என் மலர்

  நீங்கள் தேடியது "condole"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளான சோமாலியா மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என ஐநா பொது செயலாளர் ஆண்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். #SomaliaBlasts #AntonioGuterres
  ஐக்கிய நாடுகள்:

  சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள பிரபல உணவகமான சஹாபி அருகே நேற்று அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. 3 கார்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்து சிதறியதால் அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் என மொத்தம் 20 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  இந்நிலையில், வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளான சோமாலியா மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என ஐநா பொது செயலாளர் ஆண்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.   இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோமாலியா நாட்டில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

  இதுபோன்ற தாக்குதலால் சோமாலியா மக்களை அச்சுறுத்தி விடமுடியாது. வெடிகுண்டு தாக்குதலால் அவதிப்பட்டு வரும் அந்நாட்டு அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபை என்றும் உறுதுணையாக நிற்கும். மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் அளிக்கும் என தெரிவித்துள்ளார். #SomaliaBlasts #AntonioGuterres
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகர் அருகே நிகழ்ந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ஐ.நா. பொதுச் செயலாளர், கனடா பிரதமர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #Amritsartrainaccident #UNchiefGuterrescondole
  நியூயார்க்:

  பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய பொற்கோயில் அமைந்துள்ள அமிர்தசரஸ் நகரின் அருகேயுள்ள சவுரா பஜார் பகுதியில் நேற்றிரவு தசரா விழா கொண்டாட்டம் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.

  இவ்விழாவின் இறுதிக்கட்டமாக ராவணன் கொடும்பாவி தீயிட்டு எரிக்கப்பட்டது. பல அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த ராவணன் கொடும்பாவி கொளுந்துவிட்டு எரியும் காட்சியை மூடப்பட்டிருந்த 27-ம் எண் ரெயில்வே கேட்டின்  தண்டவாளத்தின் அருகே நின்றவாறு பலர் தங்களது கைபேசிகளில் பதிவு செய்தனர்.

  அப்போது, அந்த தண்டவாளத்தின் வழியாக இரு ரெயில்கள் எதிர் எதிர் திசையில் வந்தன. உற்சாக மிகுதியில் இருந்த மக்கள் சுதாரித்து கொள்வதற்குள் ஜலந்தர் நகரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி வேகமாக சென்ற ரெயில் மக்கள் கூட்டத்தின்மீது மோதியது.

  இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இன்று 61-ஆக உயர்ந்துள்ள நிலையில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஐ.நா. பொதுச் செயலாளர், கனடா பிரதமர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  இதுதொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் அன்ட்டோனியோ குட்டரெஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த மாதத்தின் துவக்கத்தின் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோயிலை காண்பதற்கான கவுரவம் எனக்கு அளிக்கப்பட்டது. அங்குள்ள மக்கள் என்னை அன்பாகவும், கனிவாகவும் வரவேற்றனர்.

  இந்த கோர ரெயில் விபத்தால் வேதனைக்குள்ளாகி இருக்கும் பஞ்சாப் மக்களுடன் இப்போது எனது நினைவுகளும் இணைந்துள்ளது. இவ்விபத்தில் தங்களுக்கு பிரியமானவர்களை இழந்த அனைவருக்கும் எனது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  இதேபோல் கனடா பிரதமர் ஜஸ்ட்டின் டுருடேயு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘இந்த விபத்தால் மிகுந்த வேதனைக்குள்ளாகி இருக்கும் இந்தியர்களுடன் கனடா மக்களின் சோகமும் இணைந்துள்ளது. இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய பிராத்திக்கிறேன்’ என தெரிவித்துள்ளார். #Amritsartrainaccident #UNchiefGuterrescondole #CanadianPMTrudeaucondole  
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரப்பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் பலியானோர் குடும்பத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளனர். #UPTrainDerailed #TrainAccident #SoniaGandhi #RahulGandhi
  புதுடெல்லி:

  மேற்கு வங்காள மாநிலம் மால்டா நகரில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் வழியாக டெல்லிக்கு ‘நியூ பராக்கா எக்ஸ்பிரஸ்’ ரெயில் நேற்று இரவு புறப்பட்டது. இன்று காலை உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் ஹர்சந்த்பூர் ரெயில்நிலையம் அருகே வேகமாக சென்று கொண்டிருந்த போது திடீரென ரெயில் தடம் புரண்டது.

  என்ஜின் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த 9 பெட்டிகளும் ஒன்றுடன் ஒன்று மோதி தடம் புரண்டு கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 7 பயணிகள் பலத்த அடிபட்டு இறந்தனர். மேலும் 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

  ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரெயில் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.  இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

  உ.பி.யில் நடைபெற்ற ரெயில் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

  இதேபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில், உ.பி. ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகளில் மாநில அரசு விரைந்து ஈடுபட்டிருக்கும் என நம்புகிறேன். காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். #UPTrainDerailed #TrainAccident #SoniaGandhi #RahulGandhi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். #UPBusAccident #PMCondole
  புதுடெல்லி:

  உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி அருகே அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

  இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் கூறுகையில்,  உ.பி.யின் மெயின்புரி பகுதியில் நடைபெற்ற  சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார். #UPBusAccident #PMCondole
  ×