பைக்கில் கடத்திய சந்தன கட்டைகள் பறிமுதல்

விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்போலீசார் விசாரணை
பறிமுதல் செய்யப்பட்ட சந்தன கட்டைகள்.
பறிமுதல் செய்யப்பட்ட சந்தன கட்டைகள்.
Published on

ஆற்காடு:

திமிரி போலீசார் ஆற்காடு அடுத்த காவனூர் கூட்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆற்காடு நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்யறனர்.

அதில் வந்த நபர்கள் நிற்காமல் சென்று விட்ட னர். பின்னர் போலீசார் அவர்களை விரட்டி சென்றனர். இதனால் கென்னடிபாளையம் செல்லும் வழியில் மோட் டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு மர்மகும்பல் தப்பிச் சென்று விட்டனர்.

அதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையை சோதனை செய்தனர்.

அப்போது சுமார் 5 கிலோ எடை கொண்ட சந்தன கட்டைகள் இருப்பது தெரியவந்தது. மோட்டார் சைக்கிள் மற்றும் சந்தன கட்டை களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com