என் மலர்
நீங்கள் தேடியது "illicit liquor"

ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் மேற்கு தொடர்ச்சிமலை அடிவார பகுதியில் கள்ளச்சாராயம் தயாரித்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின்பேரில் ராஜபாளையம் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் ஆலோசனைப்படி சேத்தூர் புறக்காவல் போலீசார் மேற்கு தொடர்ச்சிமலை பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் போலீசார் மலைப்பகுதியில் உள்ள சின்னப்புல்பட்டி பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இயைடுத்து போலீசார் கள்ளச்சாராயம் காய்ச்சிய கிருஷ்ணன்கோவில் கணபதிசுந்தரநாச்சியார் புரத்தைச் சேர்ந்த பொன் இருளப்பன் (வயது30) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
சீர்காழி:
நாகை மாவட்டம், சீர்காழி அருகே வேட்டங்குடி மற்றும் வேட்டங்குடி ஊராட்சியை சேர்ந்த வாடி, வேம்படி, இருவக்கொல்லை ஆகிய கிராமங்களில் இரவும் பகலும் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மதுபிரியர்கள் வெளியூர்களில் இருந்து வந்து மதுபாட்டில்களை வாங்கி வருகின்றனர்.
மதுபாட்டில்கள் முக்கிய பொது இடங்களான பள்ளி, மற்றும் ஆரம்ப சுகாதாரநிலைய கட்டிடம் உள்ளிட்ட இடங்களில் விற்கப்படுவதால் ஊர் பொதுமக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.
அப்பகுதியில் விற்கப்படும் மதுபாட்டில்கள் போலி மதுபாட்டில்கள் என்று கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதனை கண்டித்து வேட்டங்குடி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் சாலையின் குறுக்கே மதுபாட்டில்கள் மற்றும் கருப்பு துணி ஆகியவைகளை தோரணமாக கட்டி தொங்கவிட்டு பொதுமக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுப்பாக்கம் பகுதியில் கள்ள சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதாக விருத்தாச்சலம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் மணமல்லிக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீசார் விருத்தாச்சலம் அருகே உள்ள சிறுப்பாக்கம் அடுத்த வடபாதி ஏரிக்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு காரில் கள்ளச்சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்த வட பாதியை சேர்ந்த சரத்குமார் (வயது 28). திண்டிவனம் அடுத்த ஓங்கூர் கிராமத்தை சேர்ந்த முரளி(27) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 550 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் மணமல்லி கூறும் போது, திண்டிவனத்தை சேர்ந்த முரளி, அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரிடம் எரிசாராயம் வாங்கி அதனை சரத்குமார் என்பவர் மூலம் கடத்திச் சென்று சிறுபாக்கம் பகுதியில் விற்பனை செய்து வந்தனர்.
இதுகுறித்து வந்த தகவலின் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 150 லிட்டர் சாராயத்துடன் ஒரு காரையும், 2 வாலிபர்களையும் கைது செய்தோம். அதில் சரத்குமார் என்பவர் தப்பி ஓட்டம் பிடித்தார். அவரைத் தேடி வந்தோம்.
இந்நிலையில் ஏழுமலையை போலீஸார் கைது செய்து விட்டதால் தற்போது காஞ்சிபுரம் மலைப்பகுதியிலிருந்து கள்ளச்சாராயத்தை கடத்தி வந்து சரத்குமாரும், முரளியும் சிறுபாக்கம் பகுதியில் விற்பனை செய்து வந்தனர். அவர்களை தற்போது கைது செய்து 550 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வாறு தெரிவித்தார். பகுதியில் கள்ள சாராயம் மற்றும் எரிசாராயம் விற்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை முழுமையாகத் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
மலேசியாவில் மதுபானங்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக வீடுகளில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் பிரபலமாக உள்ளது.
ஆசிய நாடுகளில் இருந்து அங்கு சென்று குடியேறி உள்ள தொழிலாளர்கள் வீடுகளில் தயாரிக்கப்படும் சாராயத்தை குடிக்கின்றனர்.
இந்நிலையில், தலைநகர் கோலாலம்பூர் மற்றும் செலங்கோர் மாகாணத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சாராயம் குடித்தவர்களில் சுமார் 57 பேர் மயங்கி சரிந்தனர். மெத்தனால் கொண்டு தயாரிக்கப்படுகிற இந்த சாராயத்தில் விஷத்தன்மை கலந்து இருந்ததை அறியாமல் அவர்கள் குடித்து உள்ளனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் மலேசியர்கள். மற்றவர்கள் வங்காளதேசம், இந்தோனேசியா, மியான்மர், நேபாளம் போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அந்நாட்டு போலீசார் சோதனைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். விஷ சாராயம் குடித்து 21 பேர் பலியானது மலேசியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Malaysia #LiqourDeath