ஆசிரியை குளிக்கும் வீடியோவை இணையத்தில் பரப்பிய 10 ஆம் வகுப்பு மாணவர்கள்.. உடலுறவுக்கு அழைத்த கொடூரம்

அதிலிருந்து அந்த மாணவனை ஆசிரியை தவிர்த்துள்ளார்.மூன்று பேரும் வீடியோவை வாட்ஸப்பில் பரப்பி இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளனர்.
ஆசிரியை குளிக்கும் வீடியோவை இணையத்தில் பரப்பிய 10 ஆம் வகுப்பு மாணவர்கள்.. உடலுறவுக்கு அழைத்த கொடூரம்
Published on

உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியை அந்தரங்கமாக வீடியோ எடுத்து 10 வகுப்பு மாணவர்கள் நால்வர், இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள மதுரா பகுதியில் இயங்கி வரும் பள்ளியொன்றில் வேலை பெண் ஒருவர் ஆசிரியையாக வேலை செய்துவந்த்துள்ளார்.

பள்ளி முடிந்ததும் வீட்டில் 10 ஆம் வகுப்புக்கு மாணவர்களுக்கு டியூஷனும் எடுத்துவந்துள்ளார். அதில் ஒரு மாணவன் ஆசிரியை பாத்ரூமில் குளிக்கும்போது வீடியோ எடுத்து தன்னுடனும் தனது நண்பர்களுடனும் உடலுறவு வைத்துக்கொள்ளவில்லை என்றால் அந்த வீடியோவை ஆன்லைனில் பதிவிடுவதாக மிரட்டியுள்ளான். அதிலிருந்து அந்த மாணவனை ஆசிரியை தவிர்த்ததாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த மாணவன் சக மாணவர்கள் மூன்று பேருக்கு ஆசிரியையின் அந்தரங்க வீடியோவை அனுப்பிவைத்துள்ளான். அந்த மூன்று பேரும் வீடியோவை வாட்ஸப்பில் பரப்பி இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளனர். இதையறிந்த ஆசிரியை தற்கொலை செய்துகொள்ள முற்பட்டுள்ளார்.

ஆனால் மிஷன் சக்தி எனப்படும் தற்கொலைக்கெதிராக கவுன்சிலிங் வழங்கும் அமைப்பு அவருக்கு உதவியுள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில் வீடியோ எடுத்த 10 வகுப்பு மாணவனும் அவனக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com