சாத்தான்குளம் அருகே சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம்

சாஸ்தாவின்நல்லூர் கிராமம் புதுக்குடியில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் கால்நடைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள், தாது உப்பு கலவை, குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
முகாம் நடந்தபோது எடுத்த படம்.
முகாம் நடந்தபோது எடுத்த படம்.
Published on

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே சாஸ்தாவின் நல்லூர் கிராமம் புதுக்குடியில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சாத்தான்குளம் கால்நடை உதவி மருத்துவர் காயத்ரி தலைமை தாங்கினார். திருச்செந்தூர் கோட்ட உதவி இயக்குனர் செல்வகுமார், விஜயகுமார், பராமரிப்பு உதவி ஆய்வாளர் சுதா ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் சிறப்பு விருந்தினராக சாஸ்தாவின் நல்லூர் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் லூர்து மணி, பஞ்சாயத்து தலைவி திருக்கல்யாணி ஆகியோர்கலந்து கொண்டனர்.

இதில் கால்நடைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள், தாது உப்பு கலவை, குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. மேலும் சிறந்த கால்நடைகளை வளர்த்தவர்களுக்கு விருதும், சிறந்த கிடாரி கன்று வளர்த்தவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது. முகாமில் ராஜ்குமார், பேச்சி,சோமு, சீனி பாண்டி, கோபிகா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com