என் மலர்
இந்தியா

குஜராத் கட்டிடம் இடிந்து விபத்து- உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு
- படுகாயமடைந்தவர்கள் குருகோபிந்த் சிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு.
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள சாதனா காலனி பகுதியில் 30 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஒன்று பாழடைந்த நிலையில் இருந்தது.
இந்த நிலையில் இந்த கட்டிடம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர்.
மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3 பெண்கள் உட்பட 5 பேரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
அவர்கள் குருகோபிந்த் சிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
Next Story






