search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mudslides"

    • எத்தியோப்பியாவில் பெய்த கனமழையால் அங்கு மண் சரிவு ஏற்பட்டது.
    • இதில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்பட 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    அடிஸ் அபாபா:

    தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தின் கோபா மண்டலத்தில் கடந்த 21-ம் தேதி கனமழை பெய்தது. இதனால் அங்கு மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் சிக்கி குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்பட 55 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், எத்தியோப்பியாவில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 257 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

    மண் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் மீட்புக் குழு ஈடுபட்டு வருகிறது. காணாமல் போனவர்களை தேடி வருகிறோம் என்பதால் பலி எண்ணிக்கை 500-ஐ கடக்கலாம் என ஐ.நா. அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

    • தெற்கு எத்தியோப்பியாவின் கென்சோ சச்சா கோஸ்டி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.
    • சிலர் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

    ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டன.

    இதற்கிடையே தெற்கு எத்தியோப்பியாவின் கென்சோ சச்சா கோஸ்டி மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் சிக்கி மண்ணில் புதைந்தனர். மீட்புக்குழு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அப்போது பலர் பலியாகி இருப்பது தெரிந்தது. அவர்களது உடல்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்டன.

    இதில் 157 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து நடந்த மீட்புப்பணியில் மேலும் பலரது உடல்கள் மீட்கப்பட்டன. இந்த நிலையில் நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 229-ஆக உயர்ந்துள்ளது. சிலர் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் வசித்த பலரை காணவில்லை. எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    • எத்தியோப்பியாவில் பெய்து வரும் கனமழையால் அங்கு மண் சரிவு ஏற்பட்டது.
    • இதில் சிக்கி குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    அடிஸ் அபாபா:

    தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தின் கோபா மண்டலத்தில் கடந்த 21-ம் தேதி கனமழை பெய்தது. இதனால் அங்கு மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் சிக்கி குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்பட 55 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், எத்தியோப்பியாவில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது.

    தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இதுவரை 5க்கும் மேற்பட்டோரை மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர்.

    மண் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடி வருகிறோம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்டங்களில் நிலச்சரிவு மற்றும் பாலங்கள் மூழ்கியதால் ரெயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. #KeralaFlood #KeralaTrainsCancelled
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு ரெயில்வே கோட்டங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. 

    இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    திருவனந்தபுரம்-எர்ணாகுளம் (கோட்டயம் வழி) வழித்தடத்தில் அனைத்து ரெயில்களும் நாளை மாலை 4 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

    எர்ணாகுளம்-ஷோரனூர் மற்றும் பாலக்காடு வழித்தடத்தில் அனைத்து ரெயில்களும் நாளை மாலை 4 மணி வரை ரத்து செய்யப்படுகின்றன. இதேபோல் ஷோரனூர்-கோழிக்கோடு வழித்தடத்தில் இன்று மாலை வரை ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. 

    அடுத்த அறிவிப்பு வரும் வரை திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்டங்களில் இயக்கப்படும் அனைத்து சுவிதா ரெயில்கள், சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

    பல்வேறு பகுதிகளில் ரெயில்பாதைகள் மற்றும் ரெயில்வே பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால், ரெயில்வே அவ்வப்போது வெளியிடும் அறிவிப்புகளை தெரிந்துகொண்டு அதன்படி பயணம் செய்யும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

    பாலக்காடு-ஷோரன்பூர் வழித்தடத்தில் இன்று மாலை ரெயில்  சேவையை தொடங்க முடியுமா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 

    எனினும் திருவனந்தபுரம்-எர்ணாகுளம் (அலெப்பி வழி) மற்றும் திருவனந்தபுரம்- திருநெல்வேலி (நாகர்கோவில் வழி) ஆகிய வழித்தடங்களில் அந்த பகுதியில் உள்ள நிலவரத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக எர்ணாகுளத்தில் இருந்து அலெப்பி வழியாக திருவனந்தபுரத்திற்கு சிறப்பு பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. 

    இவ்வாறு தெற்கு ரெயில்வே செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #KeralaFlood #KeralaTrainsCancelled
    ×