என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் விரைகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- கள்ளச்சாராயம் விற்றதாக கரியன் தாங்கல் பகுதியை சேர்ந்த அமாவாசை என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கள்ளச்சாராயம் விற்றதாக கரியன் தாங்கல் பகுதியை சேர்ந்த அமாவாசை என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த், சித்தாமூர் சப்-இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரம், மதுராந்தகம் மதுவிலக்கு அமல்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகிய 3 பேரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கள்ளச்சாராய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் விழுப்புரம் செல்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் பொன்முடி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






