சாலைவிபத்தில் விவசாயி பலி

மாட்டு வண்டி மீது மோட்டார்சைக்கிள் மோதியது.இதில் கென்னடி பரிதாபமாக இறந்தார்
சாலைவிபத்தில் விவசாயி பலி
Published on

திருவாரூர்:

திருவாரூர் வடுவூர் அருகே உள்ள பேரையூர் கிராமத்தை சேர்ந்தவர் கென்னடி (வயது63). விவசாயி. இவர் தனது மோட்டார்சைக்கிளில் மன்னார்குடிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது காஞ்சிக்குடிகாடு என்ற இடத்தில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த மாட்டு வண்டி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த கென்னடியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கென்னடி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து குறித்து வடுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com