ஸ்வீடனில் சோகம்: கூட்டத்தில் பேருந்து புகுந்ததில் 6 பேர் பலி

பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் பஸ் புகுந்தது.இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
ஸ்வீடனில் சோகம்: கூட்டத்தில் பேருந்து புகுந்ததில் 6 பேர் பலி
Published on

ஸ்டாக்ஹோம்:

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமின் மத்திய பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.

அப்போது வேகமாக வந்த பேருந்து மக்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இந்தச் சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பேருந்தின் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com