என் மலர்
செய்திகள்

பிளாட்பார்ம் தடுப்பில் மோதி ரெயிலில் தீவிபத்து - 20 பேர் பலி
எகிப்து தலைநகர் கெய்ரோ ரெயில் நிலையத்தில் இன்று மின்சார ரெயில் ஒன்று பிளாட்பார்ம் தடுப்பில் மோதிய விபத்தில் தீப்பற்றியது. இதில் 20 பேர் இறந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. #EgyptTrainFire
கெய்ரோ:
எகிப்து தலைநகரான கெய்ரோ ரெயில் நிலையத்தில் இன்று காலை மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது. பிளாட்பார்மில் உள்ள தடுப்பில் வேகமாக மோதியது.
இந்த விபத்தில் ரெயிலில் திடீரென தீ பற்றியது. இந்த தீ மளமளவென பரவியது. இதில் சிக்கி 20 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும், 40க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரெயிலில் தீ விபத்து பற்றி அறிந்ததும், தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.
காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது. #EgyptTrainFire
Next Story






