search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dies toll increase"

    இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. #SriLankaAttacks #SriLankaBlast
    கொழும்பு:

    இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையன்று காலை மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீது திடீரென வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதன்பின் அன்று மதியம் 2 மணியளவில் இரு தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

    இந்த தாக்குதல்களில் இதுவரை 359 பேர் உயிரிழந்து உள்ளனர்.  500 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.  இதுவரை 76 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


    இதுபற்றி இலங்கை வெளியுறவு துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை வருமாறு:-

    வங்காளதேசம்- 1
    சீனா-2
    இந்தியா - 11
    டென்மார்க் - 3
    ஜப்பான் -1
    நெதர்லாந்து- 1
    போர்ச்சுகல்- 1
    சவுதி அரேபியா - 2
    ஸ்பெயின் -1
    துருக்கி -2
    இங்கிலாந்து- 6
    அமெரிக்கா -1

    அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை வைத்துள்ள 2 பேர், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை நாட்டின் குடியுரிமை வைத்துள்ள 2 பேர் என 36 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

    இதுவரை 14 வெளிநாட்டவர்களை பற்றிய விவரம் தெரியவரவில்லை. 12 வெளிநாட்டினர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் கொழும்பு நகர மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என வெளியுறவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #SriLankaAttacks #SriLankaBlast
    ×