5 வயது சிறுமிக்கு பாலியல் சித்ரவதை.. டியூஷன் மாஸ்டர் தலைமறைவு

அன்றைய தினம் சிறுமி தனது வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அந்த டியூசன் மாஸ்டர் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதார்.உஷாரான டியூசன் மாஸ்டர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
5 வயது  சிறுமிக்கு பாலியல் சித்ரவதை.. டியூஷன் மாஸ்டர் தலைமறைவு
Published on

உத்தரப்பிரதேசத்தில் டியூஷனுக்கு வந்த 5 வயது சிறுமியை மாஸ்டர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மவு [Mau] மாவட்டத்தில் கடந்த செய்வாய்க்கிழமை அன்று 5 வயது சிறுமி வழக்கம்போல் டியூசன் படிக்க மாஸ்டர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

ஆனால் அன்றைய தினம் சிறுமி தனது வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அந்த டியூசன் மாஸ்டர் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதார். இந்த சம்பவத்துக்கு பிறகு சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தனக்கு நடந்ததை சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். உண்மையை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியில் மூழ்கினர். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உஷாரான டியூசன் மாஸ்டர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com