என் மலர்
எத்தியோப்பியா
- எரிமலையில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கரும்புகை வெளியேறி வருகிறது.
- தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து 500 மைல் தொலைவில் அமைந்துள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு எரிமலை 12,000 ஆண்டுகளில் முதல் முறையாக வெடித்துள்ளது.
தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து 500 மைல் தொலைவில் அமைந்துள்ள ஹைலே குப்பி எரிமலை இன்று வெடித்துள்ளது. இதனால் எரிமலையில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கரும்புகை வெளியேறி வருகிறது.
எரிமலை வெடிப்பால் லாவா எரிமலை குழம்பும் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.
எரிமலையிலிருந்து சாம்பல் மேகங்கள் இந்தியா, ஏமன், ஓமன் மற்றும் வடக்கு பாகிஸ்தான் நோக்கி நகர்ந்து வருகின்றன.
இந்த எரிமலை வெடிப்பில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தியாவில் விமானப் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
கண்ணூரில் இருந்து அபுதாபிக்கு சென்ற இண்டிகோ விமானம் அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டது. அதேபோல் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
- மத விழாவுக்காகக் கூடி இருந்த பக்தர்களின் பாரம் தாங்காமல் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மரச் சாரம் இடிந்து விழுந்தது.
- இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்கள் நசுங்கி இறந்ததாக காவல்துறை தெரிவித்தது.
எத்தியோப்பியாவில் தேவாலயத்தில் ஏற்பட்ட விபத்தில் 36 பேர் பலியாகினர் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அம்ஹாரா பிராந்தியத்தின் மின்ஜார் ஷெங்கோரா வோரெடா, வடக்கு ஷேவா மண்டலத்தில் உள்ள அரெர்டி செயின்ட் மேரி தேவாலயத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
புதன்கிழமை, மத விழாவுக்காகக் கூடி இருந்த பக்தர்களின் பாரம் தாங்காமல் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மரச் சாரம் இடிந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.
இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்கள் நசுங்கி இறந்ததாகவும், ஓரங்களில் இருந்தவர்கள் வெளியே ஓடி காயங்களுடன் உயிர்தப்பியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் சிலர் தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
- திருமண நிகழ்வுக்காக லாரி ஒன்றில் 70க்கும் மேற்பட்டோர் சென்றுகொண்டிருந்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடிஸ் அபாபா:
எத்தியோப்பியா நாட்டின் கிராமப்பிற பகுதிகளில், திருமணங்கள் போன்ற சமூக நிகழ்வுகளுக்கு பேருந்துகளை வாடகைக்கு எடுப்பதற்குப் பதிலாக லாரிகளை வாடகைக்கு எடுப்பதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஏனெனில் அவை மலிவு விலையில் கிடைப்பதாலும், பலரை ஏற்றிச் செல்ல முடிவதாலும், காலாச்சார ரீதியாக மக்கள் இவ்வாறு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், தெற்கு எத்தியோப்பியாவின் சிடாமா பகுதியில் திருமண நிகழ்வுக்காக லாரி ஒன்றில் 70க்கும் மேற்பட்டோர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஆற்றுப்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி, எதிர்பாராதவிதமாக ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 64 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. மோசமான சாலையும் விபத்துக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- எத்தியோப்பியாவில் பெய்த கனமழையால் அங்கு மண் சரிவு ஏற்பட்டது.
- இதில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்பட 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
அடிஸ் அபாபா:
தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தின் கோபா மண்டலத்தில் கடந்த 21-ம் தேதி கனமழை பெய்தது. இதனால் அங்கு மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் சிக்கி குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்பட 55 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், எத்தியோப்பியாவில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 257 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
மண் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் மீட்புக் குழு ஈடுபட்டு வருகிறது. காணாமல் போனவர்களை தேடி வருகிறோம் என்பதால் பலி எண்ணிக்கை 500-ஐ கடக்கலாம் என ஐ.நா. அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
- எத்தியோப்பியாவில் பெய்து வரும் கனமழையால் அங்கு மண் சரிவு ஏற்பட்டது.
- இதில் சிக்கி குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
அடிஸ் அபாபா:
தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தின் கோபா மண்டலத்தில் கடந்த 21-ம் தேதி கனமழை பெய்தது. இதனால் அங்கு மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் சிக்கி குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்பட 55 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், எத்தியோப்பியாவில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இதுவரை 5க்கும் மேற்பட்டோரை மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர்.
மண் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடி வருகிறோம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 10 அடி உயர குச்சிகளில் பழங்குடியின மக்கள் நடந்து செல்லும் ஒரு வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
- 'முன்னெச்சரிக்கை' என்ற தலைப்பில் பகிரப்பட்ட வீடியோவை பார்த்த பயனர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வெளிவந்தாலும் அவற்றில் சில வீடியோக்கள் பயனர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. அந்த வகையில், 10 அடி உயர குச்சிகளில் பழங்குடியின மக்கள் நடந்து செல்லும் ஒரு வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
எத்தியோப்பியாவில் வசிக்கும் பன்னா என்ற பழங்குடியின மக்கள் இந்த சவாலான திறமையை தங்கள் அன்றாட வாழ்க்கையில் தடையின்றி மேற்கொண்டு வருகின்றனர். இந்த பழக்கமானது வரலாற்று ரீதியாக ஆன்மீக நோக்கங்களுக்காக நடைபெற்று வருகிறது.
நச்சு பாம்புகளிடம் இருந்து தங்களை காத்து கொள்ள பன்னா பழங்குடியினரால் எடுக்கப்பட்ட 'முன்னெச்சரிக்கை' என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். வெறும் நடைபயணத்துக்கு அப்பால், பன்னா மக்கள் ஸ்டில்ட் நடை பயணத்தை ஒரு கலை வடிவமாகவே உயர்த்தி உள்ளதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Precautions taken by the Banna Tribe to protect themselves from poisonous snakes. pic.twitter.com/P4E0drblIJ
— Figen (@TheFigen_) May 15, 2024
- மோதல் அதிகரித்து வருவதை தொடர்ந்து அவசரகால நிலை பிரகடனம் செய்து அந்த நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
- பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
எத்தியோப்பியாவில் 2-வது பெரிய பிராந்தியமான அம்ஹாராவில் ராணுவத்துக்கும், உள்ளூர் பானோ போராளிகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.
இந்த மோதல் அதிகரித்து வருவதை தொடர்ந்து அவசரகால நிலை பிரகடனம் செய்து அந்த நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோதலை கட்டுப்படுத்துவது கடினமாகி விட்டதால் அவசர நிலையை பிரகடனப்படுத்துவது அவசியம் என்று தெரிவித்துள்ளது.
பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வாரண்ட் இன்றி கைது செய்யும் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
- பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 464 மனுக்கள் பெறப்பட்டது.
- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 464 மனுக்கள் பெறப்பட்டது.
இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து வருவாய் துறை சார்பில் திருவிடைமருதூர் வட்டத்தைச் சேர்ந்த மூன்று பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகளையும், பட்டு வளர்ச்சி துறையின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டு புழு வளர்ப்பு தொடர்ந்து சிறந்த முறையில் வளர்த்து வரும் பட்டு விவசாயிகளுக்கு மாநிலத் திட்டத்தின் மூலம் சிறந்த பட்டு விவசாயிகளுக்கான 3 நபர்களுக்கு ரொக்க பரிசுகளும், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான அகவை முதிர்ந்த 2 தமிழறிஞர்களுக்கும், தமிழில் சிறந்த வரைவு குறிப்பு எழுதிய 3 அரசு பணியாளர்களுக்கும் பரிசு தொகைக்காண காசோலைகளும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை அவயங்களும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு பரிசு தொகைக்கான காசோலை சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்பிரதீப் கண்ணன், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்சபீர் பானு, பட்டு வளர்ச்சி துறை உதவி ஆய்வாளர் தீபா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






