search icon
என் மலர்tooltip icon

    காமன்வெல்த்-2022

    காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் இந்தியாவுக்கு 6வது தங்கம்- பாகிஸ்தான் வீரரை வீழ்த்தி இந்திய வீரர் நவீன் அபாரம்
    X

    நவீன்

    காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் இந்தியாவுக்கு 6வது தங்கம்- பாகிஸ்தான் வீரரை வீழ்த்தி இந்திய வீரர் நவீன் அபாரம்

    • காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 12 தங்கம் வென்றுள்ளது.
    • பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 5வது இடத்தில் உள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 74 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் நவீன், பாகிஸ்தானின் முகமது ஷெரீப் தாஹிரை எதிர்கொண்டார். இதில் 9-0 என்ற கணக்கில் முகமது ஷெரீப் தாஹிரை வீழ்த்திய நவீன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

    இதன் மூலம் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு 6-வது தங்கப்பதக்கம் கிடைத்தது. பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், தீபக் புனியா, வினேஷ் போகட் மற்றும் ரவி குமார் தஹியா ஆகியோர் மல்யுத்தத்தில் ஏற்கனவே தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். காமல்வெல்த் போட்டியில் இந்தியா 12 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம் என 34 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

    Next Story
    ×