என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "hospitalised"
- காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
- அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் "லொள்ளு சபா" என்கிற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் காமெடி நடிகர் சேஷூ.
இவர் தனது தனித்துவமான நகைச்சுவை பாணியைக் கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்
சின்னத்திரையை தொடர்ந்து, ஏ1, வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நடிகர் சேஷூ விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது நண்பர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
- தனது அணியினருடன் விமானத்தில் ஏறினார் மயான்க் அகர்வால்.
- மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் மயான்க் அகர்வால் தற்போது ரஞ்சி தொடரில் விளையாடி வருகிறார். கர்நாடக அணி கேப்டனான மயான்க் அகர்வால் தனது அணியினருடன் டெல்லி புறப்பட விமான நிலையம் சென்றார். அணியினருடன் விமானத்தில் ஏறிய மயான்க் அகர்வாலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
விமானத்தில் இருந்த படி சில முறை அவர் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து விமானத்தில் இருந்து அவசரஅவசரமாக வெளியேறிய மயான்க் அகர்வால் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும், எதனால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்பதை கண்டறிவதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உடல்நலக்குறைவு காரணமாக மயான்க் அகர்வால் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
விரைவில் தனது 33-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் மயான்க் அகர்வால் இந்திய அணிக்காக 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். நேற்று திரிபுரா அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் கர்நாடகா அணி வெற்றி பெறவும் மயான்க் அகர்வால் முக்கிய பங்காற்றியுள்ளார்.
சூப்பர் ஹீரோக்களை ஒன்றிணைக்கும் ‘அவெஞ்சர்ஸ்’ திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் பெருந்திரளான ரசிகர்கள் உள்ளனர். இந்த படத்தின் கடைசி பாகமான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ திரைப்படம் அண்மையில் உலகம் முழுவதும் வெளியாகி வசூலை வாரிக்குவித்து வருகிறது.
இந்த நிலையில், சீனாவின் நிங்போ நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி சியாலி (வயது 21) இந்த திரைப்படத்தை அங்குள்ள ஒரு திரையரங்கில் பார்த்து கொண்டிருந்தார். படத்தின் உணர்வுப்பூர்வமான காட்சிகளைக் கண்டு கண் கலங்கிய அவர், நேரம் செல்லச் செல்ல தேம்பி, தேம்பி அழுதார்.
இதனால் ஒரு கட்டத்தில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதையடுத்து, செயற்கை சுவாச உதவியோடு அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் அதிகமாக அழுததால் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கியதாக தெரிவித்தனர். மருத்துவமனையில் அந்தப் பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. AvengersEndgame #Avengers #ChineseFan
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டம் ராலேகான் சித்தி கிராமத்தில் வசித்துவருகிறார். மத்தியில் லோக்பால், மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைக்க வலியுறுத்தி ஒரு வாரம் உண்ணாவிரதம் இருந்த அவர் கடந்த 5-ந்தேதி தான் உண்ணாவிரதத்தை கைவிட்டார். அப்போது அவரது உடல் எடை 5 கிலோ வரை குறைந்துவிட்டது.
இந்நிலையில் நேற்று அவருக்கு உடல்சோர்வு ஏற்பட்டது. அவரை அகமதுநகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்ததில் அவரது மூளைக்கு ரத்தம் செல்வதில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவருக்கு உடல்சோர்வு மற்றும் சில பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #AnnaHazare #Hospitalised
கனடா நாட்டின் கியூபெக் சிட்டி விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஃபோர்ட் லாடெர்டேல் விமான நிலையத்துக்கு புறப்பட்டு செல்ல ஏர் டிரான்ஸாட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று காலை (உள்ளூர் நேரப்படி) சுமார் 11 மணியளவில் தயாராக இருந்தது.
விபரமறிந்து விரைந்துவந்த மருத்துவ குழுவினர் பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக கீழே இறக்கி, முதலுதவி மற்றும் உரிய சிகிச்சை அளித்தனர். மிகவும் ஆபத்தான நிலையில் காணப்பட்ட சுமார் 10 பயணிகள் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதைதொடர்ந்து, அந்த விமானம் ஓடுபாதையில் இருந்து நகர்த்தி, தனிப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
வழக்கமாக பறக்க தொடங்குவதற்கு முன்னதாக விமானத்தின் மூக்கு, இறக்கை மற்றும் வால் பகுதிகளில் படிந்துள்ள பனிக்கட்டி அல்லது பனித்துகள்கள் ஓடுபாதையில் பாய்ந்து சீறிக்கிளம்ப முடியாத நிலையில் என்ஜின்களின் உந்துசக்தியை குறைத்து விடும்.
இதை தவிர்க்கும் வகையில் பனிப்பிரதேசங்களில் இருந்து புறப்பட்டு செல்லும் விமானங்கள் மீது சில வாகனங்கள் சூழ்ந்து நின்றுகொண்டு வெந்நீரில் கலக்கப்பட்ட ‘கிளைக்கால்’ எனப்படும் ரசாயன கலவையை விமானத்தின் மூக்கு, இறக்கை மற்றும் வால் பகுதிகளில் தெளிப்பதுண்டு.
இதன்மூலம் படிந்துள்ள பனிக்கட்டிகள் உருகி விடுவதுடன் பறக்கும்போது மேலும் சில மணி நேரங்களுக்கு மீண்டும் பனி படியாமல் தடுக்கப்படும். இதை விமானப் போக்குவரத்து தொடர்பான தொழில்நுட்பச் சொல்லில் ‘டிஐசிங்’ என்று அழைப்பதுண்டு.
அவ்வகையில் ‘டிஐசிங்’ செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட தெளிப்பான்களின் நெடி காற்றுப்போக்கிகள் வழியாக விமானத்தின் உட்பகுதிக்குள் நுழைந்ததால் பயணிகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. எனினும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. #185passengersick #boardingplane #QuebecCityairport #deicing
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாரதீய ஜனதா கட்சி முயற்சிப்பதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராம்நகர் அருகேயுள்ள தனியார் சொகுசு ஓட்டலில் (ரெசார்ட்) தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாரதீய ஜனதாவின் குதிரை பேரத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில்தான் இப்படி செய்திருப்பதாக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்தார்.
நேற்று முன்தினம் இரவு, ரெசார்ட்டில் உள்ள ஒரு அறையில் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த்சிங், பீமாநாயக், கணேஷ் ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டது.
பீமாநாயக், கணேஷ் ஆகியோர் ஆனந்த்சிங்கிடம், “நாங்கள் பா.ஜனதாவுக்கு செல்ல இருந்த ரகசிய திட்டத்தை நீங்கள் தான் கட்சி தலைவர்களிடம் கூறி இருக்கிறீர்கள்?” என்று கேட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அது முற்றியபோது, ஆனந்த்சிங்கை கணேசும், பீமாநாயக்கும் சேர்ந்து தாக்கி அவர் படுகாயம் அடைந்து, தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் ஏற்பட்டு, அடிதடியில் முடிந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஆனந்த் சிங்கை மந்திரி ஜமீர்அகமதுகான் சந்தித்து நலம் விசாரித்தார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ரெசார்ட்டில் நண்பர்களுக்குள் சிறிய அளவில் தகராறு நடந்துள்ளது. பெரிய சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. இதை ஊடகங்கள் தான் பெரிது படுத்துகின்றன” என்றார்.
மற்றொரு மந்திரியான டி.கே.சிவக்குமாரோ, “எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. ஊடகங்கள் தான் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றன” என்றார்.
இதுகுறித்து பாரதீய ஜனதா மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களிடம் கூறுகையில், “காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சண்டை போட்டுக்கொண்டுள்ளனர். ஒரு எம்.எல்.ஏ. தாக்கப்பட்டுள்ளார். இது எம்.எல்.ஏ.க்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். போலீசார் வழக்கு பதிவு செய்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து சித்தராமையா பதில் சொல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டார். #Karnataka #CongressMLA #FriendlyFight #BengaluruResort
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்