என் மலர்
நீங்கள் தேடியது "assassination"
- 6மாதங்களுக்குமுன்பு ஏற்பட்ட தகராறு காரணமாகமுன் விரோதம் இருந்துவந்தது.
- கருணாகரன்திடீரென வழிமறித்து முருகனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே உள்ள கொக்குபாளையம் கிராமத்தைசேர்ந்த முருகன்(35)சூளை த்தொ ழிலாளி.இவருக்கும் அதே பகுதியைசேர்ந்த கருணாகர ன்என்பவருக்கும்இடையே 6மாதங்களுக்குமுன்பு ஏற்பட்ட தகராறு காரணமாகமுன் விரோதம் இருந்துவந்தது. இந்த நிலையில்முருகன் தான் வேலை செய்யு ம்சூளைஉரிமையாளர் சண்முகத்துடன் மோட்டா ர்சைக்கிளில் அங்குசெட்டி பாளையம்சென்றார்.
அவரைபின் தொடர்ந்துசென்ற கருணாகரன்திடீரென வழிமறித்து முருகனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.இதி ல்பலத்த காயமடைந்த முருகன் பண்ருட்டி அரசுமருத்துவ மனையில் சிகிச்சைக்காகசே ர்க்கப்பட்டார். பின் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசுமருத்துவமனைக்கு அழைத்து செல்லப்ப ட்டார்அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்துபுதுப்பேட்டை போலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து சண்முகம் அளித்தபுகாரின் பேரில் கருணாகரன் மீதுகொலை மிரட்டல் வழக்குபதி வுசெய்து கருணாகரனை கைது செய்து கோர்ட்டில்ஆஜர்படுத்தி சிறையில்அடைத்தனர்.
எகிப்து நாட்டின் மூத்த அரசு வக்கீலாக இருந்து வந்தவர் காசிம் பராகாத். இவர் பயங்கரவாதிகளுக்கு எதிரான வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகி, எண்ணற்ற பயங்கரவாதிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 29-ந் தேதி தலைநகர் கெய்ரோவில் காசிம் பராகாத் சென்று கொண்டிருந்த கார் மீது, பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரப்பிய காரை மோதி வெடிக்க செய்தனர். இந்த தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காசிம் பராகாத் கொலை வழக்கில் பயங்கரவாதிகள் 28 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணையில் 28 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, கடந்த 2017-ம் ஆண்டு அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், அந்த 28 பேரில் 9 பேருக்கு நேற்று முன்தினம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கெய்ரோவில் உள்ள சிறையில் 9 பேரும் தூக்கிலிடப்பட்டனர். இந்த மாதத்தில் மட்டும் இவர்களுடன் சேர்த்து மொத்தம் 15 பேருக்கு மரண நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேசப்பிதா மகாத்மா காந்தி, டெல்லி பிர்லா மாளிகையில், 1948-ம் ஆண்டு, ஜனவரி 30-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் நாதுராாம் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தே ஆகிய 2 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த படுகொலையில், மிகப்பெரிய அளவில் வரலாறு மூடி மறைக்கப்பட்டு விட்டதாக கூறி, இது தொடர்பாக முழுமையாக மறு விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டு, சுப்ரீம் கோர்ட்டில் மும்பையை சேர்ந்த ஆராய்ச்சியாளரும், அபினவ் பாரத் அறக்கட்டளையின் அறங்காவலருமான பங்கஜ் குமுத்சந்திர பத்னிஸ், கடந்த ஆண்டு ஒரு பொதுநல வழக்கு தொடுத்தார்.
அந்த வழக்கை அப்போது நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், எஸ்.ஏ. பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்துவிட்டது.

இந்த நிலையில் அவர் புதிய ஆதாரங்கள் அடிப்படையில் இந்த விவகாரத்தில் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் படியேறி வழக்கு தொடுத்து உள்ளார்.
அதில், மகாத்மா காந்தி உடலில் இருந்த காயங்கள் தொடர்பான படங்களின் தடயவியல் பரிசோதனை அறிக்கை மற்றும் சில புத்தக தகவல்களை புதிய ஆதாரங்களாகக் கொண்டு மகாத்மா காந்தி படுகொலையில் மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று கோரி உள்ளார்.
லாரன்ஸ் டி சல்வேடார் எழுதி 1963-ம் ஆண்டில் வெளியான ‘காந்தியை கொன்றது யார்?’, மவுண்ட் பேட்டன் பிரபுவின் மகள் பமீலா மவுண்ட் பேட்டன் எழுதி வெளியான ‘இந்தியா நினைவூட்டியது’ ஆகிய 2 புத்தகங்களில் உள்ள தகவல்களை வழக்கில் அவர் ஆதாரமாக சுட்டிக்காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அந்த புத்தகங்கள் மூலம், மகாத்மா காந்தி கொலை சதியில் அப்போது உயர்ந்த அதிகாரத்தில் இருந்த நபர் அல்லது நபர்கள் உடந்தையாக இருந்ததாக முடிவுக்கு வர முடிகிறது என கூறி உள்ளார்.
மேலும், மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட மறுநாளில் முக்கிய நாளிதழ் ஒன்றில் வெளியான படத்தில் அவரது நெஞ்சில் 4 காயங்கள் இருந்தது தெரிய வந்துள்ளதாகவும், அமெரிக்காவை சேர்ந்த புகழ் பெற்ற தடயவியல் வல்லுனர் அறிக்கையில் அது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வழக்கில் கூறப்பட்டுள்ளது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #MahatmaGandhi #ReviewPetition #SupremeCourt
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்போவதாக கடந்த 2014-ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.
இந்த முடிவை எதிர்த்து அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தது. அதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இதற்கிடையே, தாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் தமிழக அரசுக்கு மனு அளித்தனர்.
அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாகவும், அதற்கு ஒப்புதல் வழங்கவேண்டும் என்றும் கோரி மத்திய அரசுக்கு கடந்த 2016-ம் ஆண்டு கடிதம் எழுதியது.
கடந்த ஏப்ரல் 16-ந்தேதி இவர்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு வெளியிட்டது. அந்த உத்தரவில், ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட சில வெளிநாட்டு அமைப்புகளுக்கும் தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளதால் அவர்களை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்காது என்று கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் கோபால் சங்கரநாராயணன், பிரபு ராமசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் வாதத்தின் போது, மத்திய அரசு 7 பேர் விடுதலைக்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்து அரசாணை வெளியிட்டுள்ளதால் தற்போது நிலுவையில் உள்ள வழக்கை முடித்து வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இவர்கள் 7 பேரும் ஏற்கனவே தமிழக கவர்னருக்கு கருணை மனு ஒன்றை தாக்கல் செய்து இருப்பதாகவும், சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் அங்கு முடிவு ஏதும் எடுக்க முடியவில்லை என்பதால் இங்குள்ள வழக்கை முடித்து வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 7 பேரின் இடைக்கால மனுவை வரும் செப்டம்பர் 6-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உத்தரவு பிறப்பித்தனர். #RajivGandhi #Assassination