search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaccinate"

    • மாடுகளுக்கு அம்மை நோய் பரவாமல் தடுக்க தடுப்பூசி போடப்படுகிறது.
    • 21 நாட்களுக்கு பின் கால்நடைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

    உடுமலை:

    உடுமலை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் விவசாயத்துக்கு அடுத்ததாக கால்நடை வளர்ப்பு உள்ளது. அதில், தற்போது மாடுகளுக்கு அம்மை நோய் பரவாமல் தடுக்க தடுப்பூசி போடப்படுகிறது.

    இது குறித்து கால்நடைத்துறையினர் கூறுகையில், வடமாநிலங்களான ராஜஸ்தான், குஜராத்தில் கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் பரவி, அதிகளவு இறப்பு ஏற்பட்டுள்ளது. உன்னி மற்றும் கொசுக்களால் இந்த வைரஸ் பரவுகிறது.

    நோய் தாக்கப்பட்ட கால்நடைகளுக்கு காய்ச்சல், தீவனம் உண்ணாமை, தோல் தடிப்பு ஆகிய அறிகுறிகள் தென்படும்.சிறு கன்றுகள் முதல் கறவை மாடுகள் வரை பாதிக்கிறது. அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கால்நடை டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.பண்ணைகளை சுற்றிலும் நீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும். கழிவுகளை அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும்.

    அரசு வழங்கும் இலவச தடுப்பூசி போட்டுக்கொண்டால் இந்த நோய் வராமல் தடுக்கலாம். 21 நாட்களுக்கு பின், கால்நடைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.கால்நடைகளுக்கு தடுப்பூசியை போட்டுக்கொள்ள, கால்நடை வளர்ப்போர் முன்வர வேண்டும் என்றனர்.  

    • பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
    • வெளிநாடுகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தமிழகத்தில் இருந்தால் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.

    திருப்பூர் :

    செப்டம்பர் 30-ந்தேதி வரை மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அத்துடன் தடுப்பூசி செலுத்தாதவர் செலுத்திக் கொள்ள வசதியாக இன்று மற்றும் 11, 18, 25 ஆகிய தேதிகளில் மெகா முகாம்கள் நடத்தப்படுகின்றன.

    சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துபவருக்கு முகாமில் முன்னுரிமை வழங்கப்படும். வெளிநாடுகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தற்போது தமிழகத்தில் இருந்தால், அவர்களுக்கு மீதித்தவணை தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.வெளிநாடு சென்று வந்தவர்களில் தடுப்பூசி முழுமையாக செலுத்திக் கொள்ளாதவர் யாராவது உள்ளார்களா என கண்டறியப்பட்டு வருகிறது. அவர்களே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் வழியாகவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்றனர்.

    ×