search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hooch tragedy"

    பீகாரில் கடந்த 2 நாட்களில் போலீசார் நடத்திய சோதனையில் பல லட்சம் லிட்டர் கள்ளச் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு கடந்த 5 ஆண்டாக அமலில் உள்ளது. மது விலக்கு அமலில் உள்ளதால் சட்டவிரோதமாக கள்ளச் சாராயம் காய்ச்சி குடிப்பது அரங்கேறி வருகிறது. இதில் அடிக்கடி பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.  

    இதற்கிடையே, பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் அருந்தியதாகக் கூறப்படும் 9  பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் நவல் கிஷோர் சவுத்ரி தெரிவித்துள்ளார். 

    இந்நிலையில், பீகாரின் கோபால்கஞ்ச், மேற்கு சம்பரான் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களில் கள்ளச் சாராயம்  அருந்தியதால் சுமார்  26 பேர் இறந்துள்ளனர் மற்றும் பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். 

    கோபால்கஞ்சில் கள்ளச் சாராயம் குடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. சம்பரான் மாவட்டத்தின் பெட்டியாவில் உள்ள தெலுவா கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்த 9 பேர் நேற்று இறந்தனர். 

    இந்த விவகாரம் தொடர்பாக 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர் என கோபால்கஞ்ச் எஸ்.பி அனந்த்குமார் தெரிவித்தார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 14 உயிர்கள் பலியானதற்கு காரணமான கள்ளச்சாராய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சில மாவட்டங்களில் ரகசியமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் தொழிலை பலர் செய்து வருகின்றனர்.

    பாரபங்கி மாவட்டத்தில் உள்ள ராம்நகர் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை அருகாமையில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் வாங்கி குடித்தனர்.
     
    குடித்த சில நிமிடங்களில் அவர்களில் சிலர் கண்ணிருண்டு, ரத்தவாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். அவர்கள் அனைவரும் அருகாமையில் உள்ள ராம்நகர் ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.



    இதுகுறித்து உடனே விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசின் முதன்மை செயலாளர் மற்றும் பாரபங்கி மாவட்ட உயரதிகாரிகளுக்கு உ.பி முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

    மேலும், 14 உயிர்கள் பலியானதற்கு காரணமான சாராய வியாபாரி பப்பு ஜெய்ஸ்வால் என்பவரை போலீசார் இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். 
    அசாம் மாநிலத்தில் விஷச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #HoochTragedy #AssamHoochTragedy
    கவுகாத்தி:

    அசாம் மாநிலம் கோலஹட் மாவட்டத்தில் ஹல்மிரா தேயிலை தோட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கு முன் மது குடித்த நூற்றுக்கணக்கானவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் தொடர்ந்து ஏராளமானவர்கள் இறந்து வந்தனர்.



    இந்தநிலையில் நேற்று வரை கோலஹட் மாவட்டத்தில் மட்டும் 99 பேரும், எல்லை பகுதியில் உள்ள ஜோர்ஹட் பகுதியில் 58 பேரும் பலியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அசாமில் விஷ சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை நேற்று 157 ஆக உயர்ந்தது. இதுதொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #HoochTragedy #AssamHoochTragedy


    அசாம் மாநிலத்தில் விஷச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #HoochTragedy #AssamHoochTragedy
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கோலாஹாட் மாவட்டத்தில் தேயிலை தோட்டங்கள் அதிகமாக உள்ளன. இங்கு கோல்ஹாட் மற்றும் ஜோர்ஹாட் மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த 21ம் தேதி நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பங்கேற்ற பலர், அப்பகுதியில் உள்ள வியாபாரியிடம் விஷத்தன்மை கொண்ட கள்ளச் சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர். 

    அந்த சாராயத்தை குடித்த சிறிது நேரத்திற்குள் சிலர் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். அவர்களில் 19 பேர் உயிரிழந்தனர். 200க்கு மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி தினந்தோறும் பலர் உயிரிழந்து வருகின்றனர்.



    சம்பவம் நடந்த நான்காவது நாளான இன்றைய நிலவரப்படி விஷச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அசாம் மாநிலத்தையே உலுக்கி உள்ள இந்த சம்பவம் தொடர்பாக, கலால் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #HoochTragedy #AssamHoochTragedy
    அசாம் மாநிலத்தில் விஷச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் பலர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது. #HoochTragedy #AssamHoochTragedy
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கோலாஹாட் மாவட்டத்தில் தேயிலை தோட்டங்கள் அதிகமாக உள்ளன. இங்கு கோல்ஹாட் மற்றும் ஜோர்ஹாட் மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இப்பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பங்கேற்ற பலர், அப்பகுதியில் உள்ள வியாபாரியிடம் விஷத்தன்மை கொண்ட கள்ளச் சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர். 

    அந்த சாராயத்தை குடித்த சிறிது நேரத்திற்குள் சிலர் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதனால் சாராயம் குடித்த அனைவரும் கோலாஹாட் மற்றும் ஜோர்ஹாட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 19 பேர் சிறிது நேரத்திற்குள் உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
     
    இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், மேலும் பலர் உயிரிழந்தனர். இன்று காலை மாநில கலால்துறை வெளியிட்ட தகவலின்படி, கள்ளச்சாராயம் குடித்ததால் பலியானோரின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 50 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அசாம் மாநிலத்தையே உலுக்கி உள்ள இந்த சம்பவம் தொடர்பாக, கலால் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 



    இந்நிலையில், அசாம் மாநிலத்தில் விஷச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் பலர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக 12 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து விசாரணை நடத்தி ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி முதல் மந்திரி சர்பானந்த சோனோவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், கள்ள சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். #HoochTragedy #AssamHoochTragedy
    உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் கள்ளச்சாராயத்தால் சுமார் 100 பேர் பலியாகிய நிலையில், இதுகுறித்து விசாரிக்க உத்தரபிரதேச அரசு சார்பில் 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. #HoochTragedy
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநிலத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் மாவட்டம், பாலுப்பூர் ரூர்கி பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடந்து வருகிறது. கடந்த 8-ம் தேதி நள்ளிரவு இம்மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்த பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

    இதில் 12 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது. பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த பலரும் அடுத்தடுத்து உயிரிழக்க, தற்போது பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.



    இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை உத்தரபிரதேச அரசு அமைத்துள்ளது. இந்த குழு விரைவில் தனது விசாரணையை தொடங்கவுள்ளது.

    முன்னதாக இந்த கோர சம்பவத்துக்கு உத்தரபிரதேசம் (கிழக்கு) மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இரங்கலும், கண்டனமும் தெரிவித்துள்ளார். சுமார் 100 உயிர்களை பறித்த இந்த சம்பவத்துக்கு உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆட்சி நடத்திவரும் பா.ஜ.க. அரசுகள் பொறுப்பேற்க வேண்டும என்றும் அவர் கூறினார். #Uttarakhand #UttarPradesh #hoochtragedy 

    உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 70 ஆக உயர்ந்துள்ளது. #UttarakandIllicitliquor #UPIllicitliquor
    டேராடூன்:

    உத்தரபிரதேசம் மாநிலத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் மாவட்டம், பாலுப்பூர் ரூர்கி பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடந்து வருகிறது. நேற்று நள்ளிரவு இம்மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்த பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.
     
    இதில் 12 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது. பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

    கள்ளச்சாராயம் விற்பனைக்கு துணைபோன உள்ளூர் அதிகாரிகள் 13 பேரை ஹரித்துவார் மாவட்ட நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இந்நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிலர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். 

    இன்று மாலை நிலவரப்படி ஹரித்துவார் மாவட்டத்தை சேர்ந்த 24 பேரும், உத்தரபிரதேசம் மாநிலம், சஹரான்பூர் எல்லைப்பகுதி வழியாக இங்கு வந்து கள்ளச்சாராயம் குடித்துவிட்டு சென்ற 46 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #UttarakandIllicitliquor #UPIllicitliquor
    மேற்கு வங்காளத்தில் விஷ சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. #Liquor #WestBengal
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள சாந்திப்பூர் என்கிற பகுதியில் வசித்து வரும் பழங்குடி இனத்தை சேர்ந்த பலர் சமீபத்தில் விஷ சாராயம் குடித்தனர். அடுத்த சில மணி நேரங்களில் அவர்களுக்கு வாந்தி, பேதி போன்ற உபாதைகள் ஏற்பட்டது.
     
    உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 60 வயது மூதாட்டி ஒருவர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 4 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், விஷ சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 5 பேர் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதையடுத்து, விஷ சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 25 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  #Liquor #WestBengal
    ×