search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "20 killed"

    ஈக்வடார் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலியாகினர் என்றும், 47 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் பேரிடர் மேலாண்மை குழுவினர் தெரிவித்தனர். #EcuadorHeavyRains
    குயிட்டோ:

    ஈக்வடார் நாட்டில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டில் உள்ள 6 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஈக்வடார் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமாஎ 20 பேர் பலியாகி உள்ளனர் என்றும், 47 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கனமழையால் சுமார் 30 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், 7 ஆயிரத்து 700 கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன என பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
    #EcuadorHeavyRains
    எகிப்து தலைநகர் கெய்ரோ ரெயில் நிலையத்தில் இன்று மின்சார ரெயில் ஒன்று பிளாட்பார்ம் தடுப்பில் மோதிய விபத்தில் தீப்பற்றியது. இதில் 20 பேர் இறந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. #EgyptTrainFire
    கெய்ரோ:

    எகிப்து தலைநகரான கெய்ரோ ரெயில் நிலையத்தில் இன்று காலை மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது. பிளாட்பார்மில் உள்ள தடுப்பில் வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் ரெயிலில் திடீரென தீ பற்றியது. இந்த தீ மளமளவென பரவியது. இதில் சிக்கி 20 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும், 40க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



    ரெயிலில் தீ விபத்து பற்றி அறிந்ததும், தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.  

    காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது. #EgyptTrainFire
    சிரியா நாட்டில் சர்வதேச கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். #Syria #CoalitionAirstrike
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் அரசுக்கு எதிராக உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.எஸ். குழுவினரும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர். இவர்களை கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    சிரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படை மற்றும் ரஷ்ய ஆதரவு பெற்ற அரசு படைகள் ஆகியவையும் போரில் இறங்கி உள்ளன. சிரியாவில் இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட லட்சக்கணக்கான பொதுமக்கள் குண்டுகளுக்கு இரையாகி உள்ளனர்.
     
    இந்நிலையில், சிரியாவின் டெயிர் அல் சோர் மாகாணத்தில் வசித்து வந்தவர்கள் மீது சர்வதேச கூட்டுப் படையினர் இன்று வான்வழி தாக்குதல் நடத்தினர்.
     
    இந்த தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 20 பேர் பலியாகினர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    தகவலறிந்து அங்கு மீட்புப் படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து வருகின்றனர். #Syria #CoalitionAirstrike
    நைஜீரியா நாட்டின் தெற்கு பகுதியில் பெட்ரோல் லாரி கவிழ்ந்து, வெடித்து சிதறிய விபத்தில் 20-க்கும் அதிகமானவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். #20killed #Nigeria #tankerexplosion #Nigeriatankerexplosion
    நைஜர்:

    நைஜீரியா நாட்டின் தென்பகுதியில் உள்ள கிராஸ் ரிவர் மாநிலத்தின் கலாபர்-ஓடும்பானி நெடுஞ்சாலை வழியாக பெட்ரோல் ஏற்றிய ஒரு டேங்கர் லாரி நேற்று சென்று கொண்டிருந்தது.

    வேகமாக சென்ற லாரி ஒரு குறுகிய வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகிச்சென்று பக்கவாட்டில் கவிழ்ந்தது. கவிழ்ந்த லாரியில் இருந்து பெட்ரோல் வழிந்தோடுவதை கண்ட அப்பகுதி மக்கள் பாத்திரங்களுடன் ஓடிசென்று பெட்ரோலை சேகரித்து கொண்டிருந்தனர்.



    அப்போது எதிர்பாராத விதமாக அந்த லாரி திடீரென்று தீப்பிழம்பாக வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் 20-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். கடுமையான தீக்காயங்களுடன் சிகிச்சைபெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இவ்விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. #20killed #Nigeria #tankerexplosion #Nigeriatankerexplosion
    வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளான சோமாலியா மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என ஐநா பொது செயலாளர் ஆண்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். #SomaliaBlasts #AntonioGuterres
    ஐக்கிய நாடுகள்:

    சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள பிரபல உணவகமான சஹாபி அருகே நேற்று அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. 3 கார்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்து சிதறியதால் அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் என மொத்தம் 20 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளான சோமாலியா மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என ஐநா பொது செயலாளர் ஆண்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். 



    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோமாலியா நாட்டில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதுபோன்ற தாக்குதலால் சோமாலியா மக்களை அச்சுறுத்தி விடமுடியாது. வெடிகுண்டு தாக்குதலால் அவதிப்பட்டு வரும் அந்நாட்டு அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபை என்றும் உறுதுணையாக நிற்கும். மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் அளிக்கும் என தெரிவித்துள்ளார். #SomaliaBlasts #AntonioGuterres
    ஈரான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் இன்று ராணுவ அணிவகுப்பின் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு சுமார் 20 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #gunattack #militaryparade
    டெஹ்ரான்:

    ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் ஆட்சியின்போது அண்டை நாடான ஈரான் மீது போர் தொடுத்தார். கடந்த 1980-களில் 8 ஆண்டுகள் இந்த போர் நீடித்தது.



    இந்த போரின் நினைவுநாளையொட்டி ஈரான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் இன்று ராணுவ குசேஸ்தான் மாகாணத்தின் தலைநகரான அவாஸ் நகரில் இன்று ராணுவ வீரர்கள் அணிவகுப்பு நடத்தினர். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த அணிவகுப்பை பார்வையிட ஏராளமான மக்கள் குவிந்திருந்தனர்.

     அப்போது, அவ்வழியாக காக்கிச் சீருடையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பொதுமக்கள் கூட்டத்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர். இந்த தாக்குதலில் ஒரு குழந்தை, பெண்கள், ராணுவ வீரர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்ததாக ஈரான் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #gunattack #militaryparade  
    ×