search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒரே நாளில் 7 லட்சத்து 75 ஆயிரம் பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி-  அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    X

    (கோப்பு படம்)

    ஒரே நாளில் 7 லட்சத்து 75 ஆயிரம் பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    • 5,95,660 பயனாளிகளுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது.
    • 37 மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 5.43 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.

    மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 50,000 சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நேற்று நடைபெற்றது.

    இதில் 12 வயதிற்கு மேற்பட்ட 7,75,193 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணையாக 29,729 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 1,49,804 பயனாளிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 5,95,660 பயனாளிகளுக்கு

    பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டோரில் 96.59% பேருக்கு முதல் தவணையாகவும் 91.61% பேர்களுக்கு இரண்டாம் தவணையாகவும் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள.

    இதுவரை நடைபெற்ற 37 மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் 5 கோடியே 43 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளார்கள். இன்று (26.09.2022) கொரோனா தடுப்பூசி பணிகள் நடைபெறாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×