search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kharge"

    • தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள், சகோதரிகளின் நகைகளை மதிப்பீடு செய்து, மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது என பிரதமர் குற்றச்சாட்டு.
    • காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இல்லாததை, தங்களது ஆலோசகர் தாங்களுக்கு தவறான தகவல்களை கொடுத்துள்ளனர் என காங்கிரஸ் பதில்.

    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம் அளிக்க நேரம் கேட்டு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுத்தியுள்ளார்.

    இரண்டு பக்க கடிதத்தில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இல்லாததை, தங்களது ஆலோசகர் தாங்களுக்கு தவறான தகவல்களை கொடுத்துள்ளனர் என கார்கே அதில் குறிப்பிட்டுள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம் அளிக்க உங்களை சந்திக்கும் நபராக நான் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைவேன். நாட்டின் பிரதமராக இருக்கும் நீங்கள் தவறான அறிக்கைகளை உருவாக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள், சகோதரிகளின் நகைகளை மதிப்பீடு செய்து, மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது விமர்சனம் செய்திருந்தார்.

    தேர்தல் அறிக்கையின் ஒரு வரியை வைத்துக்கொண்டு பேசக்கூடாது என காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • நாளுக்கு நாள் பாஜனதாவின் வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது.
    • இதனால் பா.ஜனதா அவற்றின் நெருங்கிய நண்பரான முஸ்லிம் லீக்கை நினைவு கூறத் தொடங்கியுள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்திய சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய முஸ்லிம் லீக் சித்தாந்தத்தை ஒத்திருப்பதாக பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது-

    பிரதமர் மோடி- அமித் ஷா ஆகியோரின் அரசியல் மற்றும் சித்தாந்த முன்னோடிகள் சுதந்திர போராட்டத்தின் போது பிரட்டிஷ், முஸ்லிம் லீக்கை ஆதரித்தனர். இன்று கூட காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக்கு எதிராக முஸ்லிம் லீக்கை தூண்டி விடுகின்றனர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சாமானிய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் உள்ளது

    1942-ல் இந்தியனே வெளியேறு என்ற மகாத்மா காந்தியின் அழைப்பை மோடி- அமித் ஷாவின் சித்தாந்த முன்னோடிகள் எதிர்த்தனர்

    வெள்ளையனே வெளியேறு போராட்டம் எப்படி நடத்தலாம்? காங்கிரஸ் கட்சியை எப்படி அடக்கலாம்? என சியாம பிரசாத் முகர்ஜி பிரிட்டிஷ் கவர்னருக்கு கடிதம் எழுதவில்லையா? மேலும் இந்தியர்கள் பிரிட்டிஷ் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என கூறவில்லையா?

    மோடி மற்றும் அமித் ஷா, அவர்கள் நியமித்த தலைவர்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.

    பிரதமர் மோடியின் பேச்சில் ஆர்.எஸ்.எஸ். வாடை வீசுகிறது. நாளுக்கு நாள் பா.ஜனதாவின் வாய்ப்பு இறங்கி கொண்டே வருகிறது. இதனால் பா.ஜனதா அவற்றின் நெருங்கிய நண்பர்களான முஸ்லிம் லீக்கை நினைவு கூறத் தொடங்கியுள்ளது.

    காங்கிரஸ் தேர்தலில் அறிக்கை 140 கோடி மக்களின் நம்பிக்கை மட்டும் அபிலாஷைகளை பிரதிபலிக்கிறது. அவர்களின் வலிமை மோடியின் 10 ஆண்டுகால அநீதியை முடிவுக்கு கொண்டு வரும்.

    இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சில சுயநல நபர்கள் அரசியல் வழக்குகளில் நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் கடிதம்.
    • மற்றவர்களை மிரட்டுவதும், கொடுமைப்படுத்துவதும் பழைய காங்கிரஸ் கலாசாரம்- பிரதமர் மோடி

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டுக்கு நாடு முழுவதும் இருந்து 600 வக்கீல்கள் ஒரு கடிதம் எழுதி உள்ளனர். அதில் சில சுயநல நபர்கள் அரசியல் வழக்குகளில் நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும், வழக்கை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும், எப்படி தீர்ப்பு அளிக்க வேண்டும் என்பதில் தலையிட முயற்சிப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

    வக்கீல்கள் கடிதம் தொடர்பாக பிரதமர் மோடி பதில் அளித்திருந்தார். அதில் "மற்றவர்களை மிரட்டுவதும், கொடுமைப்படுத்துவதும் பழைய காங்கிரஸ் கலாசாரம். 50 ஆண்டுகளுக்கு முன்பு, அர்ப்பணிப்பு உணர்வுள்ள நீதித்துறை வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது. ஆனால், தனது சுயநல ஆதாயங்களுக்காக மற்றவர்களிடம்தான் அர்ப்பணிப்பு உணர்வை வெட்கமின்றி எதிர்பார்க்கிறது. மற்றபடி நாடு மீதான அர்ப்பணிப்பு உணர்வில் இருந்து நழுவிக்கொள்கிறது. எனவே, 140 கோடி இந்தியர்களும் அக்கட்சியை நிராகரித்ததில் ஆச்சரியம் இல்லை" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் மோடியை நோக்கி பல கேள்விகளை எழுப்பி பதில் கொடுத்துள்ளார்.

    இந்திய நிறுவனங்களை உங்களுடைய தனிப்பட்ட சொத்தாக கருதும் உங்களை நோக்கி சில கேள்விகள் என பிரதமர் மோடியை நோக்கி மல்லிகார்ஜூன கார்கே எழுப்பிய கேள்விகள்:-

    1. முதல் கேள்வி 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக பொது வெளியில் பேட்டி அளித்தனர். அப்போது ஜனநாயக செயல்பட்டிற்கு சுந்திர நீதித்துறை முக்கியமானது எனத் தெரிவித்திருந்தனர்.

    2. அதில் இடம் பிடித்திருந்த நீதிபதிகளில் ஒருவர் மாநிலங்களவைக்கு அரசால் நியமனம் செய்யப்பட்டது ஏன்?.

    3. இதுவரை இல்லாத வகையில் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் 2020-ல் மாநிலங்களவை எம்.பி.யாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தால் நியமனம் செய்யப்பட்டார். அதற்கு முன்னதாக அதுபோன்ற என்ற நீதிபதி பெயரும் பரிந்துரை செய்யப்படவில்லை.

    4. மக்களவை தேர்தலுக்காக மேற்கு வங்காளத்தில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியை அபிஜீத் கங்கோபாத்யாய் உங்களுடைய கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது?.

    5. உச்சநீதிமன்றம் ரத்து செய்த போதிலும், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அரசால் ஏன் கொண்டுவரப்பட்டது? (காங்கிரஸ் பின்னர் அரசியலமைப்பு திருத்த மசோதாவிற்கு பாராளுமன்றத்தில் ஆதரவு அளித்தது).

    இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கூட்டணிக்கான எங்கள் கதவுகள் எப்போதுமே திறந்தே உள்ளன.
    • வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி வரையில் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளுக்கான வேட்பளர்களை வெளியிட்டார்.

    மம்தாவின் இந்த அதிரடியான அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டார்.

    இந்த நிலையில் மம்தா பானர்ஜியுடன் இன்னும் கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கூட்டணிக்கான எங்கள் கதவுகள் எப்போதுமே திறந்தே உள்ளன. பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி வரையில் எப்போது வேண்டுமானாலும் திரிணாமுல் காங்கிரசுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

    மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது:-

    இந்தியா கூட்டணியில் இருந்தால் அமலாக்கத்துறை, சி.பி.ஐ.யை பிரதமர் மோடி வீட்டுக்கு அனுப்புவார் என்று மம்தா பானர்ஜி பயப்படுகிறார். எனவே பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு செய்தியை அனுப்பி உள்ளார். என் மீது அதிருப்தி அடைய வேண்டாம். நான் பா.ஜனதாவுக்கு எதிரான கூட்டணியில் நிற்கவில்லை என்பதுதான் அந்த செய்தியாகும்.

    இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்திரி விமர்சனம் செய்துள்ளார்.

    • காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் பொருளாதாரத்துடம் ஒப்பிடும் வகையில் வெள்ளை அறிக்கை.
    • பா.ஜனதா வெள்ளை அறிக்கை கொண்டு வரும் நிலையில், போட்டியாக கருப்பு அறிக்கை கொண்டு வர முடிவு.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அப்போது காங்கிரஸ் தலைமையிலான 2014-க்கு முந்தைய மத்திய அரசின் 10 ஆண்டு காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலையுடன் தற்போது மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரத்தை ஒப்பிடும் வகையில் மத்திய அரசு வெள்ளை கொண்டு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரு அவைகளிலும் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார். அதன்மீது விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பு நடத்தப்படும்.

    இந்த நிலையில் காங்கிரஸ் கருப்பு அறிக்கை கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியுளு்ளது. மோடியின் 10 ஆண்டு அரசு தொடர்பாக கருப்பு அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கொண்டு வருவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதனால் சனிக்கிழமை (பிப்ரவரி 10-ந்தேதி) பாராளுமன்ற இரு அவைகளிலும் காரசார விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ராஜஸ்தானில் பாஜக சார்பில் நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவு செய்ததை அடுத்து நேற்று ராஜஸ்தானில் பாஜக சார்பில் நிறைவு விழா கொண்டாடப்பட்டது.

    ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு பேசினார். அப்போது அவர், "காங்கிரஸ் அளிக்கும் புதிய வாக்குறுதிகளில் சூத்திரம் உள்ளது. அவர்களின் உத்தரவாதங்கள் நாட்டை திவாலாக தான் ஆக்கும்" என்றார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர், " பிரதமர் மோடி பெரிய தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்குவார். ஆனால், ஏழை எளிய மக்களுக்கு நாங்கள் வாக்குறுதிகள் அளித்தால் அது பிரதமருக்கு பெரிய பிரச்சினையாக உள்ளது" என்றார்.

    • மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் மரபணு, ஏழைகளுக்கு எதிரானது.
    • காங்கிரஸ் கட்சி, அனைவரையும் ஒன்றிணைப்பதற்காக உழைக்கிறது.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம், நவராய்ப்பூரில் நடைபெறும் காங்கிரஸ் மாநாட்டில், கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அரசியல் சாசனம் மீதும், ஜனநாயக மதிப்பீடுகள் மீதும் தொடரும் தாக்குதல்கள், சீன எல்லையில் தேசிய பாதுகாப்பு பிரச்சினை, எப்போதும் விண்ணைத்தொடும் விலைவாசி உயர்வு, வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டம் என நாடு சவால்களை சந்தித்து வருகிறது.

    இந்த கடினமான சூழ்நிலைகளில், நாட்டுக்குத் தகுதி வாய்ந்த, தீர்க்கமான தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி மட்டும்தான் உண்டு.

    2004-ம் ஆண்டு தொடங்கி 2014-ம் ஆண்டு வரையில், ஒரே சிந்தனை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடத்தி, நாட்டு மக்களுக்கு சேவை செய்தது.

    நாங்கள் மக்கள் விரோதமான, ஜனநாயக விரோதமான பா.ஜ.க. அரசை தோற்கடிப்பதற்காக ஒரே சிந்தனை கொண்ட கட்சிகளுடன் சேர்ந்து சாத்தியமான கூட்டணியை உருவாக்குவதை மீண்டும் எதிர்பார்க்கிறோம்.

    நாங்கள் நாட்டு மக்களின் நலனுக்காக கடினமாக உழைக்கத் தயாராக இருக்கிறோம். வரக்கூடிய சட்டசபை தேர்தல்கள், அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஆகியவற்றில் எங்கள் இலக்குகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக என்ன தியாகம் செய்வதற்கும் தயாராக இருக்கிறோம்.

    மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் மரபணு, ஏழைகளுக்கு எதிரானது. அவர்கள் நாட்டின் ஜனநாயகத்தை அழிக்க முயற்சிக்கின்றனர். நாட்டின் தற்போதைய நிலைமைக்கு எதிராக மக்கள் இயக்கம் தொடங்க வேண்டும்.

    பிரதம சேவகன் என்று தன்னை அழைத்துக்கொள்கிறவர் (பிரதமர் மோடி), தனது நண்பர்களின் நலன்களுக்காகத்தான் சேவையாற்றிக்கொண்டிருக்கிறார்.

    இந்திய ஜனநாயகத்தை அழிப்பதற்கு சதி நடக்கிறது. காங்கிரஸ் கட்சி, அனைவரையும் ஒன்றிணைப்பதற்காக உழைக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த மாநாட்டில், கட்சியின் காரியக்கமிட்டியில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், இளைஞர்கள், சிறுபான்மையினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஏற்ற வகையில் கட்சியின் சட்ட திட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டது.

    இந்த திருத்தத்தின்படி காங்கிரஸ் காரியக்கமிட்டியில் கட்சியின் முன்னாள் பிரதமர்கள், முன்னாள் தலைவர்கள் இடம் பெறுவார்கள்.

    காங்கிரஸ் காரியக்கமிட்டி உறுப்பினர்கள் எண்ணிக்கை 25-ல் இருந்து 35 ஆக உயர்த்தப்படுகிறது.

    இப்போது முதல் கட்சியில் டிஜிட்டல் வடிவில் உறுப்பினர் சேர்க்கையும், பதிவேடுகளும் இருக்கும்.

    ×