என் மலர்tooltip icon

    நமீபியா

    • பிரதமர் மோடிக்கு நமீபியா நாட்டின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • அங்கு பிரதமர் மோடி உற்சாகமாக மேளம் கொட்டி மகிழ்ந்தார்.

    விண்ட்ஹோக்:

    கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் ஆகிய நாடுகளுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த கட்டமாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவுக்கு சென்றுள்ளார்.

    நமீபியாவின் விண்ட்ஹோக்கில் தரையிறங்கிய பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் நெட்டம்போ நந்தி எண்டைட்வா நேரில் வந்து வரவேற்றார். பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பிரதமர் மோடி உற்சாகமாக மேளம் கொட்டி மகிழ்ந்தார்.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இது பிரதமர் மோடிக்கு அளிக்கப்படும் 27-வது வெளிநாட்டு விருது ஆகும். தற்போதைய சுற்றுப்பயணத்தில் பெறும் 4வது விருது ஆகும்.

    அதைத் தொடர்ந்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, உலகின் மிகப்பெரிய வைர உற்பத்தியாளர்களில் நமீபியாவும் ஒன்று. இந்தியாவில் மிகப்பெரிய வைர மெருகூட்டல் தொழில் உள்ளது. அதுவும் எனது சொந்த மாநிலமான குஜராத்தில். வரும் காலங்களில் இரு நாடுகளிடையே உள்ள நட்பு இந்த வைரங்களைப் போலவே பிரகாசிக்கும் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • மோடிக்கு பிரேசிலின் உயரிய விருது வழங்கி அந்நாட்டு அதிபர் லூலா டி சில்வா கவுரவித்தார்
    • விமான நிலையத்தில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

    அரசு முறை பயணமாக பிரேசில் சென்றிருந்த பிரதமர் மோடிக்கு பிரேசிலின் உயரிய விருதான "Grand Collar of the National Order of the Southern Cross விருது வழங்கி அந்நாட்டு அதிபர் லூலா டி சில்வா கவுரவித்தார்

    பிரேசில் அளித்த விருது தனக்கு மட்டுமில்லாமல் 140 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்த பெருமை என பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    பிரேசில் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நமீபியா சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து தாளம் இசைத்து பிரதமர் மோடி மகிழ்ந்தார்.

    • முதலில் ஆடிய கனடா 15 ஓவரில் 145 ரன்கள் எடுத்தது.
    • நமீபியா சார்பில் ட்ரெம்பிள்மென் 4 விக்கெட்டும், ஸ்மிட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    கனடா அணி நமீபியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. மழை காரணமாக

    முதல் டி20 போட்டி டாஸ் கூட சுண்டப்படாமல் கைவிடப்பட்டது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. மழை பெய்ததால் ஆட்டம் 15 ஓவராகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற நமீபியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய கனடா 15 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்தது. யுவராஜ் சாம்ரா 37 ரன்னும், கன்வர்பால் 30 ரன்னும் எடுத்தனர்.

    நமீபியா சார்பில் ட்ரெம்பிள்மென் 4 விக்கெட்டும், ஸ்மிட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நமீபியா களமிறங்கியது. ஜான் நிகோல் 36 ரன்னும், ஸ்மிட் 33 ரன்னும், நிகோலஸ் டெவின் 32 ரன்னும் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

    இறுதியில், நமீபியா அணி 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நமீபியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • நமீபியா வாழ் இந்தியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார்.

    வின்ட்ஹோக்:

    இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நமீபியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக நமீபியாவின் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்.

    நமீபியா வாழ் இந்தியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    ஒடிசாவில் நடந்த கோரமான ரெயில் விபத்தைத் தொடர்ந்து பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இந்திய அரசுக்கு தங்களது இரங்கலையும், ஆறுதலையும் வழங்கினர்.

    இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கோரமான ரெயில் விபத்து சம்பவம் நிகழ்ந்த நிலையில், நமீபியாவின் வெளியுறவுத்துறை மந்திரி உள்பட உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இந்திய அரசுக்கு தங்கள் அனுதாபத்தையும், ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தினர்.

    உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு மந்திரிகள் மற்றும் தலைவர்களிடம் இருந்து எனக்கும், பிரதமர் மோடிக்கும் பல குறுஞ்செய்திகள் வந்தன. இது உலகமயமாக்கலுக்கும், உலகம் எவ்வாறு இந்தியாவுடன் இணைந்துள்ளது என்பதற்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.

    ஒரு துயரம் ஏற்பட்ட சமயத்தில் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் பக்கம் நின்றன என தெரிவித்தார்

    ×