search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karachi"

    • மும்பை 1993 வெடிகுண்டு மற்றும் 2008 தாக்குதல் சம்பவங்களில் தாவூத்திற்கு தொடர்புண்டு
    • தாவூத்தின் சகோதரி மகள், அவர் கராச்சியில் வசிப்பதை உறுதிப்படுத்தினார்

    இந்தியாவில் நடைபெற்ற பல பயங்கரவாத செயல்களுக்கு மூளையாக செயல்பட்ட நிழல் உலக தாதா, மும்பையை சேர்ந்த தாவூத் இப்ராஹிம்.

    அமெரிக்கா மற்றும் இந்தியா இவரை பயங்கரவாதியாக பிரகடனப்படுத்தி தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. "இன்டர்போல்" (Interpol) எனப்படும் சர்வதேச காவல்துறையால் உலகெங்கும் "சிகப்பு அலர்ட்" தேடுதல் அறிவிப்பு விடப்பட்டிருக்கும் தாவூத்தின் தலைக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தான் நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ (ISI) மற்றும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தாய்பா (Lashkar-e-Taiba) ஆகியவற்றுடன் இணைந்து இந்தியாவில் பல நாசவேலைகளை நடத்தியவர், தாவூத்.

    1993 மும்பை தொடர் வெடிகுண்டு சம்பவம், 2008 மும்பை தாக்குதல், புனே 2010 ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல குற்றங்களில் இவர் தொடர்புடையவர்.

    இந்தியாவை விட்டு தப்பி சென்ற தாவூத்திற்கு பாகிஸ்தான் புகலிடம் கொடுத்திருப்பதாக இந்திய அரசாங்கம் பல ஆண்டுகளாக குற்றம் சுமத்தி வந்தாலும், பாகிஸ்தான் அதனை மறுத்து வந்தது. ஆனால், 2023 ஜனவரி மாதம் தாவூத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனா பர்கரின் மகள் அலிஷா பர்கர், தாவூத் பாகிஸ்தானின் கராச்சி நகரில் அப்துல்லா காசி பாபா தர்காவிற்கு பின்புறம் ரஹிம் ஃபாகி எனும் பகுதிக்கு அருகே வசிப்பதாக தேசிய புலனாய்வு முகமையின் (NIA) இந்திய அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தினார்.

    இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான இருநாட்டு உறவை குலைப்பதில் தாவூத்திற்கு பாகிஸ்தான் புகலிடம் அளிப்பதும் ஒரு சர்ச்சைக்குரிய அம்சமாக கருதப்படுகிறது.

    இந்நிலையில், உடல்நிலை சீர்கெட்டதால், இரு தினங்களுக்கு முன் கராச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புகளுடன் தாவூத் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் உடலில் விஷம் செலுத்தப்பட்டதற்கான அறிகுறிகள் உள்ளதாகவும் தெரிகிறது.

    தாவூத் சிகிச்சை பெரும் தளம் முழுவதும் வேறு எந்த நோயாளியும் சேர்க்க அனுமதிக்கப்படவில்லை என்றும் அந்த மருத்துவமனை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு நிலவுவதாகவும் தெரிகிறது.

    • ஐந்து காரணிகளின் அடிப்படையில் 172 நகரங்களில் ஆய்வு.
    • பாகிஸ்தான் பொருளாதார சரிவின் விளிம்பில் உள்ளது.

    உலகில் வாழ்வதற்கு மோசமான நகரங்கள் பட்டியல் குறித்து பொருளாதார புலனாய்வு பிரிவு என்ற அமைப்பு நடப்பாண்டில் நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. அந்த பட்டியிலில் பாகிஸ்தானின் கராச்சி நகரம் இடம் பிடித்துள்ளது.

    உள்கட்டமைப்பு, சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி, கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட ஐந்து காரணிகளின் அடிப்படையில் 172 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதில் மோசமான வாழ்க்கை நிலை, திருட்டு, கடத்தல், போதைப்பொருள், வன்முறை மற்றும் மோசமான சமூக மற்றும் பொருளாதார நிலை ஆகியவற்றின் அடிப்படையில் உலக அளவில் மிக மோசமான நகரங்கள் பட்டியலில் கராச்சி நகரம் இடம் பிடித்துள்ளது.

    குறைந்து வரும் அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் ஆகியவற்றால் பாகிஸ்தான் பொருளாதார சரிவின் விளிம்பில் இருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலகில் வாழக்கூடிய நகரங்கள் பெரும்பாலும் ஐரோப்பாவிலும் கனடாவிலும் உள்ளன. நல்ல உள்கட்டமைப்பு மற்றும் ஸ்திரத்தன்மை வாழ்க்கையின் அடிப்படையில் உலகில் வாழ்வதற்கான முதல் 10 இடங்களின் பட்டியலில் ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னா முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    வான்வழி விதிமுறைகளை மீறி பறந்த ஜார்ஜியா விமானப்படை சரக்கு விமானம் ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
    புதுடெல்லி:

    வான்வழி விதிமுறைகளை மீறி பறந்த ஜார்ஜியா நாட்டு விமானப்படை சரக்கு விமானம், ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த விமானம், ஜார்ஜியா நாட்டின் திபிலிசியில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி வழியாக டெல்லிக்கு வருவதற்கு அனுமதி பெற்றிருந்தது.

    ஆனால், திட்டமிட்ட பாதையில் இருந்து விலகி, வடக்கு குஜராத் வழியாக இந்திய வான் பகுதிக்குள் நுழைந்தது. இதைக் கண்டு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்புகள் அதிர்ச்சி அடைந்தன. அது, ஜார்ஜியா விமானம் என்பதை கண்டறிந்தன. 27 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த அவ்விமானத்தை இந்திய விமானப்படை விமானம் வழிமறித்தது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விமான தளத்தில் அவசரமாக தரை இறங்க வைத்தது. அங்கு ஜார்ஜியா விமானத்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடைபெற்றது.

    இதுகுறித்து இந்திய விமானப்படை செய்தித்தொடர்பாளர் கேப்டன் அனுபம் பானர்ஜி கூறியதாவது:-

    ஜார்ஜியா விமானம், அங்கீகரிக்கப்பட்ட விமான போக்குவரத்து பாதையை பின்பற்றவில்லை. ரேடியோ சாதனங்கள் மூலம் கட்டளையிட்டும் பதில் அளிக்கவில்லை. ஆபத்துகால அழைப்புக்கும் பதில் அளிக்கவில்லை. சிக்னல் கொடுத்தும் கீழ்ப்படியவில்லை. எனவே, அந்த வான்வழி பாதையை மூடிவிட்டு, விமானத்தை வழிமறித்தோம். அதன்பிறகுதான் உரிய பதில் அளித்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தரையிறக்கப்பட்ட அந்த விமானத்தில் சந்தேகிக்கும் படியான பொருள் எதுவும் இல்லை என்றும், எனவே அந்த விமானம் தொடர்ந்து பறந்து செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும் பின்னர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    பாகிஸ்தானில் உள்ள சீன நாட்டு தூதரகத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக 2 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். #PakistanTerrorAttack
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் கராச்சி நகரில் சீன தூதரகம் செயல்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன் அந்த தூதரகத்தில் நுழைந்த தற்கொலைப் படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர். அவர்கள் தங்களிடம் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர்.

    இந்த தாக்குதலில் பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீசார் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அங்கு வந்த பாதுகாப்பு படையினர் 3 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.

    பாகிஸ்தானில் சீன தூதரகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு சீனா, இந்தியா ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன. 

    இந்நிலையில், சீன தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நடத்திய தேடுதல் வேட்டையில் 2 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். #PakistanTerrorAttack
    பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள சீன தூதரகத்தில் தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 2 போலீசார் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். #PakistanTerrorAttack
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் கராச்சி நகரில் சீன தூதரகம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை அந்த தூதரகத்தில் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் குழுமியிருந்தனர்.

    இந்நிலையில், சீன தூதரகத்தில் திடீரென 3 தற்கொலைப்படையினர் நுழைந்தனர். அவர்கள் தங்களிடம் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர்.

    இந்த தாக்குதலில் பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீசார் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர்.  அவர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.



    பாகிஸ்தானில் சீன தூதரகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு சீனா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. 

    இதேபோல், இந்தியா சார்பில் இந்திய வெளியுறவு துறை வெளியிட்டுள்ள செய்தியில், பாகிஸ்தானில் சீன தூதரகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. மேலும், வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளது. #PakistanTerrorAttack
    தலீபான் பயங்கரவாத அமைப்புக்காக நிதி திரட்டிய பாகிஸ்தானை சேர்ந்த இஸ்மாயில்கானுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். #Karachi #CollectingFund
    கராச்சி:

    பாகிஸ்தானை சேர்ந்தவர் இஸ்மாயில்கான். இவர் அங்கு தலீபான் பயங்கரவாத அமைப்புக்காக நிதி திரட்டிக்கொண்டு இருந்தார். இது தொடர்பாக புகார் எழுந்தது. பயங்கரவாத தடுப்பு படையினர் இஸ்மாயில் கானை கைது செய்தனர்.

    அவர் மீது கராச்சியில் உள்ள பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். மேலும், 1997-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    வழக்கு விசாரணை முடிவில், இஸ்மாயில் கான் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது என நீதிபதி கண்டு, அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் செலுத்தத் தவறினால், மேலும் 6 மாதம் கடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.  #Karachi #CollectingFund  #tamilnews 
    அமெரிக்காவில் உயர்நிலைப்பள்ளியில் கடந்த 18ந் தேதி நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாணவி சபிகா உடல், கராச்சி நகருக்கு வந்து சேர்ந்தது. #SchoolShooting #Karachi #StudentSabika
    கராச்சி:

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டன் பெருநகர பகுதியில் அமைந்து உள்ள சாண்டா பே உயர்நிலைப்பள்ளியில் கடந்த 18-ந் தேதி நடந்த கொடூர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

    அவர்களில் பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்த மாணவி சபிகாவும் (வயது 17) ஒருவர். சபிகா, அங்கு அமெரிக்க வெளியுறவுத்துறை உதவித்தொகை பெற்று படித்து வந்தார்.

    இந்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக உயிரிழந்த அவரது உடல், கராச்சி நகருக்கு நேற்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்கு வந்து சேர்ந்தது. அவரது தந்தை அஜீஸ் ஷேக், மகளின் உடலைப் பெற்றுக்கொண்டார். விமான நிலையத்தில் அமெரிக்க தூதர் ஜான் வார்னர், கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    சபிகாவின் உடல் விமான நிலையத்தில் இருந்து, குல்ஷான் இ இக்பால் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு அவருடைய உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

    அதன்பின்னர் கராச்சி ஹக்கீம் சயீத் மைதானத்தில் காலை 9 மணியளவில் இறுதி தொழுகை நடைபெற்றது. அதில் சிந்து மாகாண முதல்-மந்திரி முராத் ஷா, கவர்னர் முகமது ஜபைர், உள்துறை மந்திரி சொகைல் அன்வர் சியால் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மறைந்த மாணவி சபிகாவுக்கு அனைவரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    அதைத்தொடர்ந்து ஷா பைசல் காலனியில் உள்ள அஜிம்புரா மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    ஜூன் மாதம் 9-ந் தேதி சபிகா ஊருக்கு வருவார் என குடும்பத்தினர் ஆவலுடன் எதிர்நோக்கி இருந்த நிலையில், அவருக்கு இந்த பரிதாப முடிவு ஏற்பட்டுவிட்டது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.  #SchoolShooting #Karachi #StudentSabika
    பாகிஸ்தானின் கராச்சி மாவட்டத்தில் 44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கொளுத்தும் வெயிலின் காரணமாக கடந்த 3 நாட்களில் சுமார் 65 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #heatwavekills #Pakistan
    இஸ்லாமாபாத்:

    பெரும்பான்மையாக முஸ்லீம்கள் வாழும் பாகிஸ்தான் நாட்டில் ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் நோன்பினை கடைபிடித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கராச்சி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 44 டிகிரி செல்சியசை எட்டியுள்ளது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களில் மட்டும் வெயிலின் தாக்கத்துக்கு சுமார் 65 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    இதையடுத்து, பகல் நேரத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என கராச்சி மாவட்ட மேயர் வசீம் அக்தர் கேட்டுக்கொண்டுள்ளார். #heatwavekills #Pakistan
    ×