என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "killed"

    • ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி நெல்லையில் நேற்று வெட்டி படுகொலை
    • இந்த கொலை சம்பவத்தில் 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி நெல்லையில் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    பட்டபகலில் நிகழ்ந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த கொலை தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதனிடையே, ஜாகிர் உசேன் உயிரோடு இருந்தபோது தனது பேஸ்புக் பக்கத்தில் 'கிருஷ்ணமூர்த்தி என்கிற தெளபிக்' என்பவரால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

    இந்நிலையில், ஓய்வுபெற்ற காவலர் ஜாகிர் உசேன் கொலை வழக்கு குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தி என்கிற தெளபிக்கை துப்பாக்கிச்சூடு நடத்தி காவல்துறை பிடித்தது.

    நெல்லை ரெட்டியார்ப்பட்டியில் பதுங்கியிருந்த குற்றவாளி முகமது தௌபிக் பிடிக்கச்சென்ற போது தலைமைக்காவலர் ஆனந்தை அவர் அரிவாளால் வெட்டமுயன்றதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து கிருஷ்ண மூர்த்தியை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

    • ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி நெல்லையில் நேற்று வெட்டி படுகொலை
    • இந்த கொலை சம்பவத்தில் 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி நெல்லையில் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    பட்டபகலில் நிகழ்ந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த கொலை தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாஹீர் உசைன் கொலை தொடர்பாக டவுண் காவல் நிலைய ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    மேலும், காவல் உதவி ஆணையராக இருந்த செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

    • ஓய்வுபெற்ற போலீஸ் SI ஜாகீர் உசேன் (வயது 60) நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
    • ஜாகீர் உசேன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத கல் குவாரிகளின் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டிய சமூக ஆர்வலரான ஜகபர் அலி (வயது 58) ஜனவரி மாதம் 17-ம் தேதி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கொலையின் பரபரப்பு அடங்குவதற்குள்ளே நெல்லையில் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 60) நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

    இதனிடையே, ஜாகிர் உசேன் உயிரோடு இருந்தபோது தனது பேஸ்புக் பக்கத்தில் 'கிருஷ்ணமூர்த்தி என்கிற தெளபிக்' என்பவரால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

    தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது என்று ஏற்கனவே வீடியோ வெளியிட்ட ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை எனில் சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.

    குறிப்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ஜாகீர் உசேன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. திமுக ஆட்சியில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது என்றும் இதனால் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது.

    ஒருபக்கம் பட்டப்பகலில் கொலைகள் அரங்கேற மறுபக்கம் தென் மாவட்டங்களில் மாணவர்களிடையே சாதி ரீதியிலான மோதல்கள் அதிகரித்துள்ளது.

    குறிப்பாக திருநெல்வேலியில் கொலை சம்பவங்கள் தொடர்கதையாகி விட்டன. 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை திருநெல்வேலியில் 285 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவங்கள் தொடர்பாக 60 இளம் சிறார்கள் உட்பட 1045 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், 392 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்டவும் ரவுடிகளை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாக்குறுதி வெறும் வார்த்தையில் மட்டும் தான் உள்ளதோ என்ற கேள்வி எழுகிறது.

    போலீஸ் துறையை தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரும்புக் கரம் கொண்டு இத்தகைய பிரச்சனையை தடுப்பார் என்ற மக்களின் எதிர்பார்ப்பில் இன்றுவரை ஏமாற்றமே பதிலாக கிடைத்துள்ளது.

    ஜாகிர் உசேனின் படுகொலை 2026 சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • அளவுக்கு அதிகமாக மது குடித்த அரசு போக்குவரத்து கழக ஊழியர் இறந்து போனார்.
    • புதுவை காமராஜர் சாலையில் உள்ள ஒரு மதுக்கடையில் அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    அளவுக்கு அதிகமாக மது குடித்த அரசு போக்குவரத்து கழக ஊழியர் இறந்து போனார்.

    மரக்காணம் அருகே சுனாம்பேடு அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது62). இவர் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு சாமுண்டீஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மது குடிக்கும் பழக்கமுள்ள வெங்கடேசன் அடிக்கடி புதுவைக்கு வந்து மது குடித்து விட்டு செல்வது வழக்கம்.

    அதுபோல் சம்பவத்தன்று இவர் மது குடிக்க புதுவை வந்தார். புதுவை காமராஜர் சாலையில் உள்ள ஒரு மதுக்கடையில் அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக கூறப்படுகிறது. இதில் மயங்கி போன வெங்கடேசன் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மகன் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விவசாயத் தோட்டத்தில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்
    • கணவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள மருவத்தூர் கொளக்காநத்தம் கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 65). இவரது மனைவி விஜயலட்சுமி (55). இந்த தம்பதியருக்கு சுரேஷ்(38)என்ற ஒரு மகன் உள்ளார்.

    இவர்கள் கூட்டாக தங்களது தோட்டத்தில் சோளம் மற்றும் பருத்தி பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் கண்ணன் அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் சுரேஷ் ,மருமகள் பத்மாவதி ஆகிய நான்கு பேரும் மாடுகளை ஓட்டிக்கொண்டு விவசாயத் தோட்டத்துக்கு சென்றனர்.

    அடித்துக் கொலை

    பின்னர் மதியம் 12:30 மணிக்கு சுரேஷ் தனது மனைவி பத்மாவதி உடன் மதிய சாப்பாட்டுக்கு வீடு திரும்பினார். பின்னர் மாலை 4.30 மணி அளவில் தோட்டத்திற்கு சென்றார்.

    அப்போது அவரது தாயார் விஜயலட்சுமி தலையில் பலத்த ரத்தக்காயத்துடன் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதிலும் இன்று(சனிக்கிழமை) அதிகாலை 5 மணி அளவில் விஜயலட்சுமி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் கொலை வழக்கு பதிவு பதிவு செய்துள்ளனர்.

    கொலை செய்யப்பட்ட விஜயலட்சு மியின் பின்பக்க தலையில் இரும்பு கம்பியால் தாக்கிய தடயங்களை போலீசார் கண்ட றிந்துள்ளனர். ஆனால் கொலையாளி மற்றும் கொலைக்கான காரணம் குறித்து எதுவும் உறுதி செய்யப்படவில்லை. கொலை செய்யப்பட்ட விஜயலட்சுமி அணிந்திருந்த தாலிச் செயின் மற்றும் கம்மல்கள் அப்படியே இருந்தன. எனவே கொள்ளை யர்களுக்கு தொடர்பு இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர். அதனால் விசாரணையின் கோணம் மாறி உள்ளது.

    சம்பவம் நடந்தபோது விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் உடனிருந்து உள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய போது நான் அருகாமையில் உள்ள காட்டில் மாடுகளை மேய்த்துக் கொண்டி ருந்ததாக கூறியுள்ளார். இருப்பினும் தொடர்ந்து அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடந்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது தோட்டத்தில் பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அய்யப்பன் மனைவி மகாலட்சுமிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
    • மகாலட்சுமியின் சகோதரர் கனகராஜ்க்கும், அய்யப்பனுக்கும் தகராறு ஏற்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தீவனூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன். (வயது30). இவர் இன்று தனது வீட்டின் எதிரே பிணமாக கிடந்தார். இதனை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல்அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை கைப்பற்றினர்.அப்போது அய்யப்பனை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்து வீசி உள்ளனர். உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கான திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்து உள்ளது. அய்யப்பன் மனைவி மகாலட்சுமி. கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.எனவே மகாலட்சுமி தனது தாய் வீட்டுக்கு வந்தார். இன்று காலை அய்யப்பன் தனது மனைவியை குடும்பம் நடத்துவதற்கு அழைக்க சென்றார். அப்போது மகாலட்சுமியின் சகோதரர் கனகராஜ்க்கும், அய்யப்பனுக்கும் தகராறு ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த கனகராஜ் தனது தங்கை கணவர் என்று கூட பாராமல் உருட்டுக்கட்டையால் அய்யப்பனை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்தில் இறந்தார்.மேற்கண்டவை விசாரணையில் தெரியவந்தது. இது ெதாடர்பாக போலீசார் கனகராஜை தேடி வருகிறார்கள். 

    • தாத்தாவை கொலை செய்த பேரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது
    • சொத்துக்காக நடந்த சம்பவம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையப்பாளையம் அருகே காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அய்யாறு, இவரது பேரன் மணிகண்டன். இவர் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன், ஆதலால் எனக்கு வீடு கட்ட ஒரு பகுதியை எழுதிக் கொடுக்க கேட்டுள்ளார், அய்யாறு எழுதி கொடுத்து விட்டார், இதை கேள்விப்பட்ட மற்றொரு பேரனான அசோக் ஆத்திரத்தில் சொத்து கேட்டு தகராறு செய்து, அய்யாருவின் கை கட்டைவிரலை வெட்டிவிட்டு உருட்டு கட்டையால் தாக்கியதும் பலத்த காயமடைந்த, அய்யாறு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி கொளஞ்சிநாதன் கொடுத்த புகாரின் பேரில், உடையார்பாளையம் போலீசார் அசோக்கை கைது செய்தனர், இந்த வழக்கின் விசாரணை அரியலூர் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்றது. அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் சின்னத்தம்பி ஆஜராகி வாதாடினார், இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாவட்ட நீதிபதி மகாலட்சுமி சொத்துக்காக தாத்தாவையே கொலை செய்த குற்றத்திற்காக அசோக்கிற்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினார். இதை அடுத்து திருச்சி மத்திய சிறையில் அசோக்கை அடைத்தனர்.

    • கள்ளத்தொடர்பு பிரச்சினையில் சுங்கச்சாவடி காவலாளியை கொலை செய்து இருப்பார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடியில் இருந்து கீழராயம்புரம் செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சாலையோரம் வாலிபர் ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் அடித்து கொலை செய்யப்பட்டு சட்டை எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த இரும்புலிக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். உடலை ஆய்வு செய்தபோது கை, கால், தலை பகுதிகளில் கடுமையாக தாக்கப்பட்ட ரத்த காயங்கள் இருந்தன.

    அதனால் அந்த வாலிபரை வேறு எங்கோ கொலை செய்து தடயங்களை மறைக்க உடலை இங்கே கொண்டு வந்து போட்டு எரிக்க முயன்றது தெரியவந்தது. கரும்பு சக்கை மற்றும் கருவேலம் முட்களை போட்டு எரித்ததால் உடல் முழுவதும் எரியாமல் சட்டையின் ஒரு பகுதி மட்டுமே எரிந்து இருந்தது.

    பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அவை ஆனந்தவாடி சாலையில் 1 கி.மீ. தூரம் வரை ஓடி நின்றது. யாரையும் பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.

    இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் வல்லரசு (எ) சுரேஷ்குமார் (வயது 23) என்று தெரிந்தது. இவர் கடந்த 10 நாட்களாக திருச்சி சிதம்பரம் சாலையின் மணகதி சுங்கச்சாவடியில் காவலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

    அதனைத் தொடர்ந்து கொளையாளிகள் யார், எதற்காக கொலை செய்தார்கள் என்று அவரது வீடு மற்றும் சுங்க சாவடியிலும், அவரது செல்போனை வைத்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் மணகதி சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த திருமண ஆன ஒரு பெண்ணிற்கும் வல்லரசுவிற்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் இந்த கொலை நடந்ததா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விதவை தாய்-மகன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.
    • தம்பதி மீது வழக்கு; கணவன் கைது-மனைவி ஓட்டம்

    திருச்சி

    திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள தாயனூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி அஞ்சலை (வயது 43). கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு சங்கர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இந்த தம்பதிக்கு அருண்குமார் (21) என்ற மகனும், துர்காதேவி (19) என்ற மகளும் உள்ளனர்.

    வறுமையின் காரணமாக அஞ்சலை சித்தாள் வேலைக்கு சென்று வருகிறார். அஞ்சலை குடும்பத்திற்கும், அதே பகுதியில் வசிக்கும் கண்ணன் (43) மற்றும் அவரது மனைவி லதா (38) தம்பதிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.

    சம்பவத்தன்று அஞ்சலை சித்தாள் வேலைக்கு செல்வதற்காக கண்ணன் வீட்டை கடந்து சென்றார். அப்போது கண்ணன் மற்றும் அவருடைய மனைவி லதா இருவரும் சேர்ந்து அஞ்சலையை ஜாடைமாடையாக திட்டியுள்ளனர். இதனை அஞ்சலையின் மகன் அருண்குமார் மற்றும் அஞ்சலை இருவரும் தட்டி கேட்டபோது வாய் தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.

    • பெண் கொலையில் வாலிபர் கைது செய்யப்பட்டார்
    • கறம்பக்குடி அருகே தைலமரக்காட்டில் பிணமாக கிடந்தார்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள தெற்கு பல்லவராயன்பத்தை கிராமத்தைச் சேர்ந்தவர் திருச்செல்வம். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 35). இவரை கடந்த 23-ந்தேதி முதல் காணவில்லை என்று அவரது தந்தை கறம்பக்குடி போலீசில் புகார் கொடுத்து இருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான பழனியம்மாளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பழனியம்மாள் அப்பகுதியில் உள்ள தைலமரக் காட்டில் அழுகிய நிலையில் சடலமாக மீக்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தியதில் மறியல் கைவிடப்பட்டது.

    இது குறித்து கறம்பக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக் ரஜினி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆலங்குடி அருகே உள்ள வெண்ணாவல்குடி கொத்தக்கோட்டை குடியிருப்பைச் சேர்ந்த பாண்டியராஜன் (19) என்பவர் பழனியம்மாளிடம் தொடர்ந்து நான்கு நாட்களாக செல்போனில் பேசியுள்ளார். இதனை அறிந்த போலீசார் அவரை கறம்பக்குடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் தனது நண்பர்களின் மூலம் பழனியம்மாளின் செல்போனின் நம்பர் பெற்று பேசியதாக கூறினார். கடந்த 23-ந்தேதி இரவு நேரத்தில் தைல மரக்கட்டில் பழனியம்மாளை கீழே தள்ளியதில் அவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து பாண்டியராஜனை கைது செய்த போலீசார் அவரை ஆலங்குடி நீதிமன்ற நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நான்கு குழந்தைகளின் தாயான பழனியம்மாள் கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


    • கார் மோதி வியாபாரி பலியானார்
    • சாலையை கடக்க முயன்ற போது விபத்து

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கவேல் மனைவி பாப்பாத்தி (வயது 50). வெங்காய வியாபாரியான இவர் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும் சந்தைகளுக்கு சென்று வெங்காய வியாபாரத்தில் ஈடுபடுவார்.

    இந்தநிலையில் நேற்று அரியலூரில் நடைபெற்ற சந்தைக்கு வியாபாரத்திற்கு சென்ற பாப்பாத்தி இரவில் இரூர் திரும்பிக்கொண்டிருந்தார். பேருந்தில் இருந்து இறங்கிய அவர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாப்பாத்தி பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த தர்சன் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
    • பலத்த காயம டைந்த தர்சன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    திருவையாறு:

    திருவையாறு அருகே ஆக்கினாதபுரத்தை சேர்ந்த பிரகாஷ் மகன் தர்சன் (வயது 2). இவர் கடந்த 2-ந் தேதி வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தார்.

    சம்பவத்தன்று, பொன்னாவரையை சேர்ந்த வரதராஜன் மகன் விக்னேஷ (30) என்பவர் மேலஉத்தமநல்லூரிலிருந்து பொன்னாவரைக்கு மோட்டார் சைக்கிளில் ஆக்கினாதபுரம் வழியாக வந்து கொண்டிருந்தார்.

    இந்நிலையில், வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த தர்சன் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் பலத்த காயம டைந்த தர்சன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து, திருவையாறு சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்பர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர்.

    ×