என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈகுவேடார்"

    • தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் அடுத்த மாதம் 16-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
    • அதிபருக்கு வழங்கிய சாக்லெட்டுகளை சோதனை செய்தபோது அதில் நச்சுப்பொருட்கள் இருப்பது தெரிந்தது.

    குயிட்டோ:

    தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் அதிபர் டேனியல் நோபோவா (37) தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது பதவிக் காலம் விரைவில் முடிய உள்ளதால் அடுத்த மாதம் 16-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    இதில் அவர் மீண்டும் போட்டியிடுவதால் நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் மற்றும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். அதன்படி சமீபத்தில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.

    அப்போது அன்பளிப்பாக அவருக்கு சாக்லெட்டுகள் வழங்கப்பட்டன. அந்த சாக்லெட்டுகளை சோதனை செய்தபோது அதில் அதிக செறிவூட்டப்பட்ட நச்சுப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    இதுகுறித்து அதிபர் டேனியல் நோபோவா கூறுகையில், இந்த சம்பவம் தற்செயலான நிகழ்வு அல்ல. எனவே விஷசாக்லெட் கொடுத்து தன்னை கொல்ல சதி நடப்பதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து அவரது பாதுகாப்புக்கு பொறுப்பான ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது.

    ஏற்கனவே எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக அரசாங்கத்தை கண்டித்து இந்த மாதம் போராட்டம் நடைபெற்றது. அப்போது அதிபர் டேனியல் சென்ற வாகனம் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கி–னர். அவரது வாகனத்தில் சில தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

    இந்த தாக்குதல் அதிபரை கொல்ல முயற்சி என ராணுவ மந்திரி கியான் கார்லோ லோப்ரெடோ கூறினார். தற்போது ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக அவரை கொல்ல சதி நடைபெற்ற சம்பவம் ஈகுவடார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • டீசல் மானியத்தை திரும்ப வழங்க கோரி தலைநகர் குயிட்டோவில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
    • போராட்டக்காரர்களின் அழுத்தத்துக்கு அரசாங்கம் அடிபணியாது.

    குயிட்டோ:

    தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் பட்ஜெட்டில் பல்வேறு செலவினங்களை அரசாங்கம் குறைத்துள்ளது.

    அந்தவகையில் டீசலுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்வதாக அதிபர் டேனியல் நோபோவா அறிவித்தார். இதனால் டீசலின் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரித்தது.

    இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. எனவே டீசல் மானியத்தை திரும்ப வழங்க கோரி தலைநகர் குயிட்டோவில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    அதேசமயம் அதிபர் டேனியல் நோபோவாவின் ஆதரவாளர்களும் அங்கு அதிகளவில் திரண்டனர். அப்போது அதிபருக்கு எதிராக முழக்கம் எழுப்பிய போராட்டக்காரர்கள் பாதுகாப்பு வளையத்தை மீறி அங்கிருந்த பூங்காவுக்குள் நுழைய முயன்றனர்.

    இதனால் ஏற்பட்ட வன்முறையில் பலருக்கு காயம் ஏற்பட்டது. எனவே போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    இதுகுறித்து அதிபர் டேனியல் நோபோவா சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், போராட்டக்காரர்களின் அழுத்தத்துக்கு அரசாங்கம் அடிபணியாது. மேலும் போராட்டத்தில் வன்முறையை கையில் எடுப்பவர்கள் குற்றவாளியாகவே கருதப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    எனினும் அதிபருக்கு எதிரான போராட்டம் பல இடங்களில் தீவிரமடைந்து வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 மாகாணங்களில் அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதிபர் மாளிகை உள்ளிட்ட முக்கிய இடங்கள் ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளன.

    • 2021 முதல் தற்போது வரை அங்கு 430 கைதிகள் சிறைக்குள்ளேயே கொல்லப்பட்டனர்
    • எஸ்.என்.ஏ.ஐ. அமைப்பு ஆயுத வேட்டையை நடத்தி, சில கைதிகளை இடம் மாற்றியது

    தென் அமெரிக்க கண்டத்தின் மேற்கு கடற்கரையோரம் உள்ள நாடு ஈக்வடார். இதன் தலைநகரம் குவிடோ.

    இந்நாட்டின் அண்டை நாடுகளான கொலம்பியா மற்றும் பெரு ஆகியவை உலகின் மிக பெரும் கொகைன் என் போதைப் பொருள் உற்பத்தியாளர்களாக இருந்த வருகின்றன. எனினும், ஈக்வடார் நாட்டில் சமீப காலம் வரை போதை பொருள் சம்பந்தமான சிக்கல்கள் தோன்றாமல் அமைதியான நாடாகவே இருந்து வந்தது. தற்போது அங்கு நிலைமை மாறி, போதை பொருள் கடத்தலில் ஒரு முக்கிய மையமாகவே இந்நாடு மாறி வருகிறது.

    போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் கொலம்பியா மற்றும் மெக்சிகோ நாட்டை சேர்ந்த பல்வேறு குழுக்களை சேர்ந்தவர்கள் அந்நாட்டு சிறையில் கைதிகளாக உள்ளனர். அவர்களுக்கிடையே சண்டைகள் நடந்து வருவது வழக்கம். அண்மைக் காலமாக அங்குள்ள சிறைச்சாலைகளில் ஒரு கும்பலை சேர்ந்த கைதிகள் மற்றொரு போட்டி கும்பலை தாக்குவதும், கூட்டாக கொல்வதும் அதிகரித்துள்ளது.

    2021 முதல் தற்போது வரை அங்கு 430 கைதிகள் சிறைக்குள்ளேயே கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்படுபவர்களின் உடல்கள் கூட முழுமையாக கிடைக்காமல் துண்டு துண்டுகளாக கிடைக்கிறது. அந்நாட்டில் சிறைச்சாலை மேற்பார்வையை எஸ்.என்.ஏ.ஐ. எனும் அமைப்பு நிர்வகித்து வருகிறது.

    எஸ்.என்.ஏ.ஐ. உத்தரவின் பேரில் சிறைச்சாலையில் கைதிகள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை தேடும் வேட்டை ஒன்று நடைபெற்று அனைத்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர் நடவடிக்கையாக பல கைதிகள் இடம் மாற்றி தங்க வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், தலைநகர் குவிடோவில் கையெறி குண்டு தாக்குதலும், சிறைச்சாலை மேற்பார்வையை கவனிக்கும் எஸ்.என்.ஏ.ஐ. அமைப்பின் தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஒரு காரிலும், அந்த அமைப்பு இயங்கிய அலுவலகத்தின் அருகில் ஒரு இடத்திலுமாக, 2 இடங்களில் குண்டு வெடிப்பும் நிகழ்ந்துள்ளது.

    இது சம்பந்தமாக கொலோம்பியா நாட்டை சேர்ந்த ஒருவர் உட்பட 6 பேரை காவல்துறை கைது செய்தது. இவர்கள் அனைவரும் முன்பே ஆள் கடத்தல், கொள்ளை, மற்றும் கொலைக்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. தங்கள் பலத்தை காட்ட இது போன்ற வன்முறை தாக்குதல்களில் இக்குழுக்கள் ஈடுபடுவது வழக்கம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் அந்நாட்டு சிறைச்சாலையை சேர்ந்த 6 சீர்திருத்த நிலையங்களில் உள்ள கைதிகள் உட்பட 57 சிறை காவலாளிகள் மற்றும் 7 சிறை அதிகாரிகளை, அங்குள்ள போதை பொருள் கடத்தல் சிறை கைதிகள், சிறைக்குள்ளேயே பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.

    அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஜுவான் ஜபாடா பணயமாக உள்ளவர்களின் பாதுகாப்பிற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    ×