என் மலர்
நீங்கள் தேடியது "vehicle inspection"
- கிருஷ்ணசாமி (71). பாலக்கரை அருகே உள்ள தேசிய உடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் நகையை அடமானம் வைத்து 1 ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
- இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள் கிருஷ்ணசாமியிடம் பணப்பையை பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.
திருச்சி
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (71). இவர் கடந்த 7 -ந்தேதி துறையூர் பாலக்கரை அருகே உள்ள தேசிய உடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் நகையை அடமானம் வைத்து 1 ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
பிறகு பணத்தை ஒரு பையில் வைத்துக்கொண்டு பாலக்கரை அருகே வரும் பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள் பணப்பையை பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக கிருஷ்ணசாமி அளித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று சொரத்தூர் பிரிவு சாலை அருகே துறையூர் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர்.
அப்பொழுது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்களை மறித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனையடுத்து இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் ஒரு நபர் பொள்ளாச்சி அருகே உள்ள அங்காளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த தினேஷ் குமார் (22) என்பதும், மற்றொரு நபர் பெரம்பலூர் அருகே உள்ள விளாமுத்தூர் கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய வாலிபர் என்பதும் இருவரும் சேர்ந்து கிருஷ்ணசாமி என்பவரிடம் பணப்பையை பறித்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனை அடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3 இரு சக்கர வாகனம், பணம் ரூபாய் 2000 ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு தினேஷ் குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 17 வயதுடைய வாலிபரை கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.
- 300-க்கும் மேற்பட்ட வாகனங்களை இரவு முழுவதும் சோதனை செய்தனர்.
- குன்னூர் வட்டாட்சியர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
குன்னூர்,
நீலகிரி மாவட்டத்திற்கு நுழைவாயிலாக பர்லியார் சோதனை சாவடி உள்ளது. குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த சோதனை சாவடியில் திடீரென்று இரவு முழுவதும் குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையக்கூடிய வாகனங்கள் குன்னூர் நகரம் வழியாக தான் செல்ல வேண்டும். வெளி மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் பர்லியார் சோதனை சாவடி வழியாகத்தான் மாவட்டத்திற்குள் நுழைய முடியும்.
இதையடுத்து இந்த ேசாதனை சாவடியில் வருவாய்த்துறையினர் இரவில் வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட வாகனங்களை இரவு முழுவதும் சோதனை செய்தனர். வாகனங்களில் ஏதாவது தேவையற்ற பொருட்கள் எடுத்து வரப்படுகிறதா, அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் ஏதாவது எடுத்து வரப்படுகிறதா என வாகனங்களை ஆய்வு செய்தபின்னர் உள்ளே வர அனுமதித்தனர்.
இதில் குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர், வருவாய் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் பலர் இரவு முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- திண்டிவனத்தில் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
- குற்றவாளிகள் யாரேனும் இருக்கிறா ர்களா? என எப்.ஆர்.எஸ். என்ற செயலி மூலம் கண்டறிந்தனர்.
விழுப்புரம்:
கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு நடந்தது. இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு நிபுணர்கள் திண்டிவனம் ெரயில் நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இதனை தொடர்ந்து திண்டிவனம்- மரக்காணம் சாலையில் திண்டிவனம் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் லட்சுமி நாராயணன், தலைமை போலீ சார் அன்புவேல், சோலை, போலீசார் அய்யனார், அப்துல் ரசீத் மற்றும் போலீ சார் தீவிர வாத தடுப்பு முன்னெச்சரிக்கையாக வாகன சோத னையில் ஈடுபட்டனர்.
சந்தேகம் படும்படியான நபர்கள் யாரேனும் வருகி றார்களா? எனவும் சோத னையில் ஈடுபட்ட போலீசார் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் குற்றவாளி கள் யாரேனும் இருக்கிறா ர்களா? என எப்.ஆர்.எஸ். என்ற செயலி மூலம் கண்டறிந்தனர். மேலும் சரியான ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம் முழு வதும் வாகன சோதனை நடைபெறுவது குறிப்பிட த்தக்கது.
- வாகன சோதனையில் சிக்கினர்
- 2 பைக்குகள், 2 பவுன் செயின் பறிமுதல்
அரக்கோணம்:
அரக்கோணம் டவுன் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூர்ரோடு சில்வர் பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த பைக்கில் வந்த 3 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினர்.
அவர்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தபோது அவர்கள் அரக்கோணத்தை அடுத்த மோசூர் பகுதியை சேர்ந்த சத்தியா என்கிற சக்தி (வயது 23), தக்கோ லத்தை அடுத்த உரியூரை சேர்ந்த நரேஷ் (25), பிரகாஷ் (20) என்பது தெரிய வந்தது.
இதில் சக்தி மீதுபல்வேறு வழக்குகள் இருப்பதும், 3 பேரும் நகை பறிப்பு, மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 1/2 பவுன் செயின் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
திமிரி போலீசார் ஆற்காடு அடுத்த காவனூர் கூட்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆற்காடு நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்யறனர்.
அதில் வந்த நபர்கள் நிற்காமல் சென்று விட்ட னர். பின்னர் போலீசார் அவர்களை விரட்டி சென்றனர். இதனால் கென்னடிபாளையம் செல்லும் வழியில் மோட் டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு மர்மகும்பல் தப்பிச் சென்று விட்டனர்.
அதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையை சோதனை செய்தனர்.
அப்போது சுமார் 5 கிலோ எடை கொண்ட சந்தன கட்டைகள் இருப்பது தெரியவந்தது. மோட்டார் சைக்கிள் மற்றும் சந்தன கட்டை களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிதம்பரம் மதுவிலக்கு அமல் பிரிவு முதல்நிலை காவலர் ராஜசேகர்.
- ராஜசேகரை ஆபாசமாக திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்து கொலைமிரட்டல் விடுத்தார்.
கடலூர்:
சிதம்பரம் மதுவிலக்கு அமல் பிரிவு முதல்நிலை காவலர் ராஜசேகர்.இவர், கடலுார் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில், தலைமைக் காவலர் கண்ணன் என்பவருடன் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தார்.அப்போது, அந்த வழியாக நடந்து வந்த மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த சீனுவாசன், (வயது42) என்பவரை நிறுத்தி சோதனை செய்தார்.இதனால் ஆத்திரமடைந்த அவர், ராஜசேகரை ஆபாசமாக திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்து கொலைமிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், புதுநகர் போலீசார், சீனுவாசன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
- மாவட்டம் முழுவதும் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- ரெயில்கள் மற்றும் தண்டவாளத்தில் சோதனை மேற்கொண்டனர்.
கோவை
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கோவையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மநகரில் 2,500 போலீசார், புறநகர் மாவட்டத்தில் 1000 போலீசார் என மாவட்டம் முழுவதும் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பெரியக்கடை வீதி, ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, டவுன்ஹால், காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, சாய்பாபா காலனி ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் போலீசார் காந்திபுரத்தில் உள்ள நகர மற்றும் வெளியூர் பஸ் நிலையங்கள், சிங்காநல்லூர் பஸ் நிலையம், மேட்டுப்பாளையம் ஊட்டி பஸ் நிலையம் ஆகிய இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதேபோல மாநகரில் உள்ள தண்டுமாரியம்மன் கோவில், கோனியம்மன் கோவில், கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும், தேவாலயங்கள், மசூதிகளில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.
கோவை ரெயில் நிலையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை போலீசார் தீவிர சோதனை செய்த பின்னரே ரெயில் நிலையத்துக்கு செல்ல அனுமதிக்கின்றனர். மேலும் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை தீவிரமாக சோதனை செய்தனர். ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பிளாட்பாரத்தில் ரோந்து சென்று கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடக்டர் உதவியுடன் ரெயில்கள் மற்றும் தண்டவாளத்தில் சோதனை மேற்கொண்டனர்.
இதேபோல கோவை ரெயில் நிலையத்திலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறனர். மேலும் விமான நிலையத்துக்கு வரும் பயணிகளை பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை செய்த பின்னரே விமான நிலையத்துக்குள் செல்ல அனுமதிக்கின்றனர்.
கோவை நகரில் இரவு முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். புறநகர் மாவட்ட பகுதியில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- நெல்லையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி போலீசார் ரோந்து பணிகளை அதிகப்படுத்தி உள்ளனர்.
- சோதனையில் ‘நம்பர் பிளேட்’ இல்லாத மோட்டார் சைக்கிள்கள் உள்பட சுமார் 77 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நெல்லை:
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி நெல்லையில் போலீசார் ரோந்து பணிகளை அதிகப்படுத்தி உள்ளனர்.
குறிப்பாக மாநகர பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ஜவுளிக்கடைகள், தியேட்டர்கள் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையொட்டி மாநகர பகுதியில் உள்ள டவுன், சந்திப்பு, தச்சநல்லூர், பாளை, கே.டி.சி.நகர், பெருமாள்புரம், டக்கம்மாள்புரம், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்த போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் உத்தரவிட்டார்.
அதன்படி கிழக்கு மண்டல துணை கமிஷனர் சீனிவாசன் மற்றும் மேற்கு மண்டல துணை கமிஷனர் சரவணக்குமார் ஆகியோரின் அறிவுறுத்தலின்பேரில் மாநகரில் நேற்றிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
நள்ளிரவு வரையில் நடைபெற்ற இந்த சோதனையில் 'நம்பர் பிளேட்' இல்லாத மோட்டார் சைக்கிள்கள் உள்பட சுமார் 77 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- வடக்கு வாசல் பகுதியில் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- மாட்டு வண்டியில் உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை வழி மறித்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் மாட்டுவண்டியை ஓட்டி வந்தவரிடம் நடத்தி விசாரணையில், அவர் தஞ்சை வடக்கு அலங்கத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 35) என்பதும், ஆற்றில் மணல் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாலசுப்ரமணியனை கைது செய்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.
- வெண்ணாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- ஒளிமதி ஓடத்துறை பஸ் நிறுத்தப் பகுதியில் வேகமாக வந்த லோடு வேனை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
திருவாரூர்:
நீடாமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் மற்றும் போலீசார் சம்பவத்தன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒளிமதி ஓடத்துறை பஸ் நிறுத்தப் பகுதியில் வேகமாக வந்த லோடு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் மணல் இருந்தது தெரிய வந்தது. பின்னர் லோடு வேனில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அவர் ஓடத்துறை தெற்குத் தெருவைச் சேர்ந்த கவின்ராஜ் (வயது34) என்பதும், வெண்ணாற்றில் இருந்து அனுமதியின்றி லோடுவேனில் மணல் அள்ளி சென்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவின்ராஜை கைது செய்தனர். மேலும் லோடு வேனை பறிமுதல் செய்தனர்.
- கத்தியை காட்டி மிரட்டி ரம்யா அணிந்திருந்த நகையை பறித்து சென்றனர்.
- கொள்ளையர்கள் வாகன சோதனையில் சிக்கினர்.
வல்லம்:
தஞ்சை அருகே உள்ள ஆலக்குடியை சேர்ந்தவர் ரம்யா (வயது 32). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த மாதம் 1- ம் தேதி அன்று வேலை முடிந்து மொபட்டில் வீடு திரும்பினார்.
அவர் ஆலக்குடி ரெயில்வே ஸ்டேஷன் அருகே சென்ற போது பின்னால் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரம்யா அணிந்திருந்த தங்க செயின் மற்றும் செல்போனை பறித்து கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து ரம்யா வல்லம் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் கொள்ளையர்களை பிடிக்க வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா மேற்பார்வையில் வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சிறப்பு உதவி சப்இன்ஸ்பெக்டர சாமிநாதன், போலீஸார் புவனேஸ், ராஜதுரை, ரஞ்சித்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று தஞ்சை அருகே எட்டாம் நம்பர் கரம்பை அருகே தனிப்படை போலீஸார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் தஞ்சை அண்ணா நகரை சேர்ந்த கபினேஷ் (வயது 21 ), தஞ்சை நாவலர் நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் (23) என்பதும், ரம்யாவிடம் செல்போன் மற்றும் நகைகளை பறித்து சென்ற கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வல்லம் இன்ஸ்பெ க்டர் செந்தில்கு மார் மற்றும் போலீஸார் வழக்கு பதிவு செய்து கபினே ஷ்,ரவிச்ச ந்திரன் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தஞ்சை கிளை சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடை ய மேலும் 2 பேரை போலீ சார் தேடி வருகின்றனர்.
- விழுப்புரம் மாவட்டம் முழுவதும் குற்ற சம்பவங்களை குறைக்கும் பொருட்டு வாகன சோதனையில் ஈடுபட்டனர்
- போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் விடிய விடிய திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.எப்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் குற்ற சம்பவங்களை குறைக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் திண்டிவனம் டி.எஸ்.பி.சுரேஷ் பாண்டியன் மேற்பார்வையில் திண்டிவனம்- மரக்காணம் சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ராஜ் தலைமையில் போலீஸ்காரர்கள் வசந்த ராஜ், அய்யனார், முருகானந்தம், ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அதேபோல விழுப்புரம் மாவட்டம்ரோசனை, ஒலக்கூர், வெளிமேடு பேட்டை, மயிலம், போன்ற பல்வேறு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் விடிய விடிய திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.எப்.ஆர். எஸ். (குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் கருவி)போலீசார் சோ தனையில் ஈடுபட்டனர் மேலும் முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.