என் மலர்
நீங்கள் தேடியது "பலி எண்ணிக்கை உயர்வு"
- நிலநடுக்கம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வரை உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 2,500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் குனார் மாகாணம் உள்ளது. இது பாகிஸ்தான் எல்லையை யொட்டிய பகுதியாகும்.
குனார் மாகாணத்தில் நேற்று இரவு 11.47 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் பதிவான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0-வாக பதிவாகி இருந்தது. அடுத்தடுத்து 4.5 ரிக்டர் அளவில் பதிவானது.
நகங்கா் மாகாணத்தில் ஜலாலாபாத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கிழக்கு- வடகிழக்கே 27 கிலோ மீட்டர் தொலைவில் 8 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது. அதை தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவானது.
நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமானது. இரவில் ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமானவர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். எங்கு பார்த்தாலும் ஒரே அலறல் சத்தமாக கேட்டது.
நிலநடுக்கத்தில் முதலில் 622 பேர் பலியானதாக தகவல் வெளியானது. ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இதை தெரிவித்தார். 1,300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
குனார் மாகாணம்தான் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்குதான் அதிகமானோர் பலியாகி இருக்கலாம் என்றும், ஏராளமானோர் காயம் அடைந்து இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
நூர்குல், சோகி, வாட்பூர் மனோகி, சபதாரே ஆகிய மாவட்டங்களில் குறைந்தது 250 பேர் பலியானதாக குனார் மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில், கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 800-ஆக உயர்ந்தளு்ளது.
2,500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது.
சாலை வழியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு வர முடியாதவர்களை வான் வழியில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது. பல இடங்க ளில் சாலைகள் கட்டிட இடிபாடுகளால் சூழப்பட்டு இருப்பதால் மீட்பு குழுவினர் நுழைய முடியாமல் தவிப்பதாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
ஒரே மாகாணத்தில் அடுத்தடுத்து 3 கிராமங்கள் ஒட்டு மொத்தமாக சேதம் அடைந்து உள்ளது. இங்கு உள்ள கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வரை உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வருவது, கட்டிடங்கள் இடிந்து விழுவது போன்ற பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
ஆப்கானிஸ்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. வெள்ளத்தைதொடர்ந்து நிலச்சரிவு உள்ளிட்டவற்றால் உள்கட்டமைப்புகள் பெரிதும் சேதமடைந்து இருந்த நிலையில் நில நடுக்கம் அதன் கோர முகத்தைக் காட்டியிருக்கி றது. இதனால் சாலை வசதிகள் இன்றி மக்கள் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் நேரிட்ட நிலநடுக்கத்தால் ஆயிரம் பேருக்கும் மேல் பலியான நிலையில், இயற்கைச் சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் முன்னணி இடம் வகிக்கிறது.
- இடிபாட்டில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுவதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
- விபத்தில் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் கராச்சியில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
கராச்சியில் உள்ள லியாரி பாக்தாதி என்ற இடத்தில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
கட்டிட இடிபாட்டிற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, இந்த விபத்தில் சிக்கி 7 பேர் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 8 பேர் காயம் அடைந்ததாகவும் கூறப்பட்டது.
மேலும், இன்னும் ஏராளமானோர் கட்டிட இடிபாட்டில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுவதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதன்படி, விபத்தில் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளர்வர்களை் மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர்.


இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையன்று காலை மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீது திடீரென வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதன்பின் அன்று மதியம் 2 மணியளவில் இரு தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்த தாக்குதல்களில் இதுவரை 359 பேர் உயிரிழந்து உள்ளனர். 500 பேர் வரை காயமடைந்து உள்ளனர். இதுவரை 76 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

வங்காளதேசம்- 1
சீனா-2
இந்தியா - 11
டென்மார்க் - 3
ஜப்பான் -1
நெதர்லாந்து- 1
போர்ச்சுகல்- 1
சவுதி அரேபியா - 2
ஸ்பெயின் -1
துருக்கி -2
இங்கிலாந்து- 6
அமெரிக்கா -1
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை வைத்துள்ள 2 பேர், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை நாட்டின் குடியுரிமை வைத்துள்ள 2 பேர் என 36 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
இதுவரை 14 வெளிநாட்டவர்களை பற்றிய விவரம் தெரியவரவில்லை. 12 வெளிநாட்டினர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் கொழும்பு நகர மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என வெளியுறவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #SriLankaAttacks #SriLankaBlast
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்த மொசூல் பகுதி ராணுவத்தால் மீட்கப்பட்டது. அங்கு குர்தீஸ் இன மக்களின் ‘நவ்ரஸ்’ என்ற புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
எனவே அப்பகுதி மக்கள் விடுமுறையை பொழுதுபோக்கு பகுதிகளுக்கு சென்று கழித்து வருகின்றனர். நேற்று டைகிரிஸ் நதிக்கரையில் உள்ள சுற்றுலா தலத்துக்கு ஏராளமான மக்கள் படகுகளில் சென்றனர்.
அதில் ஒரு சொகுசு சுற்றுலா படகு நடுவழியில் சென்றபோது தண்ணீரில் மூழ்கியது. தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். அதற்குள் படகு முழுவதும் ஆற்றில் முழ்கியது.
இச்சம்பவத்தில் படகில் பயணம் செய்த 100 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களில் 61 பேர் பெண்கள். 19 பேர் குழந்தைகள் ஆவர்.
இவர்கள் தவிர 55 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என ஈராக் பிரதமர் அதெல் அப்தெல் மாக்டி தெரிவித்துள்ளார்.
படகு விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் அரசு சார்பில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த படகு விபத்து குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
அதிக ஆட்களை படகில் ஏற்றியதும், ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்ததும் விபத்துக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே படகு கம்பெனியை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இக்கம்பெனியின் படகு போக்குவரத்துக்கு தடை விதித்தும் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளாக ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கி தவித்த மொசூல் மீட்கப்பட்டதை தொடர்ந்து இந்த ஆண்டு முதல் முறையாக குர்தீஸ் இன மக்கள் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நேரத்தில் இத்தகைய விபத்து நடந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #BoatAccident
அசாம் மாநிலம் கோலஹட் மாவட்டத்தில் ஹல்மிரா தேயிலை தோட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கு முன் மது குடித்த நூற்றுக்கணக்கானவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் தொடர்ந்து ஏராளமானவர்கள் இறந்து வந்தனர்.







