என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய பிரதேசத்தில் நாளை விவசாயிகளுடன் கார்கே, ராகுல் காந்தி உரையாடல்
    X

    மத்திய பிரதேசத்தில் நாளை விவசாயிகளுடன் கார்கே, ராகுல் காந்தி உரையாடல்

    • இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என காங்கிரஸ் குற்றச்சாட்டு.
    • இது தொடர்பாக மத்திய பிரதேசத்தில் நாளை ராகுல் காந்தி, கார்கே விவசாயிகளுடன் உரையாட இருக்கிறார்.

    மத்திய பிரதேச மாநிலத்தில் நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் கிஷான் மகா சவுபால் என்ற மிகப்பெரிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    இந்த விழாவில் இந்தியா- பாகிஸ்தான் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து தேசிய தலைவர் கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் விவசாயிகளிடம் விளக்கமாக எடுத்துக்கூற இருக்கிறார்கள். மேலும், விவசாயிகளுடன் குறைகளை கேட்டு அறிந்து கொள்ள இருக்கிறார்கள்.

    இந்த நிகழ்ச்சி ஜவஹார் சவுக் என்ற இடத்தில் நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர் ஜித்து பத்வாரி கூறுயைில் "இந்திய விவசாயிகளின் கழுத்தில் வாளை வைத்துக் கொண்டு அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டுள்ளார்" என்றார்.

    மேலும், இந்த விழாவில் விவசாயிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    Next Story
    ×