என் மலர்
நீங்கள் தேடியது "மாட்டு வண்டி"
- ஒரு சில கிராமங்களில் தங்கள் பாரம்பரியத்தை மறக்காமல் மாட்டு வண்டிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
- திருமணமான புதுமண தம்பதியினர் ஒன்றாக மாட்டு வண்டியில் பயணம் செய்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 35 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாட்டு வண்டிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தன.
பொருட்கள் ஏற்றி செல்வது, எங்காவது ஊருக்கு செல்வது என எல்லா பணிகளுக்கும் மாட்டு வண்டிகளே பயன்படுத்தப்பட்டு வந்தது.
இதுமட்டுமின்றி அந்த காலத்தில் திருமணம் முடிந்தவுடன், மணமக்கள் மாட்டு வண்டிகளில் பயணம் செய்து ஊர்வலமாக தங்களது வீட்டிற்கு செல்வர். இப்படி அனைத்து பயன்பாட்டிலும் மாட்டு வண்டிகள் முக்கியத்துவம் பெற்று இருந்தது.
ஆனால் காலப்போக்கில் அவை எல்லாம் மறைந்து வருகிறது. இருப்பினும் இப்போது ஒரு சில கிராமங்களில் தங்கள் பாரம்பரியத்தை மறக்காமல் மாட்டு வண்டிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
அத்துடன் காளை மாடுகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சில இளைஞர்கள் தங்கள் திருமணத்தின் போது பழமையை மறக்காமல் மாட்டு வண்டியில் பயணம் செய்வதை இப்போதும் விரும்புகிறார்கள்.
இந்த நிலையில் பொள்ளாச்சியை சேர்ந்த வாலிபர் தனது திருமணம் முடிந்தவுடன் புது மனைவியுடன் மாட்டு வண்டியில் அமர வைத்து தனது வீட்டிற்கு கூட்டி சென்றுள்ளார்.
பொள்ளாச்சி அருகே உள்ள அர்த்தநாரிபாளையத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாஷ். இவருக்கும், கோவையை சேர்ந்த காவியா என்பவருக்கும் நேற்று பொள்ளாச்சி அடுத்த கரட்டு மடத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்தவுடன் மணமகன், தனது புதுமனைவியை தனது பூர்வீக வீடான அர்த்தநாரிபாளையத்திற்கு மாட்டு வண்டியிலேயே பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி திருமணமான கையோடு, தனது மனைவி காவியாவை மாட்டு வண்டியிலேயே அமர வைத்து கூட்டி சென்றார். கரட்டு மடத்தில் இருந்து அர்த்தநாரிபாளையம் வரையிலும் 5 கி.மீட்டர் தூரத்துக்கு மணமகனே மாட்டு வண்டியை ஓட்டி சென்றார். திருமணமான புதுமண தம்பதியினர் ஒன்றாக மாட்டு வண்டியில் பயணம் செய்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.
- வடக்கு வாசல் பகுதியில் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- மாட்டு வண்டியில் உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை வழி மறித்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் மாட்டுவண்டியை ஓட்டி வந்தவரிடம் நடத்தி விசாரணையில், அவர் தஞ்சை வடக்கு அலங்கத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 35) என்பதும், ஆற்றில் மணல் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாலசுப்ரமணியனை கைது செய்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.
- செயற்கை உரங்களை அகற்றி இயற்கை உரங்களை போட்டு விவசாயத்தை காக்க வேண்டும் என்று விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்கள்.
- திருநாவலூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.
உளுந்தூர்பேட்டை:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மயிலாடி கிராமத்தைச் சேர்ந்தவர்பிரதாப் லிவி (வயது 25) இவருடைய மனைவி அனு ஸ்ரீ.இவர்கள் விவசாயத்தை காப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாட்டு வண்டியில் குமரியில் இருந்து சென்னைக்கு பயணமாக புறப்பட்டனர். குழந்தைகளோடு கடந்த ஜனவரி 11-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து மாட்டு வண்டியில் புறப்பட்டு ஒரு நாள் ஒன்றுக்கு 20 கிலோ மீட்டர் வரை செல்கிறார்கள். பின்னர் மாட்டு வண்டியை அங்கு நிறுத்தி இயற்கை விவசாயத்தை காப்போம். மருந்தில்லா உணவை கொடுப்போம். வரும் சந்ததிக்கு நோயில்லாத வாழ்க்கையை வலுப்படுத்துவோம்.
செயற்கை உரங்களை அகற்றி இயற்கை உரங்களை போட்டு விவசாயத்தை காக்க வேண்டும் என்று விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்கள். மேலும் நாட்டு காளை மாட்டு இனங்களை காக்க வேண்டும். வெளிநாடு மாடுகள் இனத்தை அடியோடு துரத்தி அடிக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள்.
இந்த மாட்டு வண்டி பயணத்தினர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர். சென்னை மெரினா கடற்கரைக்கு சென்று ஒரு நாள் முழுவதும் விவசாயத்தைப் பற்றி எடுத்துரைத்து அதன் பின்னர் தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சரிடம் மனுவாக அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.
- ஏரியூர் கிராமத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
- வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் வெற்றி கோப்பைகள் வழங்கப்பட்டது.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே ஏரியூர் கிராமத்தில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. மாட்டு வண்டி பந்தயம் சிங்கம்புணரி ஒன்றியம் ஏரியூர் கிராமத்தில் உள்ள மலைமருந்தீஸ்வரர், முனிநாதன் மற்றும் தண்டாயுதபாணி கோவில் பங்குனி உத்திர விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் ஏரியூர்-சிவகங்கை சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 66 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், நடுமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம், பூஞ்சிட்டு வண்டி பந்தயம் என 4 பிரிவாக நடைபெற்றது.
முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை வைத்தியா வண்டியும், 2-வது பரிசை ஏரியூர் விஜயவேல் வண்டியும், 3-வது பரிசை சிவகங்கை அருண் ஸ்டுடியோ வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற நடுமாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சிங்கினிப்பட்டி பெரியசாமி வண்டியும், 2-வது பரிசை அலவாக்கோட்டை பன்னீர்செல்வம் வண்டியும், 3-வது பரிசை புதுசுக்காம்பட்டி குணசேகரன் வண்டியும் பெற்றது.
சிங்கம்புணரி அருகே ஏரியூர் கிராமத்தில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 18 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை பொண்குண்டுப்பட்டி செல்லை வண்டியும், 2-வது பரிசை வல்லாளப்பட்டி சுந்தர்ராஜ் வண்டியும், 3-வது பரிசை கோட்டணத்தம்பட்டி கதிரேசன் வண்டியும் பெற்றது. இறுதியாக நடைபெற்ற பூஞ்சிட்டு பந்தயத்தில் மொத்தம் 27 வண்டிகள் கலந்துகொண்டு இரு பிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை எஸ்.எஸ்.கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமன் வண்டியும், 2-வது பரிசை ஆபத்தாரணப்பட்டி பிரபுபழனிச்சாமி வண்டியும், 3-வது பரிசை ம.ஒத்தப்பட்டி ஜெகநாதன் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை மேலூர் புவனேஸ்வரி எலக்ட்ரிக்கல்ஸ் வண்டியும், 2-வது பரிசை மாம்பட்டி செல்வேந்திரன் வண்டியும், 3-வது பரிசை மாம்பட்டி சிதம்பரம் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் வெற்றி கோப்பைகள் வழங்கப்பட்டது.
- ஊமச்சிகுளத்தில் நடந்த மாட்டுவண்டி பந்தயத்தை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
- வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், பரிசுகள் வழங்கப்படுகிறது.
மதுரை
மதுரை ஊமச்சிகுளத்தில் மாட்டு வண்டி பந்தயம் இன்று காலை நடந்தது. இதனை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டி தொடங்கியதும் மாடுகள் மின்னல் வேகத்தில் இலக்கை நோக்கி ஓட்டம் பிடித்தது.
5 மைல் தூரத்தை பெரிய மாடுகள் தொட்டு, அதன் பிறகு மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்தன. இதற்கான முதல் பரிசாக ரூ.3 லட்சமும் 2-வது பரிசாக ரூ.2.5 லட்சமும், 3-வது பரிசாக ரூ.2 லட்சம், 4-வது பரிசாக ரூ.50 ஆயிரமும், சாரதிக்கு கொடி பரிசு ரூ.10 ஆயிரம், எல்லை பரிசு- ரூ.10 ஆயிரம் என அறிவிக்கப் பட்டுள்ளது.
சிறிய மாடுகளுக்கான பந்தயத்தையும் அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். சிறிய மாடுகள் 3 மைல் தூர எல்லையை தொட்டு, மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்தன. இதில் முதல் பரிசாக ரூ.2 லட்சமும் 2-வது பரிசாக ரூ. 1.5 லட்சமும், 3-வது பரிசாக ரூ.1 லட்சமும், 4-வது பரிசாக ரூ.25 ஆயிரம், சாரதிக்கு கொடி பரிசு ரூ.5 ஆயிரம், எல்லை பரிசு- ரூ.5 ஆயிரம் ஆகும்.
போட்டிகளின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், பரிசுகள் வழங்கப்படும் என்று நிர்வாகிகள் அறிவித்தனர்.
- மேலூர் தெற்குபட்டியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
- இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் நகர் தெற்குப்பட்டியல் ஸ்ரீ காஞ்சி குளம் சுவாமி கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று காலை தெற்குப்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. 2 பிரிவுகளாக நடந்த இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் 24 வண்டிகள் பங்கேற்றன. பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் 7வண்டிகளும், சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் 17வண்டிகளும் பங்கேற்றன.
இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த ேபாட்டியினை காண சாலையின் இருபுறமும் ஏராளமான மக்கள் குவிந்திருந்தனர்.
- தி.மு.க. சார்பில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
- வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருநாழியில் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் காந்தி முன்னிலை வகித்தார். தலைமை கழக பேச்சாளர் ரவிச்சந்திர ராமவன்னி சிறப்புரையாற்றினார்.
வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், ஒன்றிய துணைச் செயலாளர்கள் முருகன், உதயகுமார், ஆதிமுத்து, ஒன்றிய பொருளாளர் கந்தசாமி, மாவட்ட பிரதிநிதிகள் கிருஷ்ணசாமி, ராமசாமி, போஸ், நெசவாளரணி மாரிச்சாமி, செந்தூரான், செந்தூர்பாண்டி, கலைஞர் பகுத்தறிவு பாசறை முனியசாமி, பொதுக்குழு உறுப்பினர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிளைச் செயலாளர் மன்சூர் அலிகான் வரவேற்றார். ஒன்றிய பிரதிநிதி சண்முகவேல் நன்றி கூறினார். இதையொட்டி பெருநாழியில் இருந்து அருப்புக்கோட்டை சாலையில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
- மாவடிபட்டி கிராமத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
- வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்கம், கோப்பை பரிசாக வழங்கப்பட்டது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம், கீழாநிலைக்கோட்டை அருகே மாவடிபட்டி கிராமத்தில் செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் மது எடுப்பு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் மாட்டின் பல் அடிப்படையில் நடைபெற்றது.பந்தயத்தில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள், மாட்டு வண்டிகளுடன் வந்திருந்தனர்.
முதலாவதாக நான்கு பல் கொண்ட மாடுகளுக்கு பந்தயம் நடத்தப்பட்டது. பந்தய தூரம் போய் வர 4 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டது. இதில் 20 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டதால் பந்தயம் 2 பிரிவாக பிரித்து நடத்தப்பட்டது. பந்தயமானது மாவடிபட்டி- கல்லூர் சாலையில் நடைபெற்றது.பந்தயத்தின் முடிவில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்கம், கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. பந்தயத்தில் கலந்து கொண்ட இளம் காளை கன்றுகள் குதிரையை போல் சீறிப்பாய்ந்து ஓடியதை அப்பகுதியில் இருந்த மக்கள் சாலையின் இருபுறமும் நின்று கண்டு ரசித்தனர்.
- அ.தி.மு.க. சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
- செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
சிவகங்கை
சிவகங்கை அருகே உள்ள வீழனேரி கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட பாசறை இணை செயலாளர் சரவணன் ஏற்பாட்டில் மாட்டு வண்டி பந்தயத்தை செந்தில் நாதன்
எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டதால் 2 பிரிவுகளாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், அருள்ஸ்டீபன், செல்வமணி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மாட்டு வண்டி மீது மோட்டார்சைக்கிள் மோதியது.
- இதில் கென்னடி பரிதாபமாக இறந்தார்
திருவாரூர்:
திருவாரூர் வடுவூர் அருகே உள்ள பேரையூர் கிராமத்தை சேர்ந்தவர் கென்னடி (வயது63). விவசாயி. இவர் தனது மோட்டார்சைக்கிளில் மன்னார்குடிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது காஞ்சிக்குடிகாடு என்ற இடத்தில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த மாட்டு வண்டி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த கென்னடியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கென்னடி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து குறித்து வடுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- 7 மாட்டு வண்டியில் தாய்மாமன் சீர்வரிசை கொண்டு வந்து அசத்திய நிகழ்வு நடைபெற்றது.
- ஒரு குழந்தைக்கு காதணி விழா நடந்தது.
மதுரை :
தமிழகத்தின் பழமை மாறாமல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற காதணி விழாவில் 7 மாட்டு வண்டியில் தாய்மாமன் சீர்வரிசை கொண்டு வந்து அசத்திய நிகழ்வு நடைபெற்றது.
இந்த வகையில் உசிலம்பட்டி அருகே ரெயில்வே பீடர் ரோடு பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு காதணி விழா நடத்தினர். இந்த விழாவிற்கு கருமாத்தூரிலிருந்து வந்திருந்த அவரது தாய்மாமன் தலைமையில் ஊர்வலமாக வந்த பொதுமக்கள் பாரம்பரிய முறைப்படி 7 மாட்டு வண்டிகளில் வெற்றிலை, பாக்கு, பழம், கரும்பு, இனிப்புகள் மற்றும் சீர்வரிசை பொருட்களை ஏற்றி வந்தனர்.
மேலும் கரகாட்டம், ஒயிலாட்டம், மாதிரி யானை ஊர்வலம், கேரள செண்டை மேளங்கள் முழங்க கதகளி நடனம் என சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு தாய்மாமன் ஊர்வலமாக வந்தது உசிலம்பட்டி பகுதியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
- சிவகங்கையில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
- வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் சாரதிக்கு பரிசு கோப்பை வழங்கப்பட் டது.
சிவகங்கை
சிவகங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற பிள்ளை வயல்காளியம்மன் கோவில் ஆனி திருவிழாவை முன்னிட்டு மருது பாண்டியர் களின் நினைவாக, சிவகங்கை-மதுரை தேசிய நெடுஞ் சாலையில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
இப்போட்டி பெரிய மாடு, சின்ன மாடு, நடுமாடு, பூச்ஞ்சிட்டு என நான்கு பிரிவுகளாக நடைபெற்றது, இப்போட்டியை சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் குணசேக ரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் மதுரை, சிவகங்கை, புதுகோட்டை, தேனி, கம்பம் உள்ளிட்ட ஆறு மாவட்டங் களை சேர்ந்த 55 வண்டிகள் பங்கேற்றன. பெரியமாடு பிரிவில் முதல் பரிசு 30 ஆயிரத்தை மதுரையை சேர்ந்த அக்னி முருகனுக்கும், இரண்டாம் பரிசான 20 ஆயிரம் திருச்சியை சேர்ந்த செந்திலுக்கும், சின்ன மாட்டு பிரிவில் முதல் பரிசை சிவகங்கை பழனிக் கும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் சாரதிக்கு பரிசு கோப்பை வழங்கப்பட் டது.






