என் மலர்
நீங்கள் தேடியது "டியூஷன்"
- வகுப்பறையில் இருந்த இரண்டு ஆசிரியர்களும் ஒன்பது மாணவர்களும் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்தனர்.
- நான்கு மாணவர்களை உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பாகிஸ்தானில் டியூசன் சென்டர் கட்டட மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 ஆசிரியர்கள், 7 மாணவர்கள் உயிரிழந்தனர்.
லாகூருக்கு வடமேற்கே சுமார் 120 கி.மீ தொலைவில் உள்ள ஹபீசாபாத் நகரில் சனிக்கிழமை மாலை இந்த சம்பவம் நிகழ்ந்தது.
டியூஷன் சென்டரின் கூரை இடிந்து விழுந்தபோது வகுப்பறையில் இருந்த இரண்டு ஆசிரியர்களும் ஒன்பது மாணவர்களும் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்தனர்.
மீட்புப் பணியாளர்கள், ஆறு முதல் பத்து வயது வரையிலான ஐந்து மாணவர்கள் மற்றும் அவர்களது இரண்டு ஆசிரியர்கள் உட்பட ஏழு பேரின் உடல்களை மீட்டனர்.
மேலும் படுகாயமடைந்த நான்கு மாணவர்களை உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சமீபத்திய பலத்த மழை கட்டிடத்தை பலவீனப்படுத்தியதாக நம்பப்படுகிறது.
- கடந்த மூன்று ஆண்டுகளாக இவரிடம் அந்த மாணவன் டியூஷன் பயின்று வந்துள்ளார்.
- மருத்துவப் பரிசோதனையில் அந்தப் பெண் ஐந்து மாத கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தில், 14 வயது மாணவனால் 23 வயது டியூஷன் ஆசிரியை கர்ப்பமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 25 ஆம் தேதி டியூஷன் ஆசிரியையும் மாணவரும் வீட்டை விட்டு ஓடியுள்ளனர். நான்கு நாள் தேடுதலுக்குப் பிறகு செல்போன் சிக்னல் மூலம் குஜராத்-ராஜஸ்தான் எல்லைக்கு அருகே இருவரையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
டியூஷன் ஆசிரியை சூரத்தில் உள்ள அவரது வீட்டிலும், கைது செய்யப்படுவதற்கு முன்பு அவர்கள் சென்ற இடங்களிலும், சிறுவனுடன் பலமுறை உடல் உறவில் ஈடுபட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளாக இவரிடம் அந்த மாணவன் டியூஷன் பயின்று வந்துள்ளார். கடந்த ஓராண்டாக இவர்கள் மிக நெருக்கமாக இருந்ததாகவும் இருவரும் பல மாதங்களாக உடல் ரீதியான உறவில் ஈடுபட்டதாக அப்பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், மருத்துவப் பரிசோதனையில் அந்தப் பெண் ஐந்து மாத கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது. 14 வயது சிறுவன் தான் அந்த குழந்தையின் தந்தை என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய போலீசார், "தனக்கும் அந்த சிறுவனுக்கும் சிறந்த வாழ்க்கை அமைய, கருவை கலைக்க அப்பெண் விருப்பம் தெரிவித்துள்ளார். நீதிமன்றம் அனுமதி அளித்தவுடன் கருவை கலைக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். கருக்கலைப்புக்குப் பிறகு டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்படும்" என்று தெரிவித்தனர்.
- மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்து தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
- போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜ மாணிக்கத்தை கைது செய்தனர்.
காடையாம்பட்டி:
திருச்சி மாவட்டம் மணப்பாறை பொன்னம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (50).
இவர் தீவட்டிப்பட்டி அடுத்த நடுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் காடையாம்பட்டி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து பள்ளி விடுமுறை நாட்கள் மற்றும் மாலை நேரங்களில் டியூஷன் நடத்தி வருகிறார்.
இவரிடம் காடையாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மாணவிகள் டியூஷன் பயின்று வருகின்றனர். இதில் 2 மாணவிகளை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆசிரியர் ராஜமாணிக்கம் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்து தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜ மாணிக்கத்தை கைது செய்தனர்.
- அன்றைய தினம் சிறுமி தனது வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அந்த டியூசன் மாஸ்டர் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதார்.
- உஷாரான டியூசன் மாஸ்டர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
உத்தரப்பிரதேசத்தில் டியூஷனுக்கு வந்த 5 வயது சிறுமியை மாஸ்டர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மவு [Mau] மாவட்டத்தில் கடந்த செய்வாய்க்கிழமை அன்று 5 வயது சிறுமி வழக்கம்போல் டியூசன் படிக்க மாஸ்டர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
ஆனால் அன்றைய தினம் சிறுமி தனது வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அந்த டியூசன் மாஸ்டர் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதார். இந்த சம்பவத்துக்கு பிறகு சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தனக்கு நடந்ததை சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். உண்மையை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியில் மூழ்கினர். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உஷாரான டியூசன் மாஸ்டர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
- அதிலிருந்து அந்த மாணவனை ஆசிரியை தவிர்த்துள்ளார்.
- மூன்று பேரும் வீடியோவை வாட்ஸப்பில் பரப்பி இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியை அந்தரங்கமாக வீடியோ எடுத்து 10 வகுப்பு மாணவர்கள் நால்வர், இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள மதுரா பகுதியில் இயங்கி வரும் பள்ளியொன்றில் வேலை பெண் ஒருவர் ஆசிரியையாக வேலை செய்துவந்த்துள்ளார்.
பள்ளி முடிந்ததும் வீட்டில் 10 ஆம் வகுப்புக்கு மாணவர்களுக்கு டியூஷனும் எடுத்துவந்துள்ளார். அதில் ஒரு மாணவன் ஆசிரியை பாத்ரூமில் குளிக்கும்போது வீடியோ எடுத்து தன்னுடனும் தனது நண்பர்களுடனும் உடலுறவு வைத்துக்கொள்ளவில்லை என்றால் அந்த வீடியோவை ஆன்லைனில் பதிவிடுவதாக மிரட்டியுள்ளான். அதிலிருந்து அந்த மாணவனை ஆசிரியை தவிர்த்ததாக தெரிகிறது.
இதனால் கோபமடைந்த மாணவன் சக மாணவர்கள் மூன்று பேருக்கு ஆசிரியையின் அந்தரங்க வீடியோவை அனுப்பிவைத்துள்ளான். அந்த மூன்று பேரும் வீடியோவை வாட்ஸப்பில் பரப்பி இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளனர். இதையறிந்த ஆசிரியை தற்கொலை செய்துகொள்ள முற்பட்டுள்ளார்.
ஆனால் மிஷன் சக்தி எனப்படும் தற்கொலைக்கெதிராக கவுன்சிலிங் வழங்கும் அமைப்பு அவருக்கு உதவியுள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில் வீடியோ எடுத்த 10 வகுப்பு மாணவனும் அவனக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.






