என் மலர்
உள்ளூர் செய்திகள்
12 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால் உபகரணங்கள்- கலெக்டர் வழங்கினார்
- பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 464 மனுக்கள் பெறப்பட்டது.
- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 464 மனுக்கள் பெறப்பட்டது.
இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து வருவாய் துறை சார்பில் திருவிடைமருதூர் வட்டத்தைச் சேர்ந்த மூன்று பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகளையும், பட்டு வளர்ச்சி துறையின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டு புழு வளர்ப்பு தொடர்ந்து சிறந்த முறையில் வளர்த்து வரும் பட்டு விவசாயிகளுக்கு மாநிலத் திட்டத்தின் மூலம் சிறந்த பட்டு விவசாயிகளுக்கான 3 நபர்களுக்கு ரொக்க பரிசுகளும், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான அகவை முதிர்ந்த 2 தமிழறிஞர்களுக்கும், தமிழில் சிறந்த வரைவு குறிப்பு எழுதிய 3 அரசு பணியாளர்களுக்கும் பரிசு தொகைக்காண காசோலைகளும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை அவயங்களும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு பரிசு தொகைக்கான காசோலை சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்பிரதீப் கண்ணன், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்சபீர் பானு, பட்டு வளர்ச்சி துறை உதவி ஆய்வாளர் தீபா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.