என் மலர்
நீங்கள் தேடியது "fire shopping mall"
- கடைகளில் இருந்த ஆடைகள், பிளாஸ்டிக் பொருட்களில் தீ வேகமாகப் பரவியது.
- 60-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
கராச்சி:
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள எம்.ஏ.ஜின்னா சாலையில் 'குல் பிளாசாவில்' என்ற அடுக்குமாடி வணிக வளாகம் அமைந்துள்ளது.
இங்கு நேற்று முன்தினம் தீவிபத்து ஏற்பட்டது. 12 மணி நேரத்திற்கும் மேலாக தீ எரிந்த நிலையில், நேற்று வரை மீட்புப் பணிகள் நடந்தன. தீ விபத்தில் தீயணைப்பு வீரர் உள்பட 6 பேர் உயிரிழந்ததாகவும், 20-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் முதல் கட்ட தகவல் வெளியானது.
கட்டிடத்தின் தரைத்தளம் மற்றும் பல அடுக்கு அமைப்புகள் மிகவும் சிக்கலான முறையில் இருந்ததால், மீட்புக் குழுவினர் உள்ளே செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
விசாரணையில் மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடைகளில் வைக்கப்பட்டிருந்த ஆடைகள், பிளாஸ்டிக் பொருட்களால் தீ வேகமாகப் பரவியது. தீ விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கராச்சி மால் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 63 பேர் மாயமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டிட இடிபாடுகளில் இருந்து மேலும் பல்வேறு உடல் பாகங்கள் கிடைத்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பல அடுக்குமாடிகளை கொண்ட பிரமாண்ட வணிக வளாகம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்திருந்தனர்.
அப்போது வணிக வளாகத்தின் 8-வது மாடியில் திடீரென தீப்பிடித்தது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த மாடிகளுக்கும் தீ மளமளவென பரவியது.
இதனால் பெரும் பதற்றமும், பீதியும் தொற்றிக்கொண்டது. மக்கள் அனைவரும் அலறிஅடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது ஒருவர் வணிக வளாகத்தின் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

ஆனால் அதற்குள் தீயில் கருகி ஒருவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 17 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #Thailand #ShoppingMall #FireAccident






