வடசேரியில் மகளிர் போலீஸ் நிலையம் முன்பு மனைவியை தாக்கிய கணவர்

பணியில் இருந்த ஏட்டுக்கும் கொலைமிரட்டல் விடுத்ததாக புகார்சதீஷ் அடிக்கடி குடித்து விட்டு வந்து தன்னிடம் தகராறு செய்வதாக மனைவி தேவி தெரிவித்தார்
வடசேரியில் மகளிர் போலீஸ் நிலையம் முன்பு மனைவியை தாக்கிய கணவர்
Published on

நாகர்கோவில் :

நாகர்கோவில் வடி வீஸ்வ ரன் தோப்பு வணிகர் தெரு வைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி தேவி (வயது 22). குடி பழக்கத்திற்கு அடி மையான சதீஷ், அடி க்கடி தகராறு செய்து மனை வியை தாக்கியதாக கூறப்ப டுகிறது.நேற்று வடசேரி மகளிர் போலீஸ் நிலையம் முன்பு சதீஷ், தனது மனைவி தேவியின் தலைமுடியை பிடித்து இழுந்து வந்ததோடு தாக்குதலிலும் ஈடுபட் டுள்ளார். இதனை மகளிர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் ரோஸ்பின் ஜெபராணி, கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், மீண்டும் மனைவியை தாக்கியதோடு, போலீஸ் ஏட்டு ரோஸ்பின் ஜெப ராணியை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த தாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏட்டு ரோஸ் பின் ஜெபராணி, போலீ சில் புகார் கொடுத்தார்.

அதில், தான் பணியில் இருந்த போது, சதீஷ் அங்கு தனது மனைவி தேவியின் தலைமுடியை பிடித்து இழுத்து வந்தார். இதனை நான் கேட்ட போது, கணவர் சதீஷ் அடிக்கடி குடித்து விட்டு வந்து தன்னிடம் தகராறு செய்வதாக மனைவி தேவி தெரிவித்தார். அப்போது சதீஷ் திடீரென மீண்டும் தேவியை தாக்கினார். இதனை நான் கண்டித்த போது, அவதூறாக பேசியதோடு, என்னை பணி செய்யவிடாமல் தடுத்து கொலைமிரட்டலும் விடுத்தார் என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெசிமேனகா, குமார் ஆகியோர் விசாரணை நடத்தி சதீஷ் மீது வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மகளிர் போலீஸ் நிலையம் முன்பு மனைவியை தாக்கிய கணவர், போலீஸ் ஏட்டுக்கும் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com