என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bus crash"

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
    • இந்த விபத்தில் 21 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    ஈக்வடார்:

    ஈக்வடாரில் உள்ள குவாரந்தா-அம்பாடோ இடையிலான சாலையில் பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தது. சிமியாடுக் பகுதியில் மலைப் பாதையில் பயணித்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

    பள்ளத்துக்குள் பேருந்து விழுந்த விபத்தில் 21 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த பயணிகள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    • பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் பஸ் புகுந்தது.
    • இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

    ஸ்டாக்ஹோம்:

    ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமின் மத்திய பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.

    அப்போது வேகமாக வந்த பேருந்து மக்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இந்தச் சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.

    தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பேருந்தின் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    • பேருந்தில் இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸை சேர்ந்த 54 சுற்றுலாப் பயணிகள் பயணித்தனர்.
    • விபத்தில் குழந்தைகள் யாரும் உயிரிழக்கவில்லை.

    நியூயார்க்கில் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சென்று திரும்பிய சுற்றுலாப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 49 பேர் உயிர் தப்பினர்.

    இந்த பேருந்தில் இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸை சேர்ந்த 54 சுற்றுலாப் பயணிகள் பயணித்தனர்.

    நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்வையிட்ட பிறகு சுற்றுலாப் பயணிகள் நியூயார்க் நகரத்திற்குத் திரும்பிச் சென்றபோது பஃபலோவிலிருந்து கிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்தில் குழந்தைகள் யாரும் உயிரிழக்கவில்லை. வேறு யாரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என்றும் பல பயணிகள் மருத்துவ சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
    • இந்த விபத்தில் 10 பெண்கள் உள்பட 25 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த 20 பேர் மீட்கப்பட்டனர்.

    நைரோபி:

    ஆப்பிரிக்க நாடான கென்யாவின் நியாஹெரா நகரில் இருந்து நியாகாச்சிற்கு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது.

    இந்த பஸ்சில் சுமார் 50 பேர் பயணித்தனர். அவர்கள் அனைவரும் உறவினரின் இறுதிச் சடங்கை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    ககமேகா நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் 10 பெண்கள் உள்பட 25 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த 20 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், சாலையோரம் பஸ் கவிழ்ந்த விபத்தில் பலியானோருக்கு அந்நாட்டின் அதிபர் வில்லியம் ரூட்டோ இரங்கல் தெரிவித்தார்.

    • பேருந்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    • பேருந்து ஓட்டுனர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல்.

    மத்திய ஆப்பிரிக்கா கேமரூனில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடி அருகே டூடவாலா- எடியா சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

    கேமரூனில் தெற்கு நகரமான எசேகா நோக்கி பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மணல் ஏற்றிச் செல்லும் கனரக லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 19 பேர் உயிரிழந்தனர்.

    பேருந்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு தலைநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், பேருந்து ஓட்டுனர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மத்திய ஆப்பிரிக்க நாட்டில் அதிகளவில் சாலை விபத்துகள் நடப்பதாகவும், ஆண்டுக்கு சுமார் 1,500 பேர் விபத்துகளில் இறக்கிறார்கள் என்றும் அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • விபத்துக்குள்ளான பேருந்து மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

    கிழக்கு சீனாவில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் மீது பேருந்து மோதியதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    ஷான்டாங் மாகாணத்தில் உள்ள தையான் நகரில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியின் வாயிலில் பேருந்துக்காக காத்திருந்த மாணவர்கள் மீது பேருந்து மோதி உள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்துக்குள்ளான பேருந்து மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

    • விபத்து குறித்து தகவல் அறிந்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல்.
    • நிவாரணப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் மினி டிரக் மீது பேருந்து மோதிய ஏற்படுத்திய விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேர் காயமடைந்துள்ளனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற இடத்தில் நெடுஞ்சாலை 93ல் இன்று பேருந்து ஒன்று மினி லாரி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

    பயணிகள் ஹத்ராஸில் இருந்து ஆக்ரா நோக்கி சென்று கொண்டிருந்தபோது, சேவாலா கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த மினி லாரி மீது மோதியது.

    இந்த கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மேலும், நிவாரணப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    விபத்தை தொடர்ந்து மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மாவட்ட மருத்துவமனைக்கு விரைந்தனர்.

    இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) நிபுன் அகர்வால் கூறுகையில், "ஆக்ரா- அலிகார் தேசிய நெடுஞ்சாலையில் வேனை முந்திச் செல்ல முயன்றபோது பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது" என்றார்.

    காயமடைந்தவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தென் ஆப்பிரிக்காவில் பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
    • இதில் 12 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 45 பேர் காயமடைந்தனர்.

    ஜோகன்னஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்க நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் இன்று பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஜோகன்னஸ்பர்க் கிழக்கே உள்ள டவுன்ஷிப் அல்லது கேட்லெஹாங்கிலிருந்து மக்களை ஏற்றிச் சென்றது. அப்போது திடீரென பேருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

    இதில் 12 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 45 பேர் காயமடைந்தனர் என அந்நாட்டு அவசர சேவை தெரிவித்துள்ளது.

    இந்த விபத்து ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள டாம்போ சர்வதேச விமானநிலையம் அருகிலுள்ள ஒரு நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது.

    இந்த விபத்தில் 9 ஆண்களும், 3 பெண்களும் இறந்தனர். இன்னும் 2 உடல்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மெக்சிகோ நாட்டில் டிராக்டர் டிரெய்லருடன் பஸ் மோதிய விபத்தில் அதில் பயணித்த 21 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் மெக்சிகோ சிட்டி நகரில் இருந்து டுஸ்லா குடரஸ் பகுதி நோக்கி பயணிகள் பஸ் சென்று கொண்டிருந்தது.

    வெராகுருஸ் பகுதி அருகே சென்றபோது பஸ் திடீரென முன்னால் சென்ற டிராக்டர் டிரெய்லர் மீது வேகமாக மோதியதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 17 பேர் பலியாகினர் என்றும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 4 பேர் இறந்தனர் என்றும் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

    பயணிகள் பஸ் டிராக்டர் டிரெய்லருடன் மோதிய விபத்தில் 21 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
    மேற்கு சூடானில் பழுதாகி நின்ற லாரி மீது பஸ் மோதிய விபத்தில் 14 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #SudanAccident
    கர்த்தூம்:

    சூடான் நாட்டின் தலைநகர் கர்த்தூமில் இருந்து புறப்பட்டு வந்த பயணிகள் பேருந்து ஒன்று, சாலை ஓரம் நின்றுக்கொண்டிருந்த பழுதான லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 14 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.



    இவ்விபத்து வடக்கு டார்பூர் மற்றும் மேற்கு கொர்டாஃபன்  மாநிலம் இடையே  உள்ள உம் கடதா எல்லையில் மேற்கு சால்வேஷன் சாலையில் நடந்தது.

    இது குறித்து உம் கட்தா காவல் ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காயமடைந்தவர்கள் எண்ணிக்கை முழுமையாக தெரியாத நிலையில், மீட்கப்பட்டோர்  அருகே உள்ள  மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.

    போக்குவரத்து நெரிசலில் அதிகம் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் சூடானும் இடம்பெற்றுள்ளது. கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், சிதிலமடைந்த சாலைகள் மற்றும் மோசமான வாகனம் அகற்றும் அமைப்பு ஆகியவை காரணமாக விபத்துகள் அதிகரித்துள்ளன. விபத்துகளை குறைக்க நெடுஞ்சாலைகளில் வேகத்தை கண்காணிக்க ரேடர்களை நிறுவுதல் போன்ற  புதிய திட்டங்களை வகுத்து வருவதாக உள்துறை மந்திரி சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது. #SudanAccident

    கனடா நாட்டில் மேற்கூரை மீது மாடி பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Canada #Ottawa #BusCrash
    ஒட்டாவா:

    கனடா நாட்டின் ஒட்டாவா நகரில் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் 25-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு மாடி பஸ் வெஸ்ட்போரோ பகுதியில் உள்ள பஸ்நிறுத்தத்துக்கு வந்தது. அப்போது அந்த பஸ் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த சுரங்க நடைபாதையின் மேற்கூரையின் மீது பயங்கரமாக மோதியது.



    இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 2 பேர் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் ஆவர். ஒருவர் பஸ்சில் பயணம் செய்தவர்.

    மேலும் இந்த விபத்தில் 23 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த தகவலை அறிந்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #Canada #Ottawa #BusCrash 
    செஞ்சி அருகே அரசு பஸ் பெண் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
    செஞ்சி:

    சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி லட்சுமி(வயது 70). இவர் நேற்று முன்தினம் மாலை செஞ்சி அருகே அரசலாபுரத்தில் நடைபெற்ற ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு செல்வதற்காக அரசலாபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று லட்சுமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×