என் மலர்tooltip icon

    உலகம்

    பயங்கரவாதத்தை எதிர்க்கும் எத்தியோப்பியா நாட்டிற்கு நன்றி- பிரதமர் மோடி
    X

    பயங்கரவாதத்தை எதிர்க்கும் எத்தியோப்பியா நாட்டிற்கு நன்றி- பிரதமர் மோடி

    • இந்தியாவில் உள்ள எனது சொந்த மாநிலமான குஜராத்தும் சிங்கங்களின் இருப்பிடமாக உள்ளது.
    • எத்தியோப்பியாவின் விடுதலைக்காக இந்திய வீரர்கள் எத்தியோப்பியர்களுடன் இணைந்து போரிட்டனர்.

    எத்தியோப்பியாவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி இன்று அந்நாட்டு பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    சிங்கங்களின் பூமியான எத்தியோப்பியாவில் இருப்பது அற்புதமாக இருக்கிறது. நான் இங்கு என் சொந்த ஊரில் இருப்பது போல் உணர்கிறேன். ஏனென்றால் இந்தியாவில் உள்ள எனது சொந்த மாநிலமான குஜராத்தும் சிங்கங்களின் இருப்பிடமாக உள்ளது.

    இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரம் மற்றும் எத்தியோப்பியாவின் தேசிய கீதம் ஆகிய இரண்டுமே நமது தேசத்தை அன்னை என்று குறிப்பிடுகின்றன. அவை நமது பாரம்பரியம், கலாச்சாரம், அழகு ஆகியவற்றில் பெருமை கொள்ளவும், தாய்நாட்டைப் பாதுகாக்கவும் நம்மை தூண்டுகின்றன.

    எத்தியோப்பியா ஆப்பிரிக்காவின் ஒரு முக்கிய சந்திப்பில் அமைந்துள்ளது. இந்தியா இந்தியப் பெருங்கடலின் மையத்தில் உள்ளது. இரு நாடுகளும் பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் இணைப்பு ஆகியவற்றில் இயல்பான கூட்டாளிகள்.

    இந்தியாவின் 140 கோடி மக்களின் சார்பில் நான் நட்பு, நல்லெண்ணம் மற்றும் சகோதரத்துவ வாழ்த்துக்களைக் கொண்டு வந்து உள்ளேன். எத்தியோப்பியாவின் உயரிய விருதை பெறும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இந்த விருதை இந்திய மக்களின் சார்பாக பணிவுடனும் கைகூப்பியும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

    இந்தியாவும் எத்தியோப்பியாவும் தட்பவெப்ப நிலையிலும் உணர்விலும் ஒருமித்த அன்பைப் பகிர்ந்து கொள்கின்றன. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது மூதாதையர்கள் பரந்த கடல்களுக்கு அப்பால் தொடர்புகளை உருவாக்கினார்கள்.

    1941-ம் ஆண்டில் எத்தியோப்பியாவின் விடுதலைக்காக இந்திய வீரர்கள் எத்தியோப்பியர்களுடன் இணைந்து போரிட்டனர்.

    இந்திய நிறுவனங்கள் எத்தியோப்பியாவில் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளர்களில் ஒன்றாக உள்ளன. வளரும் நாடுகளாக இந்தியாவும் எத்தியோப்பியாவும் ஒரு வருக்கொருவர் கற்றுக் கொள்ளவும், வழங்கவும் நிறைய உள்ளன.

    உலகளாவிய தெற்குப் பகுதி யாருக்கும் எதிராக அல்லாமல், அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில் எழுச்சி பெறும் ஒரு உலகமாகும்.

    பயங்கரவாதத்தை எதிர்க்கும் எத்தியோப்பியா நாட்டிற்கு நன்றி

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×