என் மலர்
நீங்கள் தேடியது "Jagdeep Dhankhar"
- துணைத் ஜனாதிபதி ஏன் ஒரு வார்த்தை கூட பேச முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்?
- இப்போது பீகார், மேற்கு வங்கம் மற்றும் அசாமில் அதையே செய்கிறார்கள்.
ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவால் தனது துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த நிலையில் அந்த பதவிக்கு அடுத்த மாதம் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.
இந்நிலையில் டெல்லியில் பேசிய மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "நாம் ஏன் ஒரு புதிய துணைத் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். நேற்று நான் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, பழைய துணைத் ஜனாதிபதி எங்கே போனார் என்று கேட்டேன்?
துணைத் ஜனாதிபதி ராஜினாமா செய்த நாளில், வேணுகோபால் ஜி என்னை அழைத்து, துணைத் ஜனாதிபதி பணியை விட்டு போய்விட்டார் என்று கூறினார். இதற்குப் பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது.
சிலருக்குத் தெரியும், சிலருக்குத் தெரியாது. ஆனால் அவர் மறைந்திருப்பதாக ஒரு கதையும் இருக்கிறது.
இந்திய துணைத் ஜனாதிபதி ஏன் ஒரு வார்த்தை கூட பேச முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்?
ராஜ்யசபாவில் கர்ஜித்தவர் திடீரென்று முற்றிலும் அமைதியாகிவிட்டார்" என்று தெரிவித்தார்.
மேலும், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து பதிலளித்த ராகுல், "பீகாரில் நெருப்பு பற்றி எரிகிறது.
இந்த நெருப்பைப் பார்க்க அனைத்து தலைவர்களையும் நான் அழைக்கிறேன். அதைத் தடுக்க முடியாது. பீகாரில் நான்கு வயது குழந்தை 'வாக்கு திருடன், வாக்கு திருடன்' என்று கத்துகிறது.
அவர்கள் மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்களைத் திருடினர். இப்போது பீகார், மேற்கு வங்கம் மற்றும் அசாமில் அதையே செய்கிறார்கள்" என்று கூறினார்.
- அவரது பதவிக்காலம் 2027 இல் முடிவடைய இருந்தது.
- வேறு ஏதோ காரணத்தால் ஏற்பட்டது என்று காங்கிரஸ் கூறுகிறது.
உடல்நலக்குறைவை காரணம் காட்டி திங்கள்கிழமை இரவு துணை ஜனாதிபதி பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் பதவியை ராஜினாமா செய்வதற்கு சற்று முன்பு ஜக்தீப் தன்கர் ராஷ்டிரபதி பவனுக்கு வருகை தந்ததாக கூறப்படுகிறது.
திங்கள்கிழமை மாலையில் தன்கர் ராஷ்டிரபதி பவனில் வைத்து ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
அரை மணி நேரம் கழித்து, துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக தன்கர் அறிவித்தார்.
74 வயதான தன்கர், ஆகஸ்ட் 2022 இல் துணை ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அவரது பதவிக்காலம் 2027 இல் முடிவடைய இருந்தது.
மாநிலங்களவை தலைவராகவும் தன்கர், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே தனது ராஜினாமாவை அறிவித்தது விவாதத்தை தூண்டியது.
இந்த எதிர்பாராத ராஜினாமா உடல்நலக் காரணங்களால் அல்ல, வேறு ஏதோ காரணத்தால் ஏற்பட்டது என்று காங்கிரஸ் கூறுகிறது.
இதற்கிடையில், தன்கர் ராஜினாமா செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு எடுத்த ஒரு குறிப்பிடத்தக்க நிலைப்பாடு காரணமாக அவரது ராஜினாமா நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
திங்களன்று, நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பதவி நீக்க நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் முன்மொழிவை தன்கர் ஏற்றுக்கொண்டார். இது குறித்து மத்திய அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை.
இதற்கிடையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உட்பட அனைவரிடமிருந்தும் கையொப்பங்களை சேகரித்து நீதிபதி வர்மாவை நீக்குவதற்கான தீர்மானத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு தயாராகி வந்தது. தங்கரின் அவசர நடவடிக்கையே மத்திய அரசின் அதிருப்திக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
- மொத்தம் 427 எம்.பி.க்களின் ஆதரவு பா.ஜ.க. கூட்டணி நிறுத்தும் வேட்பாளருக்கு கிடைக்கும்.
- ஜனாதிபதி தேர்தலுக்கும், துணை ஜனாதிபதி தேர்தலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது.
புதுடெல்லி:
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நேற்று முன்தினம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து அவரது ராஜினாமா ஏற்கப்பட்டது.
ஜனாதிபதியை முன் அனுமதி பெறாமல் திடீரென சந்தித்து அவர் பதவி விலகியது நாடு முழுவதும் அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை உருவாக்கி உள்ளது. அவரது பதவி விலகலுக்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய சொல்லி நீக்கப்பட்டார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் உண்மை நிலவரத்தை வெளியிட வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
ஆனால் உடல்நலக்குறைவு காரணமாகவே பதவி விலகி இருப்பதாக ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார். என்றாலும் துணை ஜனாதிபதி ராஜினாமா விவகாரத்தில் தொடர்ந்து சர்ச்சை நீடித்தபடியே உள்ளது.
இதற்கிடையே புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. ஜெகதீப் தன்கர் கொடுத்த ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அரசுக்கு அனுப்பி வைப்பார். இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
இந்த சூழ்நிலையில் துணை ஜனாதிபதி பதவி காலியானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். இதைத்தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கும்.
துணை ஜனாதிபதி பதவியில் இருப்பவர் உயிரிழப்பு, ராஜினாமா அல்லது பதவி நீக்கம் உள்ளிட்ட காரணங்களால் முழு பதவிக்காலமான 5 ஆண்டுகளுக்குள் பதவி இடம் காலியாக நேரிட்டால், கூடிய விரைவில் அந்தக் காலி இடத்தை நிரப்புவதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டப் பிரிவு 68 (2)-ல் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த விதியின்படி அடுத்த புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடவடிக்கைகள் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.
துணை ஜனாதிபதி தேர்தலில் டெல்லி பாராளுமன்ற மக்களவை மற்றும் மேல்சபை ஆகிய இரு சபைகளின் எம்.பி.க்கள் வாக்களிக்க தகுதி உடையவர்கள். இரு சபைகளின் நியமன எம்.பி.க்களும் வாக்களிக்க முடியும்.
543 எம்.பி.க்களை கொண்ட பாராளுமன்றத்தில் ஒரு எம்.பி. இடம் காலியாக உள்ளது. அதுபோல 245 உறுப்பினர்களை கொண்ட மேல்சபையில் 5 இடங்கள் காலியாக உள்ளன. இதனால் இரு அவைகளையும் சேர்த்து எம்.பி.க்களின் பலம் 782 ஆக உள்ளது.
இதில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் நபர் வெற்றி பெற தகுதி உள்ள அனைத்து எம்.பி.க்களும் வாக்களிக்கும் நிலையில் குறைந்த பட்சம் 392 வாக்குகளைப் பெற வேண்டும். பாராளுமன்ற மக்களவையில் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 542 எம்.பி.க்களில் 293 பேர் உள்ளனர்.
பாராளுமன்ற மேல்சபையில் தற்போது உள்ள 240 எம்.பி.க்களில் 134 பேரின் ஆதரவு பா.ஜ.க. கூட்டணிக்கு உள்ளது. நியமன எம்.பி.க்களின் ஆதரவும் பா.ஜ.க. கூட்டணிக்கு கிடைக்கும்.
இதனால் மொத்தம் 427 எம்.பி.க்களின் ஆதரவு பா.ஜ.க. கூட்டணி நிறுத்தும் வேட்பாளருக்கு கிடைக்கும். எனவே பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்படும் துணை ஜனாதிபதி வேட்பாளர் மிக மிக எளிதாக வெற்றி பெறுவார்.
பாராளுமன்ற இரு சபைகளிலும் இந்தியா கூட்டணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு 355 எம்.பி.க்கள் தான் உள்ளனர். மக்களவையில் 249 எம்.பி.க்களும், மாநிலங்கள் அவையான மேல் சபையில் 106 எம்.பி.க்களும் உள்ளனர். எனவே எதிர்க்கட்சிகள் நிறுத்தும் துணை ஜனாதிபதி வேட்பாளருக்கு வாய்ப்பு இல்லை என்று கருதப்படுகிறது.
அதே சமயத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கும், துணை ஜனாதிபதி தேர்தலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அளிக்கும் வாக்குகளுக்கு அவர்களது மாநில எல்லை மற்றும் மக்கள் தொகைக்கு ஏற்ப மதிப்பு மாறுபடும். ஆனால் துணை ஜனாதிபதி தேர்தலுக்கு எம்.பி.க்களின் வாக்குகள் மட்டுமே அப்படியே கருத்தில் கொள்ளப்படும்.
பொதுவாக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் வாக்களிக்கும்போது அந்தந்த கட்சியின் கொறடா உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும் என்பது சட்ட விதியாகும். ஆனால் துணை ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்கும் எம்.பி.க்களுக்கு இது பொருந்தாது. எம்.பி.க்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் துணை ஜனாதிபதி தேர்தலுக்கு மனுதாக்கல் செய்பவரை 20 எம்.பி.க்கள் முன்மொழிய வேண்டும். 20 எம்.பி.க்கள் வழிமொழிய வேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய பா.ஜ.க. கூட்டணி, இந்தியா கூட்டணி இருவருக்கும் இடையே நேரடி பலப்பரீட்சை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தலை 3 பாராளுமன்ற மூத்த அதிகாரிகளை கொண்ட குழு நடத்தும் என்று தெரிய வந்துள்ளது. ஓட்டுப்பதிவு பாராளுமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன் நடத்தப்படும்.
ஒவ்வொரு எம்.பி.யும் வாக்களிப்பதற்கு அரசு சார்பில் பேனா வழங்கப்படும். அந்த பேனாவை பயன்படுத்திதான் எம்.பி.க்கள் வாக்களிக்க வேண்டும். சொந்த பேனாவை பயன்படுத்தி 'டிக்' செய்தால் அந்த வாக்கு செல்லாததாக அறிவிக்கப்படும்.
ஓட்டுப்பதிவுக்கு மறுநாள் வாக்குகள் எண்ணப்படும். தேர்தல் முடிவுகள் சில மணி நேரங்களில் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துணை ஜனாதிபதி பதவி காலியாக இருப்பதை நீண்ட நாட்களுக்கு அனுமதிக்க சட்டத்தில் இடம் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே இது தொடர்பாக தேர்தல் அறிவிக்கை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மாநிலங்களவை தலைவர் பதவியில் இருந்தும் ஜெகதீப் தன்கர் விலகியுள்ளார்
- குடியரசு துணைத் தலைவர் தன்கரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் முர்மு ஏற்றுக்கொண்டார்
குடியரசு துணைத் தலைவரான ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். ராஜினாமா தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் மாநிலங்களவை தலைவராக செயல்படக் கூடியவர். இதனால் மாநிலங்களவை தலைவர் பதவியில் இருந்தும் விலகியுள்ளார். மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் தன்கரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் முர்மு ஏற்றுக்கொண்டார் என்று உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது .
இதனிடையே ஜூலை 10 ஆம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆகஸ்ட் 2027ல் ஓய்வு பெறுவேன் என்று ஜெகதீப் தன்கர் பேசிய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
அந்த நிகழ்ச்சியில் பேசிய தன்கர், "ஆகஸ்ட் 2027ல் ஓய்வு பெறுவேன்.. தெய்வீக தலையீட்டால் இது மாறலாம்.." என்று தெரிவித்திருந்தார்.
ஓய்வு குறித்து அவர் பேசி 10 நாட்களே ஆன நிலையில் திடீரென அவர் ஓய்வு அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இந்திய துணைக் குடியரசு தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் நேற்று ராஜினாமா செய்தார்.
- அவரது ராஜினாமாவை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
குடியரசு துணைத் தலைவரான ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். ராஜினாமா தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முக்கு கடிதம் எழுதியுள்ளார். குடியரசு துணைத் தலைவர் மாநிலங்களவை தலைவராக செயல்படக் கூடியவர். இதனால் மாநிலங்களவை தலைவர் பதவியில் இருந்தும் விலகியுள்ளார். அவரது ராஜினாமாவை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் ஜெகதீப் தன்கருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் உள்பட பல்வேறு பதவிகளில் நமது நாட்டிற்கு சேவை செய்ய ஜெகதீப் தன்கர் பல வாய்ப்புகளை பெற்றுள்ளார். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- மாநிலங்களவை தலைவர் பதவியில் இருந்தும் ஜெகதீப் தன்கர் விலகியுள்ளார்.
- ராஜினாமா தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குடியரசு துணைத் தலைவரான ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். ராஜினாமா தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் மாநிலங்களவை தலைவராக செயல்படக் கூடியவர். இதனால் மாநிலங்களவை தலைவர் பதவியில் இருந்தும் விலகியுள்ளார். மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் தன்கரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் முர்மு ஏற்றுக்கொண்டார் என்று உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது .
- மாநிலங்களவை தலைவர் பதவியில் இருந்தும் ஜெகதீப் தன்கர் விலகியுள்ளார்.
- நேற்று பிற்பகல் 1 மணி முதல் மாலை 4.30 மணிக்குள் ஏதோ ஒரு தீவிரமான விஷயம் நடந்துள்ளது
குடியரசு துணைத் தலைவரான ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். ராஜினாமா தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் மாநிலங்களவை தலைவராக செயல்படக் கூடியவர். இதனால் மாநிலங்களவை தலைவர் பதவியில் இருந்தும் விலகியுள்ளார். மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், ஜெகதீப்தன்கர் ராஜினாமாவில் பல சந்தேகங்கள் இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "நேற்று பகல் 12.30-க்கு ஜெகதீப் தன்கர் தலைமையில் மாநிலங்களவையின் அளுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடந்தது. அவையின் ஆளுங்கட்சித் தலைவர் நட்டா, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் அதில் பங்கேற்றனர். மீண்டும் மாலை 4.30 கூட்டம் கூடியபோது, நட்டா, ரிஜிஜு அதில் பங்கேற்கவில்லை.
அதுகுறித்த தகவலும் தன்கரிடம் தெரிவிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த தன்கர், இன்று பகல் 1 மணிக்கு கூட்டத்தை ஒத்திவைத்தார்.
நேற்று பிற்பகல் 1 மணி முதல் மாலை 4.30 மணிக்குள் ஏதோ ஒரு தீவிரமான விஷயம் நடந்துள்ளது. இப்போது யாரும் எதிர்பாராத விதமாக தன்கர் ராஜினாமா செய்துள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.
- குடியரசு துணைத் தலைவர் மாநிலங்களவை தலைவராக செயல்படக் கூடியவர்.
- மாநிலங்களவை தலைவர் பதவியில் இருந்தும் ஜெகதீப் தன்கர் விலகியுள்ளார்.
குடியரசு துணைத் தலைவரான ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். ராஜினாமா தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் மாநிலங்களவை தலைவராக செயல்படக் கூடியவர். இதனால் மாநிலங்களவை தலைவர் பதவியில் இருந்தும் விலகியுள்ளார். மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், தனது ராஜினாமா முடிவை தன்கர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், "குடியரசுத் துணைத் தலைவர் தன்கரின் திடீர் ராஜினாமா புரிந்துகொள்ள முடியாத அதிர்ச்சியாக உள்ளது. நீதித்துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை இன்று அவர் வெளியிட இருந்தார்.
உடல் நிலையில் தன்கர் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இருப்பினும், இந்த முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- 1951ல் ராஜஸ்தானில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.
- ஒரு துணைக் குடியரசுத் தலைவர் மீது இவ்வாறு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது அதுவே முதல் முறை.
நேற்று பாரளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் நாட்டின் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் (74 வயது) தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். உடல்நலக்குறைவை காரணம் காட்டி தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவருக்கு அவர் அனுப்பி உள்ளார்.
ராஜஸ்தானில் விவசாயக் குடும்பத்தில் 1951ல் பிறந்த ஜெகதீப் தன்கர், சட்டத்துறையில் பட்டம் பெற்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.
பின்னர் ஜனதா தளத்தில் இணைந்து தனது அரசியல் இன்னிங்ஸை தொடங்கினார். 1989 முதல் 1991 வரை மக்களவை எம்.பி.யாக இருநதார். அப்போது பிரதமர் சந்திரசேகர ராவ் அமைச்சரவையில் பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக பணியாற்றினார்.
பின்னர் 2003 இல் பாஜகவில் இணைந்த தன்கர், 2019-ஆம் ஆண்டு மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
மாநில சட்டம்-ஒழுங்கு, ஊழல் குற்றச்சாட்டுகள், நிர்வாகம் மற்றும் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அவர் மம்தா அரசுக்கு எதிராக தன்கர் விமர்சித்து வந்தார். பல முக்கிய மசோதாக்களை அவர் கிடப்பில் போட்டதாக மம்தா அரசு குற்றம்சாட்டியது.
2022 ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் 14வது குடியரசுத் துணைத் தலைவராக தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலங்களவையின் தலைவராகவும் இருந்த அவர் எம்.பிக்களை கூட்டாக சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் எதிர்க்கட்சிகளிடம் கடுமையான போக்கை கையாண்டதாக விமர்சிக்கப்பட்டார்.
2024 டிசம்பரில், தன்கர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்தன. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு துணைக் குடியரசுத் தலைவர் மீது இவ்வாறு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது அதுவே முதல் முறை.

மேலும் அரசியலமைப்பு முகவுரையில் சோஷலிச மற்றும் மதச்சார்பற்ற என்ற வார்த்தைகள் இருக்கக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார். ஆளுநர், ஜனாதிபதி அதிகாரத்தில் தலையிட்டு உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றமாகச் செயல்படுவதாகவும் நேரடியாக விமர்சித்திருந்தார்.
இதுபோன்று சர்ச்சைகளுக்கு மத்தியில் தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பேசுபொருளாகி உள்ளது. கூட்டத்தொடர் நடந்து வரும் சூழ்நிலையில் அடுத்த துணை ஜனாதிபதியாக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
- குடியரசு துணைத் தலைவர் பதவி ராஜினாமா தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம்.
- உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்.
குடியரசு துணைத் தலைவரான ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜினாமா தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் மாநிலங்களவை தலைவராக செயல்படக் கூடியவர். இதனால் மாநிலங்களவை தலைவர் பதவியில் இருந்தும் விலகியுள்ளார். மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
- இது சனாதன உணர்விற்கு ஒரு அவமானம் என்று துணை ஜனாதிபதி தெரிவித்தார்.
- இந்த நாட்டின் நாகரிகம், செல்வம் மற்றும் அறிவை இழிவுபடுத்துவதாகும் என்று அவர் கூறினார்.
இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் இருந்து சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை என்ற வார்த்தைகளை நீக்க வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் தலைவரின் சர்ச்சைக்குரிய கருத்தை துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ஆதரித்துள்ளார்.
வியாழக்கிழமை டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே, அரசியலமைப்பின் முகவுரையிலிருந்து 'சோசலிச' மற்றும் 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று கோரினார்.
அவசரநிலையின் போது 42வது அரசியலமைப்பு திருத்தம் மூலம் இந்த வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. அவை நீடிக்க வேண்டுமா என்பது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும். அம்பேத்கர் வரைந்த அரசியலமைப்பின் முகவுரையில் இந்த வார்த்தைகள் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இதனை விமர்சித்த மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது அதனை தீயிட்டு எரிந்தவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பினர். இன்று பாஜகவோடு கூட்டு சேர்ந்து அரசியலமைப்பை அகற்றிவிட்டு மனுஸ்மிருதியை அமல்படுத்த சதித்திட்டம் தீட்டுகின்றனர் என்று எச்சரித்தார்.
இந்நிலையில் டெல்லியில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் பேசிய குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், அரசியலமைப்பின் முகவுரையில் சோசலிச மற்றும் மதச்சார்பற்ற என்ற வார்த்தைகளைச் சேர்த்ததற்காக காங்கிரஸை விமர்சித்தார். இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த நாட்டின் நாகரிகம், செல்வம் மற்றும் அறிவை இழிவுபடுத்துவதாகும் என்று அவர் கூறினார்.
இது சனாதன உணர்விற்கு ஒரு அவமானம் என்றும், இந்த மாற்றங்கள் இந்தியாவிற்கு இருத்தலியல் சவால்களை ஏற்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார். அரசியலமைப்பின் ஆன்மாவாக முகவுரையை விவரித்த அவர், அரசியலமைப்பை யாரும் மாற்ற முடியாது. முகவுரை அரசியலமைப்பின் விதை போன்றது என்று தெரிவித்தார். நாட்டின் குடியரசு துணைத் தலைவரே முகவுரையை மீண்டும் மாற்றக்கோருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக முழு நாடும் தேசபக்தி உணர்வோடு ஒன்றுபட்டது.
- இந்தியா மாறிவிட்டது என்று நாம் பெருமையுடன் சொல்லலாம்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த மாதம் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக கடந்த 7ஆம் தேதி அதிகாலை இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து துல்லியமாக தாக்குதல் நடத்தியது.
ஆபரேஷசன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியாவின் முப்படைகளும் நடத்திய இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு உலகின் பெரும்பலான நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் பயங்கரவாதத்தை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற தெளிவான தகவலை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு உலகிற்கு தெரிவித்துள்ளது என துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெகதீப் தன்கர் கூறியதாவது:-
நமது சகோதரிகளின் நெற்றியில் அணிந்த குங்குமத்தை அழித்த பயங்கரவாதிகளுக்கு இந்த பூமியில் வாழ உரிமை இல்லை என்பது பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாடாகும். பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக முழு நாடும் தேசபக்தி உணர்வோடு ஒன்றுபட்டது.
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் அந்த நாட்டின் தலைவர்களும் கெல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதி ஊர்வலத்தில் நிற்பதைக் காண முடிந்ததால், யாரும் ஆதாரம் கேட்கவில்லை.
இந்தியா மாறிவிட்டது என்று நாம் பெருமையுடன் சொல்லலாம். பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. ரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது என்ற கூற்றுடன் (சிந்து) நீர் விநியோகத்தை நிறுத்தியன் மூலம் கடந்த 70 ஆண்டுகளில் எடுக்கப்படாத முடிவை பிரதமர் மோடி எடுத்தார்.
இவ்வாறு ஜெகதீப் தன்கர் தெரிவித்தார்.






