தஞ்சையில் மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் கைது

வடக்கு வாசல் பகுதியில் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.மாட்டு வண்டியில் உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
தஞ்சையில் மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் கைது
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை வழி மறித்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் மாட்டுவண்டியை ஓட்டி வந்தவரிடம் நடத்தி விசாரணையில், அவர் தஞ்சை வடக்கு அலங்கத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 35) என்பதும், ஆற்றில் மணல் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாலசுப்ரமணியனை கைது செய்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com