search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் விடிய, விடிய வாகன சோதனை
    X

    கோவையில் விடிய, விடிய வாகன சோதனை

    • மாவட்டம் முழுவதும் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
    • ரெயில்கள் மற்றும் தண்டவாளத்தில் சோதனை மேற்கொண்டனர்.

    கோவை

    பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    கோவையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மநகரில் 2,500 போலீசார், புறநகர் மாவட்டத்தில் 1000 போலீசார் என மாவட்டம் முழுவதும் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பெரியக்கடை வீதி, ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, டவுன்ஹால், காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, சாய்பாபா காலனி ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் போலீசார் காந்திபுரத்தில் உள்ள நகர மற்றும் வெளியூர் பஸ் நிலையங்கள், சிங்காநல்லூர் பஸ் நிலையம், மேட்டுப்பாளையம் ஊட்டி பஸ் நிலையம் ஆகிய இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதேபோல மாநகரில் உள்ள தண்டுமாரியம்மன் கோவில், கோனியம்மன் கோவில், கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும், தேவாலயங்கள், மசூதிகளில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    கோவை ரெயில் நிலையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை போலீசார் தீவிர சோதனை செய்த பின்னரே ரெயில் நிலையத்துக்கு செல்ல அனுமதிக்கின்றனர். மேலும் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை தீவிரமாக சோதனை செய்தனர். ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பிளாட்பாரத்தில் ரோந்து சென்று கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடக்டர் உதவியுடன் ரெயில்கள் மற்றும் தண்டவாளத்தில் சோதனை மேற்கொண்டனர்.

    இதேபோல கோவை ரெயில் நிலையத்திலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறனர். மேலும் விமான நிலையத்துக்கு வரும் பயணிகளை பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை செய்த பின்னரே விமான நிலையத்துக்குள் செல்ல அனுமதிக்கின்றனர்.

    கோவை நகரில் இரவு முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். புறநகர் மாவட்ட பகுதியில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×