

  பிரம்மோற்சவ விழா வாகன சேவை முடிந்ததும் நேற்று மதியம் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது.

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. காலை வாகனச் சேவை முடிந்ததும் ரெங்கநாயக்கர் மண்டபத்தில் நேற்று மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது.

  அதன் பிறகு ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு பவித்ர மாலைகள், பச்சை மாலைகள், மஞ்சள் பட்டு நூல் மாலைகள், தாமரை விதைகள், துளசி விதை மாலைகள், தங்க திராட்சை மாலைகள், பாதாம் மாலைகள், நந்திவர்தனம், ரோஜா இதழ்கள், பல வண்ண ரோஜா இதழ்களாலான மாலைகள், கிரீடங்கள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.

  திருமஞ்சனத்தின்போது வேதபாராயணங்கள், உபநிடத மந்திரங்கள், தச சாந்தி மந்திரங்கள், புருஷுக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், நிலசூக்தம், விஷ்ணுசூக்தம் போன்ற பஞ்சசூக்த மந்திரங்கள், திவ்யப் பிரபந்தம் பாராயணம் செய்யப்பட்டது. முன்னதாக விஸ்வ சேனாராதனம், புண்யாஹவச்சனம், தூப தீப நைவேத்தியம் சமர்ப்பித்து, ராஜோபச்சாரம் நடந்தது.

  திருமஞ்சனத்தில் திருமலை பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள் பங்கேற்றனர். தேவஸ்தான தோட்டத்துறை துணை இயக்குனர் சீனிவாசலு தலைமையில் உற்சவர்களுக்கு பிரத்யேக அலங்காரம் செய்யப்பட்டது. சாமிக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளை தமிழகத்தில் திருப்பூரை சேர்ந்த பக்தர் ராஜேந்தர் காணிக்கையாக வழங்கினார்.

  • வெண்ணைத்தாழி வைபவம் இங்கு மிகவும் சிறப்பு
  • திருபவித்ரோத்ஸவம் 10 நாட்கள் நடைபெறும்

  ஸ்ரீயப் பதியான ஸ்ரீமன் நாராயணன் அர்ச்சகை வடிவில் கோலங்கொண்டிருக்கும் திருத்தலங்கள் உலகெங்கிலும் இருந்தாலும், மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற முப்பெருமைகளால் அமையப் பெற்ற திருத்தலம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி திருத்தலம் ஒன்றே என்றால் அது மிகையல்ல.

  மூலவர் பரவாசுதேவப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்கரம் கதையுடன் தங்க கவசம் பூண்டு கம்பீரமாய்க் காட்சி தருகின்றார். ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாய் அருள் வழங்கும் காட்சியைக் காண கண்கோடி வேண்டும்.

  செண்பகவனத்து முனிவர்களின் வேண்டுகோளின் படி பிருந்தாவனத்தில் அன்று கண்ணன் செய்து காட்டிய லீலைகளை முனிவர்களுக்கும் காட்டி அருளினான். பரவாசு தேவனாக முதல் சேவை தொடங்கி 323-வது சேவையாக ஸ்ரீவித்யாராஜ கோபாலனாக சேவை சாதித்தருளினான். இதனைக் கண்ட முனிவர்கள் இத்திருக்கோலத்துடனே என்றும் காட்சி தந்தருளப் பிரார்த்தித்தனர்.

  உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள் அவனையல்லால் நும்இச்சை சொல்லி நும்தோள் குலைக்கப்படும் அன்னை

  மன்னப்படு மறைவாணனை வண்துவராபதி மன்னனை ஏத்துமின் ஏத்தலும் தொழுதாடுமே என்று நம்மாழ்வாரால் போற்றப்பட்ட ஸ்ரீராஜகோபாலனை மன்னையம்பதிக்கு எழுந்தருளச் செய்த கோபில, கோப்பிரளய மகரிஷிகளைப் போற்றி ஸ்ரீவித்யா ராஜகோபாலனின் அழகை இனிக் காண்போம்.

  மாடு மேய்க்கும் கண்ணனாக தான் மேய்க்கும் பசுவிடம் சிறிது சாய்ந்து கொண்டு ஒற்றை ஆடையுடன், ஒரு காதில் ஓலையும், ஒரு காதில் குண்டலமும் விளங்க ஒரு கையின் நுனியில் மும்மடிப்புள்ள செண்டாயுதமும் ஏந்தி இடது திருக்கரத்தை சத்யபாமாவில் தோளில் பதியச்செய்த வண்ணம், திருமுடியில் சுற்றிய திருப்பரி வட்டமும் இடையில் ஒற்றை ஆடையுடன் அழகுக்காட்சி நல்கும் நம் கோபாலன் மந்தகாசம் தவழும் செம்பவளச் செவ்வாயுடன், அருள் வெள்ளம் பாய்கின்ற திருமார்பின் அழகும், அடியவர்களை தன் அழகுப் புருவங்களால் ஈர்க்கும் ஆற்றலும் மிக்க இறைவனாக விளங்கக் காண்கிறோம்.

  ஆலயத்தின் தென்பகுதியில் ஹேமாப்ஜ நாயகி என்றும், செண்பகலெஷ்மி என்றும் செங்கமலத்தாயார் என்றும் போற்றப்படும் எழில் கொஞ்சும் தாயார் சன்னதி அமைந்துள்ளது.

  தாமரை மலரில் வீற்றிருக்கும் தாயார் தன் இரு பக்கங்களிலும் யானைகளுடன் கெஜலெட்சுமியாக அருட்காட்சி நல்குகிறாள்.

  இவை தவிர ஸ்ரீ ராமர் சன்னதியும், ஆழ்வாராதிகளுக்கென தனித்தனி சன்னதிகளும், ஆச்சார்யார்களைப் போற்றும் வண்ணம் அவர்களுக்கென தனி சன்னதிகளும் கொண்டு அழகுற விளங்குகிறது இவ்வாலயம்.

  இந்த கோவிலில் பங்குனி மாதம் நடைபெறும் 18 நாள் பிரமோற்சவமும், தொடர்ந்து 12 நாள் நடை பெறும் விடையாற்றி விழாவும் பிரசித்தி பெற்றது. கோகுலத்தில் குழந்தை கண்ணன் ஆயர் வீடுகளில் புகுந்து வெண்ணை திருடி தின்னும் வைபவத்தை சித்தரிக்கும் வகையில் வெண்ணைத்தாழி வைபவம் நடை பெறுகிறது.

  திருவிழா அன்று ராஜகோபாலசாமி தவழும் கண்ணன் வடிவு அலங்காரத்தில் கையில் வெள்ளி குடத்துடன் பல்லக்கில் கோவிலில் இருந்து வீதி உலா காட்சியாக புறப்படுவார். வீதிகள் தோறும் பெண்களும், பக்தர்களும் கண்ணனுக்கு பிரியமான வெண்ணை மற்றும் விசிறி கொடுத்து வணங்குவார்கள்.

  மதியம் வெண்ணைத்தாழி மண்டபத்தில் செட்டி அலங் காரத்திலும், குதிரை வாகனத் திலும் ராஜகோபாலசாமி பக்தர்களுக்கு தரிசனம் தருவார். காலையில் தொடங்கிய விழா இரவு வரை நடைபெறும் இந்த விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

  பகவான் கண்ணன் கோப்பிரளயம் முனிவர்களுக்கு 32 திருக்கோலங்களில் தரிசனம் கொடுத்துள்ளார். ஆனால் மூலக் கிரந்தத்தில் 30 அவதாரங்களை மட்டுமே குறிப்புகள் உள்ளது. ஒருவேளை விரிவுக்கு அன்றி 30 மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கலாம்.

  30 திருக்கோலங்கள்-

  1. அவதார வைபவம்

  2. பூதனா சம்ஹாரம்

  3. யசோதனையின் மடியில் இருந்து பால் பருகியது.

  4. சாயக் கொண்டையுடன் மாயன் தவழ்ந்து வந்தது.

  5. நவநீத நாட்டியம்

  6. ஆநிரை மைத்தல்

  7. வெண்ணைக் களவு

  8. புன்னை மரக்கண்ணன்

  9. புல்லாங்குழல் இசைத்ததும் பசுக்கள் பால் சுரந்ததும்.

  10. உரலிடை யாப்புண்டது.

  11. மாடு மேய்க்கையில் கோலை ககீழே ஊன்றி அதன் மேல் திருமுடி வைத்து கட்டியது.

  12. கலமும் கயிறும் கொண்டு பால் கறந்த அழகு.

  13. கபித்த& வத்ஸாஸ-ரர்களின் வதம்.

  14. காளிங்கநர்த்தனம்

  15. பெண்களின் மஞ்சள் பூச்சை தம் திருமேனியில் காட்டி அருளின பெண்ணாளன் பெருமை.

  16. பொன்னாழியும், புரிசங்கமும் தண்டும் வில்லும் சார்த்தி சேவை தந்தருளியது.

  17. குறவை கூத்து

  18. இடையருக்கு தம் அவதாரங்களை அப்படியேகாட்டி ஆட்கொண்டது.

  19. இடையர்களுடன் அமுதுண்ட காட்சி.

  20. கோமர்த்தனம் எடுத்து கல்மாரி காத்தது.

  21. பிரம்மனால் அபகரிக்கப்பட்ட நிலை.

  22. கோபிநாதனின் கோபிகா லீலை காட்சி.

  23. பாரிஜாதா பஹரணம்.

  24. ஸ்ரீ கிருஷ்ண துலாபாரம்.

  25. குவலயா பீட வதம்.

  26. முஷ்டிக காணுர வதம்.

  27. ருக்மணி சத்யபாமாவுடன் பள்ளியறை காட்சி.

  28. வாதுதீர்க்க தூது சென்ற சேவை.

  29. பார்த்தசாரதியாக கீதை உபதேசம் செய்தது.

  30. ருக்மணி சத்யபாமாவுடன் ஒரு வண்டு போல் எழுந்தருளி 3 வளைவு கொண்ட சாட்டை கயிறுடன் கூடிய பொற்கோலை ஏந்தியும், விக்கிரக வடிவத்தில் சேவை தந்து அருளுவது.

  இக்கோவிலில் ஆடி மாதத்தில் பூர நட்சத்திரத்தில் திருத்தேருடன் தாயார் உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உயர் அரங்கர்க்கு கன்னி உகந்தளித்த ஆண்டாளாகவே செங்கமலத் தாயார் அருள்பாலிப்பதாக ஐதீகம். 10 தினங்கள் வெவ்வேறு வாகனங்களில் தாயார் புறப்பட்டு ஆலயத்தினுள் உள்ள தாயார் பிரகாரத்தில் உலாவரும் காட்சி மிக உன்னதமாக இருக்கும்.

  நிறைவு நாளில் திருத்தேரில் தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தாயாருக்கென தனித்தேர் வேறு எங்கும் கிடையாது என்பது இதன் தனிச்சிறப்பு. ஆடி 18-ம் நாள் ஆடிப்பெருக்கு நாளன்று கோபாலன் பாமணி ஆற்றுக்குச் சென்று தீர்த்தவாரி கண்டருளி பின்னர் திருப்பாற்கடலின் தென்கரையில் அமைந்துள்ள ஸ்ரீலெட்சுமி நாராயணப் பெருமாள் சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.

  ஆவணி மாதத்தில் `திருபவித்ரோத்ஸவம்' என்று போற்றப்படும் விசேஷமான உற்சவம் 10 தினங்கள் நடைபெறும். இந்நாட்களில் ஆண்டு முழுவதும் நடைபெற்று வரும் பூஜைகளில் குறைபாடுகள் இ ருப்பின் அவற்றை நிவர்த்தி செய்வதற்காக 365 வகையிலான பூஜைகள் நடைபெறும். இவ்விழா நாட்களில் யாகசாலையில் பல்வேறு ஹோமங்களைச் செய்து பெருமாளுக்கு பூஜைகள் செய்வது மிகச்சிறப்பான ஒன்றாகும்.

  இந்நாட்களில் பெருமாள் திருப்பவித்ரமாலைகளை அணிந்து காட்சி தருவார். இவ்விழாவின் இறுதி நாளில் தீர்த்தவாரி ஹரித்ராநதியில் நடைபெற்று விழா நிறைவுறும். மேலும் இம்மாதத்தில் ஸ்ரீஜெயந்தி எனப்படும் கண்ணன் பிறப்பு வைபவம் சிறப்பாக உரியடித்திருவிழாவுடன் நடைபெறுவது மிகச்சிறப்பு அம்சமாகும்.

  • மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.
  • ஜான்வி கபூர் தற்போது அரசியல் பிரமுகரின் பேரனை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வலம் வருகின்றன.

  தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறந்த ஸ்ரீதேவி, இந்தி பட உலகிலும் வெற்றி கொடி நாட்டினார். இந்தி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்று இரண்டு மகள்கள். சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி மரணம் அடைந்தார்.

   

  ஜான்வி கபூர்

  தற்போது ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழ் படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டுகிறார். இவரது தந்தை போனிகபூர் தமிழில் அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

   

  இந்நிலையில் ஜான்வி கபூர் மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி சுஷில்குமார் ஷிண்டேயின் பேரனும், நடிகருமான ஷிகர் பஹாரியாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்துள்ளன. இருவரும் ஜோடியாக மாலத்தீவுக்கும் சென்று வந்துள்ளனர். காதலை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகிறது. இது தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

  நடிகை ஸ்ரீதேவியின் முதல் மகள் ஜான்வி கபூர் கடந்த ஆண்டு சினிமாவில் அறிமுகமான நிலையில், இரண்டாவது மகள் குஷி கபூர் விரைவில் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக ஜான்வி தெரிவித்துள்ளார். #KhushiKapoor
  நடிகை ஸ்ரீதேவி தனது மூத்த மகள் ஜான்வியை ‘தடக்’ என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். ஆனால் படம் திரைக்கு வரும் முன்பே துபாயில் குளியல் அறை தொட்டியில் மூழ்கி அவர் இறந்து போனார்.

  தடக் படத்தில் ஜான்வி நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. மேலும் புதிய படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார்.

  இந்த நிலையில் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி விரைவில் இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக தயாராகி வருகிறார்.  இதுகுறித்து ஜான்வி கபூர் கூறியதாவது:-

  “குஷி நடிக்க வருவதில் தீவிரமாக இருக்கிறார். இதற்காக நியூயார்க்கில் நடிப்பு பயிற்சி எடுத்து வந்துள்ளார். குஷியை சினிமாவில் அறிமுகப்படுத்துவதில் எனது தந்தை போனிகபூரும் ஆர்வமாக இருக்கிறார். பிரபல இந்தி இயக்குனர் கரண் ஜோகர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக வேண்டும் என்று குஷி ஆர்வமாக இருக்கிறார்.

  சினிமா துறையில் இருக்கும் பிரபலங்களின் வாரிசுகளான அலியாபட், சித்தார்த் மல்கோத்ரா, வருன் தவான் உள்ளிட்ட பலரை கரண் ஜோகர் தான் அறிமுகப்படுத்தினார். அவர் மூலம் சினிமாவுக்கு வந்த எல்லோருமே பெரிய இடத்துக்கு போய் இருக்கிறார்கள்.எனவே தான் குஷியும் கரண்ஜோகர் படத்தில் நடிக்க காத்திருக்கிறார்.”

  இவ்வாறு ஜான்வி கூறினார். #KhushiKapoor #JhanviKapoor

  ரவி உதயவார் இயக்கத்தில் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற `மாம்' படத்தின் சீன ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது. #MOM #Sridevi
  இந்திய சினிமாவின் முக்கிய நடிகைகளுள் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அவரது 300-வது திரைப்படமான `மாம்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் அவருக்கு கிடைத்தது.

  இந்த படத்தில் தனது மகளுக்கு இழைக்கப்படும் கொடுமையை எதிர்த்து பழிவாங்கும் தாயாக ஸ்ரீதேவி நடித்திருப்பார். இந்தியா மட்டுமின்றி, போலந்து, செக் குடியரசு, ரஷ்யா, அரபு நாடுகள், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 39 நாடுகளில் இந்த படம் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது சீனாவிலும் வெளியாக இருக்கிறது. வருகிற மார்ச் 22-ஆம் தேதி `மாம்' படம் சீனாவில் வெளியாக இருக்கிறது.   இது குறித்து தயாரிப்பாளரும், ஸ்ரீதேவியின் கனவருமான போனி கபூர் கூறும்போது, "மாம் படம் ரிலீஸான எல்லா நாடுகளிலும், தாய்மார்களுக்கும், பார்வையாளர்களுக்கும் படத்துடன் ஒரு பிணைப்பை உண்டாக்கியது. இது தான் ஸ்ரீதேவியின் கடைசி படம் என்பதால், இந்த அழகிய கதையை முடிந்தவரை அதிகமான மக்களுக்கு கொண்டு செல்ல, மற்றொரு மிகப்பெரிய நாட்டிற்கும் எடுத்து செல்வதில் பெருமைப்படுகிறோம்" என்கிறார்.

  ரவி உதயவார் இயக்கிய இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது ரஹ்மானுக்கு கிடைத்தது. #MOM #Sridevi

  மறைந்த ஸ்ரீதேவியின் நினைவு நாளையொட்டி, சென்னையில் வைத்து ஸ்ரீதேவிக்கு இன்று திதி அளிக்கப்பட்டது. இதில் நடிகர் அஜித், ஷாலினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #SriDevi #AjithKumar #Shalini
  கடந்த ஆண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீரென்று மரணம் அடைந்தார். அவரது நினைவு நாள் வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

  இந்த நிலையில், சென்னை சி.ஐ.டி. நகரில் ஸ்ரீதேவிக்கு திதி வழங்கும் நிகழ்வு நடந்தது. இதில் போனி கபூர், ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர், அனில் கபூர், ஸ்ரீதேவியின் தங்கை மகேஷ்வரி உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்வில் நடிகர் அஜித் முதலிலேயே வந்து கலந்து கொள்ள, ஷாலினி அவரது சகோதரர் ரிச்சர்டு ரிஷியுடன் ஸ்ரீதேவி திதி நிகழ்வில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.  அஜித்தின் அடுத்த படமான தல 59, தல 60 ஆகிய படங்களை போனி கபூர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #SriDevi #AjithKumar #Shalini  பிரிக்ஸ் வர்த்தக அமைப்பின் தலைமை தகுதிக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அவரது மறைவுக்கு பின்னர் வழங்கப்பட்டது. #Sridevi #BRICS
  புதுடெல்லி:

  இந்திய சினிமாவில் தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர் பிரபல நடிகை ஸ்ரீதேவி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி துபாயில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இது திரையுலகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஸ்ரீதேவியின் உடல் பிப்ரவரி 28-ம் தேதி இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டது.

  இதையடுத்து, ஸ்ரீதேவி ‘மாம்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவர் மறைந்தததற்கு பின் வழங்கப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் சாதித்த ஸ்ரீதேவி இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.


  இந்நிலையில், பிரிக்ஸ் வர்த்தக அமைப்பின் தலைமை தகுதிக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு வழங்கப்பட்டது. அவருக்கு பதிலாக ஸ்ரீதேவி கணவர் போனி கபூரின் சகோதரி ரீனா மார்வா விருதினை பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் மத்திய இணை மந்திரி ஜிதேந்திரா சிங் மற்றும் பிரிக்ஸ் அமைப்பின் சர்வதேச கூட்டணி தலைவர் லாரிசா செலண்டோசாவா கலந்து கொண்டனர். #Sridevi #BRICS