என் மலர்
நீங்கள் தேடியது "Vaccinations"
- நாள் ஒன்றிற்கு 3,000 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- 1.5 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தெரு நாய்களுக்கு மெகா ரேபிஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை சென்னை மாநகராட்சி ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்குகிறது.
சென்னை மாநகராட்சி முழுவதும் 50 நாட்களில் 1.5 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கால்நடை மருத்துவக்குழுக்கள் நேரடியாக தெருக்களுக்கே சென்று நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவார்கள்.
நாள் ஒன்றிற்கு 3,000 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தப்படும் நாய்களுக்கு அடையாள மை வைக்கப்படும்
முன்னதாக தெரு நாய்களை பிடித்து கருத்தடை மையத்திற்குக்கொண்டு சென்று ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- சாஸ்தாவின்நல்லூர் கிராமம் புதுக்குடியில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- இதில் கால்நடைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள், தாது உப்பு கலவை, குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே சாஸ்தாவின் நல்லூர் கிராமம் புதுக்குடியில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சாத்தான்குளம் கால்நடை உதவி மருத்துவர் காயத்ரி தலைமை தாங்கினார். திருச்செந்தூர் கோட்ட உதவி இயக்குனர் செல்வகுமார், விஜயகுமார், பராமரிப்பு உதவி ஆய்வாளர் சுதா ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் சிறப்பு விருந்தினராக சாஸ்தாவின் நல்லூர் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் லூர்து மணி, பஞ்சாயத்து தலைவி திருக்கல்யாணி ஆகியோர்கலந்து கொண்டனர்.
இதில் கால்நடைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள், தாது உப்பு கலவை, குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. மேலும் சிறந்த கால்நடைகளை வளர்த்தவர்களுக்கு விருதும், சிறந்த கிடாரி கன்று வளர்த்தவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது. முகாமில் ராஜ்குமார், பேச்சி,சோமு, சீனி பாண்டி, கோபிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.






