என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலைமிரட்டல்"

    • கமல்ஹாசன் எம்.பி. சென்னையில் நடந்த ஒரு விழாவில் சனாதனம் பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
    • கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான கமல்ஹாசன் எம்.பி. சென்னையில் நடந்த ஒரு விழாவில் சனாதனம் பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் துணை நடிகரான ரவி என்பவர் பேட்டி அளித்துள்ளார். அதில் கமல்ஹாசனின் சங்கை அறுப்போம் என்று கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்.

    இதனை கண்டித்து மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் துணைத்தலைவர் மவுரியா மற்றும் நிர்வாகிகள் கவிஞர் சினேகன், முரளி அப்பாஸ், மயில்வாகனன், அர்ஜுனர் ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தனர்.

    அதில் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • கடந்த ஜனவரி மாதம் அம்மாப்பேட்டையை சேர்ந்த ஒரு வாலிபருடன் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது.
    • பணத்தை வாங்கிய கோபால் கும்பல் அவரிடம் தொடர்ந்து பணம் பறிக்க முடிவு செய்தனர்.

    சேலம்:

    சேலம் அழகாபுரத்தை சேர்ந்தவர் சசிசேகர் (44), திருமணமாகி இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இவர் தருமபுரியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு சேலத்தில் உள்ள மற்றொரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்தார்.

    அப்போது அங்கு பணியாற்றிய திருமணமாகாத இளம்பெண் ஒருவருடன் சசிசேகர் பேசி பழகி வந்தார். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து அந்த பெண்ணுடன் சசிசேகர் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அம்மாப்பேட்டையை சேர்ந்த ஒரு வாலிபருடன் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது. திருமணமான 10 நாளில் அந்த பெண் வாந்தி எடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த புதுமாப்பிள்ளை மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அந்த இளம்பெண் 2 மாதம் கர்ப்பிணியாக இருப்பதாக கூறினர். இதனை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த அந்த இளம்பெண்ணின் கணவர் திருமணமாகி 10 நாளில் எப்படி 2 மாதம் கர்ப்பம் என்று மனைவியிடம் கேட்டார்.

    அப்போது கதறி அழுத அந்த இளம்பெண் என்னை மன்னித்து விடுங்கள் என கண்ணீர் விட்டு கதறினார். மேலும் தன்னுடன் வேலை பார்த்தவருடன் ஏற்பட்ட பழக்கம் குறித்த விவரத்தையும் கணவரிடம் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    இதையடுத்து கருவை கலைத்து விட முடிவு செய்த புது மாப்பிள்ளை சசிசேகரை தேடி சென்றார். அவர் அப்போது தனது நண்பரான கோபால் என்பவரையும் உடன் அழைத்து சென்றார். சசிசேகரை பிடித்து எச்சரித்த 2 பேரும் கருவை கலைக்க ரூ.80 ஆயிரம் பணம் கேட்டனர். கொடுக்காவிட்டால் போலீசில் புகார் கொடுக்கப்போவதாகவும் கூறினர்.

    இதனால் பயந்து போன சசிசேகர் உடனடியாக கேட்ட பணத்தை கொடுத்து விட்டார். பணத்தை வாங்கிய புதுமாப்பிள்ளை மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். பின்னர் வேறு யாருக்கும் தெரியாமல் கருவை கலைத்தார். தொடர்ந்து புது மாப்பிள்ளை, மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்தார்.

    இதையடுத்து புதுமாப்பிள்ளையுடன் சென்ற கோபால் சசிசேகரை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டார். அதன்படி சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடிகளான மோகன் என்ற பாஸ்ட் புட் மோகன், உலகநாதன், பூமாலை ராஜன் ஆகிய 3 பேரை அழைத்து கொண்டு மீண்டும் சசி சேகரை கோபால் சந்தித்தார்.

    அப்போது மேலும் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினர். கேட்ட பணத்தை கொடுக்கவில்லை என்றால் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிடுவோம் , பின்னர் நீ சிறைக்கு சென்று விடுவாய் என்று மிரட்டினர். இதனால் பயந்து போன சசிசேகர் ரூ.9 லட்சம் பணத்தை கொடுத்தார்.

    பணத்தை வாங்கிய கோபால் கும்பல் அவரிடம் தொடர்ந்து பணம் பறிக்க முடிவு செய்தனர். அதன்படி மேலும் ரூ.10 லட்சம் பணம் கொடுத்தால் இந்த பிரச்சனையை முடித்து விடலாம் இல்லை என்றால் சிக்கலில் இருந்து தப்பிக்கவே முடியாது என்று மிரட்டினர்.

    இதனால் செய்வதறியாது திகைத்த சசிசேகர் ஏற்கனவே இந்த பிரச்சனைக்கு ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் கொடுத்த நிலையில் மேலும் ரூ.10 லட்சம் கொடுக்க முடியாது என்று கூறிய நிலையில் பயந்து போன அவர் போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்தார். அதன்படி அழகாபுரம் போலீசில் புகார் கொடுத்த அவர் இந்த பிரச்சனையில் இருந்து தன்னை காப்பாற்றுமாறு கதறினார்.

    அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் அந்த பெண்ணின் கணவரின் நண்பரான கோபால் மற்றும் பிரபல ரவுடிகளான மோகன் என்ற பாஸ்ட் புட் மோகன், பூமாலை ராஜன், உலகநாதன் ஆகிய 4 பேர் மீதும் மிரட்டி ரூ.9 லட்சம் பணம் பறித்ததாக வழக்கு பதிவு செய்து அவர்களை தேடினர். அப்போது 4 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். வழக்கு பதிவு செய்யப்பட்ட கோபால் தவிர மற்ற 3 பேர் மீதும் சேலம் டவுன், அழகாபுரம் போலீஸ் நிலையங்களில் 5-க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மனோஜ் அன்னதாசம்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கிட்டான் என்பவரது தோட்டத்தில் டிராக்டர் ஓட்டியுள்ளார்.
    • கார்த்திக் மற்றும் அவரது நண்பர் தாமோதரன் ஆகியோர் சேர்ந்து மனோஜை தாக்கினர்.

    அன்னூர்,

    கோவை மாவட்டம், அன்னூரை அடுத்துள்ள கஞ்சப்பள்ளி நத்தமேட்டுத்தோட்டத்தை சேர்ந்தவர் மனோஜ்(32). இவர் டிராக்டர் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.

    மனோஜ் அன்னதாசம்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கிட்டான் என்பவரது தோட்டத்தில் டிராக்டர் ஓட்டியுள்ளார். இதற்கான வாடகை பணத்தை அவரிடம் கேட்டார். அப்போது அவர்கள், நீங்கள் கூறியதாக கார்த்திக் என்பவர் வந்து பணத்தை பெற்று சென்றதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து மனோஜ் மற்றும் வெங்கிட்டான், அவரது மனைவி துளசியம்மாள் ஆகியோர் கார்த்திக்கை நேரில் சந்தித்து இதுகுறித்து கேட்டனர்.

    அப்போது கார்த்திக் மற்றும் அவரது நண்பர் தாமோதரன் ஆகியோர் சேர்ந்து மனோஜை தாக்கினர். மேலும் அவருக்கு கொலைமிரட்டலும் விடுத்தனர். இதுகுறித்து மனோஜ் அன்னூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக், தாமோதரன் உள்ளிட்ட 2 பேரையும் கைது செய்தனர்.பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சிதம்பரம் மதுவிலக்கு அமல் பிரிவு முதல்நிலை காவலர் ராஜசேகர்.
    • ராஜசேகரை ஆபாசமாக திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்து கொலைமிரட்டல் விடுத்தார்.

    கடலூர்:

    சிதம்பரம் மதுவிலக்கு அமல் பிரிவு முதல்நிலை காவலர் ராஜசேகர்.இவர், கடலுார் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில், தலைமைக் காவலர் கண்ணன் என்பவருடன் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தார்.அப்போது, அந்த வழியாக நடந்து வந்த மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த சீனுவாசன், (வயது42) என்பவரை நிறுத்தி சோதனை செய்தார்.இதனால் ஆத்திரமடைந்த அவர், ராஜசேகரை ஆபாசமாக திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்து கொலைமிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், புதுநகர் போலீசார், சீனுவாசன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • 6மாதங்களுக்குமுன்பு ஏற்பட்ட தகராறு காரணமாகமுன் விரோதம் இருந்துவந்தது.
    • கருணாகரன்திடீரென வழிமறித்து முருகனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே உள்ள கொக்குபாளையம் கிராமத்தைசேர்ந்த முருகன்(35)சூளை த்தொ ழிலாளி.இவருக்கும் அதே பகுதியைசேர்ந்த கருணாகர ன்என்பவருக்கும்இடையே 6மாதங்களுக்குமுன்பு ஏற்பட்ட தகராறு காரணமாகமுன் விரோதம் இருந்துவந்தது. இந்த நிலையில்முருகன் தான் வேலை செய்யு ம்சூளைஉரிமையாளர் சண்முகத்துடன் மோட்டா ர்சைக்கிளில் அங்குசெட்டி பாளையம்சென்றார்.

    அவரைபின் தொடர்ந்துசென்ற கருணாகரன்திடீரென வழிமறித்து முருகனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.இதி ல்பலத்த காயமடைந்த முருகன் பண்ருட்டி அரசுமருத்துவ மனையில் சிகிச்சைக்காகசே ர்க்கப்பட்டார். பின் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசுமருத்துவமனைக்கு அழைத்து செல்லப்ப ட்டார்அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்துபுதுப்பேட்டை போலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து சண்முகம் அளித்தபுகாரின் பேரில் கருணாகரன் மீதுகொலை மிரட்டல் வழக்குபதி வுசெய்து கருணாகரனை கைது செய்து கோர்ட்டில்ஆஜர்படுத்தி சிறையில்அடைத்தனர்.

    • பெண் வன்கொடுமை சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
    • திருமணமான 2½ மாதத்தில் மனைவியை கணவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி 2-வது தெருவைச் சேர்ந்தவர் அஜித்ராம் பிரதீப் (வயது 33). இவர் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    அஜித்ராம் பிரதீப்புக்கும் வெட்டூர்ணிமடத்தைச் சேர்ந்த சுவிதா கண்ணன் (28) என்பவருக்கும் கடந்த 2½ மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதன் பிறகு அவர்கள் என்.ஜி.ஓ. காலனியில் வசித்து வந்த னர்.

    இந்த நிலையில் அஜித் ராம் பிரதீப்புக்கு கடன் பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. எனவே அவர் மனைவியிடம் பணம் கேட்டு உள்ளார். இது தொடர்பாக அவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

    சம்பவத்தன்று சுவிதா கண்ணனிடம் மீண்டும் பணம் கேட்டு அஜித்ராம் பிரதீப் தகராறு செய்து உள்ளார். அப்போது அவர் மனைவியை தாக்கியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து சுவிதா கண்ணன் தனது தந்தைக்கு தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்து சுவிதா கண்ணனை மீட்டு, சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். இது தொடர்பாக சுசீந்திரம் போலீசில் சுவிதா கண்ணன் புகார் செய்தார். அதில் உனது தந்தை வீட்டு பத்திரத்தை மாற்றி தர வேண்டும். இல்லாவிட்டால் கொலை செய்து விடுவேன் என கணவர்மிரட்டியதாகவும் தன்னை தாக்கியதாகவும் குறிப்பிட்டு உள்ளார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் அஜித்ராம் பிரதீப் மீது, பெண் வன்கொடுமை சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    திருமணமான 2½ மாதத்தில் மனைவியை கணவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இவர் தன் ஊரைசேர்ந்த மணிமாறன் என்பவர் இல்ல திருமண விழாவிற்கு டிஜிட்டல் பேனர் வைத்திருந்தார்,
    • ஆகாஷை அசிங்கமாக திட்டி கையால் முகத்தில் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்

    கடலூர்:  

    பண்ருட்டி அடுத்த அங்கு செட்டிபாளையம் பழைய காலணி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 22). இவர்,அதே ஊரைசேர்ந்த மணிமாறன் என்பவர் இல்ல திருமண விழாவிற்கு டிஜிட்டல் பேனர் வைத்திருந்தார். அதற்கு அதே ஒரு சேர்ந்த மதிவாணன் என்பவர் எதற்கு இவனுக்கெல்லாம் பேனர் வைக்கிறாய் என கேட்டு ஆகாஷை அசிங்கமாக திட்டி கையால் முகத்தில் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்

    இதுகுறித்து ஆகாஷ் கொடுத்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து மதிவாணனை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • பூங்கொடி என்பவர் இடத்தில் இருந்த முந்திரி மரங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
    • பூங்கொடிையஅந்த ஊழியர் மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த எம். புதூர் பகுதியில் செம்மண் குவாரிக்கு லை அமைப்பதற்காக தனியார் கம்பெனி ஊழியர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் பணிகள் மேற்கொண்டு இருந்தார். அப்போது அங்கு பூங்கொடி என்பவர் இடத்தில் இருந்த முந்திரி மரங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பூங்கொடி சம்பந்தப்பட்ட ஊழியரிடம் சென்று கேட்டார். அப்போது பூங்கொடிையஅந்த ஊழியர் மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் பூங்கொடி கொடுத்த புகாரின் பேரில் தனியார் கம்பெனி மேலாளர் டெல்லி பாபு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் அடுத்த தோட்டப்பட்டு பகுதியில் புதிதாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது.
    • இங்கு ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஷேர் அலி என்பவர் வேலை செய்து வந்தார்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த தோட்டப்பட்டு பகுதியில் புதிதாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. இங்கு ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஷேர் அலி என்பவர் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று 2 நபர்கள் திடீரென்று ஷேர் அலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த ஷேர் அலி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் தோட்டப்பட்டு சேர்ந்த வெங்கடாஜலபதி உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பணியில் இருந்த ஏட்டுக்கும் கொலைமிரட்டல் விடுத்ததாக புகார்
    • சதீஷ் அடிக்கடி குடித்து விட்டு வந்து தன்னிடம் தகராறு செய்வதாக மனைவி தேவி தெரிவித்தார்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடி வீஸ்வ ரன் தோப்பு வணிகர் தெரு வைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி தேவி (வயது 22). குடி பழக்கத்திற்கு அடி மையான சதீஷ், அடி க்கடி தகராறு செய்து மனை வியை தாக்கியதாக கூறப்ப டுகிறது.நேற்று வடசேரி மகளிர் போலீஸ் நிலையம் முன்பு சதீஷ், தனது மனைவி தேவியின் தலைமுடியை பிடித்து இழுந்து வந்ததோடு தாக்குதலிலும் ஈடுபட் டுள்ளார். இதனை மகளிர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் ரோஸ்பின் ஜெபராணி, கண்டித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், மீண்டும் மனைவியை தாக்கியதோடு, போலீஸ் ஏட்டு ரோஸ்பின் ஜெப ராணியை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த தாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏட்டு ரோஸ் பின் ஜெபராணி, போலீ சில் புகார் கொடுத்தார்.

    அதில், தான் பணியில் இருந்த போது, சதீஷ் அங்கு தனது மனைவி தேவியின் தலைமுடியை பிடித்து இழுத்து வந்தார். இதனை நான் கேட்ட போது, கணவர் சதீஷ் அடிக்கடி குடித்து விட்டு வந்து தன்னிடம் தகராறு செய்வதாக மனைவி தேவி தெரிவித்தார். அப்போது சதீஷ் திடீரென மீண்டும் தேவியை தாக்கினார். இதனை நான் கண்டித்த போது, அவதூறாக பேசியதோடு, என்னை பணி செய்யவிடாமல் தடுத்து கொலைமிரட்டலும் விடுத்தார் என குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெசிமேனகா, குமார் ஆகியோர் விசாரணை நடத்தி சதீஷ் மீது வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மகளிர் போலீஸ் நிலையம் முன்பு மனைவியை தாக்கிய கணவர், போலீஸ் ஏட்டுக்கும் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வளர்ச்சியை பிடிக்காமல் சிலர் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
    • அபினவ் அரோரா பக்தியை தவிர வேறு எதுவும் செய்ய வில்லை.

    மதுரா:

    உத்தரபிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்தவர் அபினவ் அரோரா (வயது10). ஆன்மீக சொற்பொழிவில் மிகவும் பிரபலமானவர். 3 வயதில் இருந்தே ஆன்மீக சொற்பொழிவில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    சமூக வலைதளங்களில் அபினவ் அரோராவின் ஆன்மீக சொற்பொழிவு பிரபலமாக பரவி வருகிறது.


    இந்த நிலையில் அவருக்கு செல்போனில் கொலை மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மிரட்டல் குறித்து அவரது தாயார் ஜோதி அரோரா கூறியிருப்பதாவது:-

    லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து அபினவ் அரோராவுக்கு மிரட்டல் வந்துள்ளது. அபினவ் அரோரா பக்தியை தவிர வேறு எதுவும் செய்யவில்லை.

    சமூக வலைதளங்களில் அவரது ஆன்மீக சொற்பொழிவு பிரபலமாகி வருகிறது. அவரது வளர்ச்சியை பிடிக்காமல் சிலர் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    பிரபல ஆன்மீக தலைவர் சுவாமி ராம பத்ராச்சார்யாவுடன் அபினவ் அரோரா பக்தி பாடல்களை பாடுவது மற்றும் நடனம் ஆடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது

    இந்த நிலையில் அவருக்கு மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விருதுநகர் அருகே வத்திராயிருப்பில் போலீஸ்காரருக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டது.
    • இது சம்பந்தமாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றுபவர் முனியாண்டி. இவர் சம்பவத்தன்று வ.புதுப்பட்டி பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பாரதி, ரஞ்சித்குமார், முத்துகுமார், வசந்த், வினீத் ஆகிய 5 பேர் அந்த பகுதியில் ரோந்து வரக்கூடாது என போலீஸ்காரரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் போலீஸ்காரர் முனியாண்டி மீது கம்பு, கற்களை வீசி அந்த கும்பல் தாக்கியுள்ளது.

    இதுகுறித்து முனியாண்டி வத்திராயிருப்பு போலீசில் புகார் செய்தார். அதில் மேற்கண்ட 5 பேர் தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு கல்வீசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×