என் மலர்
இந்தியா

கட்சி அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 50 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்: கார்கே வலியுறுத்தல்
- காங்கிரஸ் அமைப்பில் மாவட்ட தலைவர் பதவி மிகவும் முக்கியமானது.
- நான் அமைச்சராக பணியாற்றிக் கொண்டே மாவட்ட தலைவரானேன்.
காங்கிரஸ் கட்சியின் அமைப்புகள் கட்டமைப்பில் பெண்களுக்கு 50 சதவீதம் என்ற வகையில் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என கட்சி தலைவர்களிடம் பேசும்போது, அக்கட்சியின் தேசிய தலைவர் கார்கே வலியுறுத்தினார்.
ஜார்க்கண்ட், ஒடிசா, பஞ்சா் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் நியமனம் தொடர்பாக கார்கே தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர்கள், பொறுப்பாளர்கள், மூத்த தலைவர்கள் கலந்து கொண்டர்.
இது தொடர்பாக கார்கே வெளியிட்டு எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் அமைப்பில் மாவட்ட தலைவர் பதவி மிகவும் முக்கியமானது. லால் பகதூர் சாஸ்திரி, கோவிந்த் வல்லாப் பண்ட், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குண்டு ராவ், அமைச்சர் தரம் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மாவட்ட தலைவர் பதவியை வகித்தவர்கள். நான் அமைச்சராக பணியாற்றிக் கொண்டே மாவட்ட தலைவரானேன்.
கட்சியின் அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 50 சதவீதம் என்ற வகையில் நாம் உயர்த்த வேண்டும். அவர்களுக்கு பொறுப்புகளை கொடுத்து, முக்கிய கட்டமைப்புக்குள் கொண்டு வர வேண்டும்.
பீகாரில், ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி வாக்காளர் அதிகாரம் என்பதன் மூலம் முழு ஆதரவை மக்களிடம் இருந்து பெற்று வருகின்றன. நாட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில், நம்முடைய போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சொல்ல வேண்டும்.
இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.






