search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "building collapse"

    • படுகாயமடைந்தவர்கள் குருகோபிந்த் சிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு.

    குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள சாதனா காலனி பகுதியில் 30 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஒன்று பாழடைந்த நிலையில் இருந்தது.

    இந்த நிலையில் இந்த கட்டிடம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர்.

    மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3 பெண்கள் உட்பட 5 பேரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

    அவர்கள் குருகோபிந்த் சிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    • விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
    • இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3 பெண்கள் உட்பட 5 பேரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

    குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள சாதனா காலனி பகுதியில் 30 ஆண்டுகள் பழைமையான கட்டிடம் ஒன்று பாழடைந்த நிலையில் இருந்தது.

    இந்த நிலையில் இந்த கட்டிடம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.

    உயிரிழந்தவர்கள் ஜெய்பால் ஸ்வாதியா (35), மிட்டல் ஸ்வாதியா (35), சிவராஜ் (4) என அடையாளம் காணப்பட்டனர்.

    இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3 பெண்கள் உட்பட 5 பேரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

    அவர்கள் குருகோபிந்த் சிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என தெரியவந்ததை அடுத்து தேடுதல் மற்றும் மீட்பு பணியை மேற்கொள்ள நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    • மகாராஷ்டிராவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்த விபத்தில் 3 பேர் பலியாகினர்.
    • இடிபாடுகளில் சிக்கிய 12 பேரை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் அந்தக் கட்டிடம் தரைமட்டமான நிலையில், உள்ளே இருந்த 15-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 12 பேரை பத்திரமாக மீட்டனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலியாகினர் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

    விபத்து குறித்து அறிந்ததும் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே சம்பவ இடம் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டார். விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாரிமுனை, ஐகோர்ட்டு, கொண்டித்தோப்பு உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர்.
    • கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.

    சென்னை:

    சென்னை பாரிமுனை அரண்மனைகாரன் தெருவில் பழமையான 4 மாடி கட்டிடம் உள்ளது. இதனை புதுப்பிக்கும் பணிகள் இன்று காலை நடைபெற்று வந்தது. இதில் வடமாநில தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது 'டமார்' என்று வெடிச்சத்தம் போன்று பயங்கர சத்தம் கேட்டது. கடுமையான புகை மூட்டமும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கட்டிடம் இடிந்து விழுந்த பகுதிக்கு ஓடி வந்தனர். கட்டிடத்தின் இடிபாடுகள் மலை போல குவிந்து கிடந்தன. கட்டிடத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 10 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.

    இதுபற்றி உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாரிமுனை, ஐகோர்ட்டு, கொண்டித்தோப்பு உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர்.

    தீயணைப்பு வீரர்கள் 50 பேர் இடிபாடுகளை அகற்றும் பணியில் தீவிரமாக களம் இறங்கினர். பெரிய பெரிய துண்டுகளாக கிடந்த கட்டிட இடிபாடுகளை மிஷின் மூலமாக உடைத்து எடுத்தனர். சம்பவ இடத்துக்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியை முடுக்கி விட்டனர்.

    கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. இடிபாடுகளுக்குள் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகளில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வடமாநில தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது. இன்று காலையில் கட்டிடம் இடிந்து விழுந்தபோது அப்பகுதியில் அதிர்ந்துள்ளது.

    கட்டிடம் இடிந்து விழுந்தபோது அந்த வழியாக நடந்து சென்றவர்கள் கட்டிடம் இடிந்து விழுந்ததை பார்த்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்து உள்ளனர். அரண்மனைகாரன் தெரு வழியாக நடந்து சென்ற 2 பெண்களில் ஒருவர் கட்டிட இடிபாட்டில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்பதற்காக 100-க்கும் மேற்பட்ட அரசு பணியாளர்கள் களம் இறங்கி வேலை செய்து வரும் நிலையில் கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கட்டிடத்தின் தூண்களை புதுப்பிப்பதற்காக செதுக்கியபோதுதான் கட்டிடம் இடிந்து தரைமட்டமாகி இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக கட்டிட உரிமையாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் முடிவில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த சம்பவம் பாரிமுனை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தங்கசாலையில் 100 ஆண்டு பழமை வாய்ந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.
    • அமைச்சர் சேகர்பாபு சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார்.

    சென்னை:

    சென்னை சவுகார்பேட்டை தங்கசாலையில் 100 ஆண்டு பழமை வாய்ந்த கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வந்துள்ளது.

    கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் இந்த கட்டிடம் வலுவிழந்து காணப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நேற்று மாலை இந்தக் கட்டிடம் முழுவதுமாக இடிந்து கீழே விழுந்தது. இதில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.

    போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அமைச்சர் சேகர்பாபு , காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    கனமழையால் கட்டிடம் இடிந்த விபத்தில் 2 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • 4 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் உள்ள 4 மாடி கட்டிடத்தின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை 8.50 மணி அளவில் அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் கட்டிட இடிபாடுகளில் தொழிலாளர்கள் சிக்கி அலறினார்கள்.

    இதைத்தொடர்ந்து 4 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. தற்போது, அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளனர்.

    மேலும், இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • மும்பையில் நான்கு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.
    • பாழடைந்த கட்டிடம், யாரும் வசிக்கக் கூடாது என மும்பை மாநகராட்சி நோட்டிஸ் விடுத்துள்ளது.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் போரிவலி (மேற்கு) பகுதியில் இன்று பிற்பகல் 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.

    சாய்பாபா கோவில் அருகே சாய்பாபா நகரில் உள்ள கீதாஞ்சலி கட்டிடம் மதியம் 12.34 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.

    மும்பை மாநகராட்சி அதிகாரிகளால் பாழடைந்த கட்டிடம் என நோட்டீஸ் வழங்கப்பட்டு, யாரும் வசிக்கக் கூடாது எனக்கூறி முன்னதாகவே குடியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். இருந்தாலும் சிலர் இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    தகவலறிந்து பெருநகர தீயணைப்பு மற்றும் அவசரகால சேவை வாரியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

    • கட்டிட விபத்தில் 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    • கட்டிட விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் நேற்று 4 மாடி கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தஹு.

    இந்த விபத்தில் 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், 3 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கட்டிடத்தின் முதல் தளத்தில் ஒரு குடும்பம் மட்டுமே வசித்து வந்தது. தரை தளத்தில் பல கடைகள் உள்ளன.

    நேற்று முதல் தளத்தில் இரண்டாவது தளத்தின் கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. கட்டிட விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏழு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். #Istanbulbuildingcollapse
    இஸ்தான்புல்:

    துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரின் கர்தால் மாவட்டத்தில் ஏழு மாடி கட்டிடம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 3 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. இதற்கிடையே, மேலும் 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், இஸ்தான்புல் நகரில் ஏழு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.



    இதுதொடர்பாக, மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தனர்.

    கட்டிட விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் சந்தித்து ஆறுதல் கூறினார். #Istanbulbuildingcollapse
    துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏழு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். #Istanbulbuildingcollapse
    இஸ்தான்புல்:

    துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரின் கர்தால் மாவட்டத்தில் ஏழு மாடி கட்டிடம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 3 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. இதற்கிடையே, மேலும் 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக, மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்று ஐந்து வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார். சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தனர்.

    விசாரணையில், கட்டிடத்தின் 3 மாடிகள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து உள்ளூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். #Istanbulbuildingcollapse
    அரியானாவில்அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். #GurugramBuildingCollapse
    சண்டிகர்:

    அரியானாவில் உள்ள குருகிராமம் பகுதியை சார்ந்த உல்லவாஸ் கிராமத்தில் நான்கு மாடி கட்டிடம் இன்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது.

    இந்த விபத்தில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    தகவலறிந்து அங்கு சென்ற தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கிய 5 பேரை காயத்துடன் மீட்டனர்.

    இந்நிலையில், அரியானாவில்அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக, பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இதையடுத்து, கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்தனர்.

    அடுக்குமாடி கட்டிட விபத்து பற்றி அறிந்த முதல் மந்திரி மனோகர் லால் கட்டார், விபத்தில் பலியானோருக்கு தனது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், பலியானோர் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். #GurugramBuildingCollapse
    ஈரான்-ஈராக் எல்லையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 750 பேர் காயமடைந்தனர். #IranEarthquake
    டெஹ்ரான்:

    ஈரானின் தெற்கு பகுதியில் எகிப்து நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள கெர்மன்ஷா மாகாணத்தின் சர்போல்-இ-சகாப் நகரில் நேற்று முன்தினம் இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து 163 கி.மீ. தொலைவிலும், ஈரானின் சர்போல்-இ-சகாப் நகரில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

    இந்த நிலநடுக்கமானது கெர்மன்ஷா மாகாணத்தில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களை கடுமையாக உலுக்கியது. வீடுகள், வணிகவளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பலமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்த வெளி மைதானங்களிலும் தஞ்சம் அடைந்தனர்.



    பல இடங்களில் வீடுகள் இடிந்து சேதமடைந்தன. மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தால் 716 பேர் காயம் அடைந்ததாக ஈரான் அரசு தகவல் வெளியிட்டது.

    மேலும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போலீசார், ராணுவத்தினர் மற்றும் மீட்புகுழுவினர் குவிக்கப்பட்டு தீவிர மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதே போல் இந்த நிலநடுக்கம் ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள கலார் நகரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அங்கு வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. அங்கு இந்த நிலநடுக்கத்துக்கு ஒருவர் பலியானார். மேலும் 43 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
    ×