என் மலர்
உள்ளூர் செய்திகள்

போட்டியில் பங்கேற்ற காளைகள் சீறிப்பாய்ந்து ஓடி வந்த காட்சி.
மேலூரில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
- மேலூர் தெற்குபட்டியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
- இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் நகர் தெற்குப்பட்டியல் ஸ்ரீ காஞ்சி குளம் சுவாமி கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று காலை தெற்குப்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. 2 பிரிவுகளாக நடந்த இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் 24 வண்டிகள் பங்கேற்றன. பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் 7வண்டிகளும், சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் 17வண்டிகளும் பங்கேற்றன.
இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த ேபாட்டியினை காண சாலையின் இருபுறமும் ஏராளமான மக்கள் குவிந்திருந்தனர்.
Next Story






