சென்னையில் சோகம் - கட்டிடம் இடிந்து பெண் உள்பட 2 பேர் பலி

தங்கசாலையில் 100 ஆண்டு பழமை வாய்ந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.அமைச்சர் சேகர்பாபு சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார்.
இடிந்த கட்டிடம்
இடிந்த கட்டிடம்
Published on

சென்னை:

சென்னை சவுகார்பேட்டை தங்கசாலையில் 100 ஆண்டு பழமை வாய்ந்த கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வந்துள்ளது.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் இந்த கட்டிடம் வலுவிழந்து காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை இந்தக் கட்டிடம் முழுவதுமாக இடிந்து கீழே விழுந்தது. இதில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.

போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அமைச்சர் சேகர்பாபு , காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

கனமழையால் கட்டிடம் இடிந்த விபத்தில் 2 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com